Archives
Monthly Archive
for: ‘September, 2006’

வனுவாத்

நானும் என்ர நண்பருமா உலகத்தை சுத்தி பாரத்துக்கொண்டு வரேக்க (பெரிசா யோசிக்காதங்கோ Google earth இல) நண்பர் கேட்டார் வனுவாத் இருக்கோ பாருங்கோ எண்டு. நான் சொன்னன் இதில நாடுகளை பாக்கலாம் ஆனா அங்க விக்கிற சாப்பாடுகளை பாக்கேலா எண்டு. அவர் சொன்னார் இல்லையில்லை என்னோட அந்த நாட்டுக்காரர் ஒருவர் படிச்சவர் எண்டு (இவர் சீனாவில படிச்சவர்). சுத்திக்கித்தி நாட்டைக் கண்டு பிடிச்சு கிட்டப்போனா பெரிசா சன நடமாட்டத்தை காணேல்ல. உடன விக்கிப்பீடியாக்கு ஓடிப்போய் பாத்தா ஆச்சரியம் …

Read More

நுட்பம் – 2006

கொழும்பு மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கிய மன்றத்தின் ஆண்டு மலராக நுட்பம் வெளிவந்திருக்கினறது. உபயம் நண்பன் கேதாரசர்மா (புடவை முகாமைத்துவ மாணவன் – மொரட்டுவ பல்கலைக்கழகம்) ஆனால் நான் வாசிப்பதற்கு மிகவும் சிரமப்படவேண்டியிருந்தது வேறு விடயம். வெளியீட்டு விழாவிற்கு போக முடியாத குறை வாசித்த போது இன்னும் அதிகமாகியது. தமிழருவியும் சடகோபனும் தங்கள் பிரிவுகளை ஆய்வுசெய்ததாக அறியக்கிடைத்தது.
மலைபோல்
இடர்வரினும்
தலைநிமிர்ந்து நிற்போம்
நாங்களும் – எங்கள் கலைகளும்
எம் பனைகளைப்போலவே..
உள்அட்டையில் பனையின் அழகிய படத்தின்கீழே காணப்பட்ட அழகிய …

Read More

புத்தகங்கள்…. புத்தகங்கள்……

கொழும்பு புத்தகச் சந்தைக்கு போனனான் எண்டு சொன்னனான் எல்லோ. அங்க வாங்கின புத்தகங்களின்ர விபரத்தை தந்திருக்கிறன். இதை வாசிச்சுப்போட்டு நான் என்ன விதமான வாசகன் எண்டு நீங்கள் யாராவது சொன்னால் குலுக்கல் முறையில முதல் பரிசு பெறுகிற ஆளுக்கு ஒரு இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான அப்பிள் நோட்புக் கணனியின்ர படம் பரிசாக தரப்படும்.

உ. வே. சா – பன்முக ஆளுமையின் பேருருவம் தொகுப்பு பெருமாள் முருகன் – காலச்சுவடு பதிப்பகம்
காலங்கள் வாழ்த்தும் 300 ஈழத்துக் …

Read More

புத்தகச்சந்தை

கொழும்பு புத்தகச் சந்தையும் கண்காட்சியும் இந்த மாதம் 16ம் திகதி தொடக்கம் ஒரு கிழமை மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது. வழமைபோல ஒரு தொகை புத்தகங்கள் வாங்கின சந்தோசம். இருந்தாலும் ஒரு கவலை கனக்க புத்தகம் வாங்கமுடியாமப் போச்சு. வேறென்ன காசு காணது. அதைவிடுவம். பிறகு ஆறுதலா வாங்கின புத்தகங்களின்ர விபரம் தாறன். முதல்ல புத்தகச்சந்தை விபரம். 440 புத்தகக் கடைகள். குறைஞ்சது 1 மில்லியன் புத்தகத் தலைப்புகள். போன வருசம் 3 மில்லியன் புத்தகம் வித்ததாயும் …

Read More

என்ன அலட்டலாம்…….

இந்தப்பதிவுத்தளத்தை தொடங்குறதுக்கு கனகாலம் முன்னமே “மக்றோமீடியா பிளாஸ்” பற்றி ஒரு பதிவுத்தளம் தொடங்கவேணும் எண்டு நினைச்சிருந்தனான். பிறகு கொஞ்சக்காலம் செல்ல என்ர புகைப்படங்களைச் சேர்த்து ஒரு பதிவுத்தளத்துக்கும் அத்திவாரம் போட்டனான். இருந்தாலும் அதுகும் யோசிச்சதோட போயிற்றுது. பிறகு நான் வாசிக்கிற புத்தகங்களைபப்பற்றி ஏதாவது எங்கயாவது எழுதுவம் எண்டும் யோசிச்சன். அதுகும் நல்ல யோசனையாவே போயிட்டுது. இருந்தாலும் மற்றதுகள் மாதிரியே இதுகும் “வியூச்சர் பிளான்” எண்டு விட்டுட்டன். சரி இப்ப ஏதோ ஒரு இடம் கிடைச்சிருக்கு பாப்பம் எல்லாத்தையும் …

Read More
Page 1 of 212»

முன்னம் அலட்டியது