Archive for கார்த்திகை, 2006

உங்கள் குடிலுக்கு மணிக்கூடு

நான் பலருடைய பதிவுகளுக்கு செல்லும்போது கரையிலிருக்கின்ற தொடுப்புகளை அவதானிப்பது வழக்கம். இப்படிப் பார்க்கின்ற போது பலருடைய பதிவுகளில் அடொப் பிளாஸ்(Adobe Flash) மென்பொருளால் செய்யப்பட்ட ஒரு மணிக்கூட்டினை அவதானித்திருக்கிறேன். ஆனால் அதன்மேல் சுட்டியை கொண்டு செல்லும்போத அது ஒரு விளம்பரமாக தொழிற்படுவதை அவதானித்திருக்கின்றேன்.

இதன் விளைவுதான் இந்த கம்பி மணிக்கூடு. கீழ்வரும் நிரலை உங்கள் குடிலின் தேவையான இடத்தி்ல் ஒட்டுவதன் மூலம் ஒரு அழகிய மணிக்கூடினை பெற முடியும். உங்கள் பின்புல நிறம் என்னவாக இருப்பினும் அதனையே இம்மணிக்கூடும் பயன்படுத்தும். (I set a transparent parameter below the quality parameter). உங்களுக்கு தேவையான உயர அகலத்தை வேண்டியளவு செப்பம் செய்து கொள்ளுங்கள். (Change the width and height in both places)

<object classid=”clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000″ codebase=”http://fpdownload.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,0,0 ” width=”200″ height=”200″ id=”a_clock” align=”middle”>
<param name=”movie” value=”http://www.aslibrary.org/images/a_clock.swf” />
<param name=”quality” value=”high” />
<param name=”wmode” value=”transparent”/>
<param name=”bgcolor” value=”#ffffff” />

</object>

இதனை பயன்படுத்துபவர்கள் தயவுசெய்து ஒரு பின்னூட்டம் போடுங்கள். பயன்படுத்தாவிட்டாலும் கூட ஒரு பின்னூட்டம் போடுங்கள். மாற்றங்கள் தேவையென்று நினைப்பவர்கள் அதைக்குறித்தும் பின்னூட்டம் போடுங்கள். வேறு புதிய கருவிகள் தேவையென்று நினைப்பவர்கள் பின்னூட்டமிடுங்கள் உருவாக்க முயற்சிக்கிறேன்.

26 கார்த்திகை, 2006

சூத்திரஞானம்

வால்மீகரின் சூத்திரஞானத்திலிருந்து 2ம் மற்றும் 3ம் பாடல்கள் உங்கள் பார்வைக்காக.

வந்ததுவும் போனதுவும் வாசி யாகும்
வானில் வரும் ரதிமதியும் வாசி யாகும்
சிந்தைதெளிந் திருப்பவனா ரவனே சித்தன்
செகமெலாஞ் சிவமென்றே யறிந்தோன் சித்தன்
நந்தியென்ற வாகனமே தூலதேகம்
நான்முகனே கண்மூக்குச் செவி நாக் காகும்
தந்திமுகன் சிவசத்தி திருவமூச் சாகும்
தந்தைதாய் ரவிமதியென் றறிந்து கொள்ளே
அறிந்துகொள்ளு பூரகமே சரியை மார்க்கம்
அடங்குகின்ற கும்பகமே கிரியை மார்க்கம்
பிரிந்துவரும் ரேசகமே யோக மார்க்கம்
பிசகாமல் நின்றதுவே ஞான மார்க்கம்
மறிந்துடலில் புகுகின்ற பிராண வாயு
மகத்தான சிவசத்தி அடங்கும் வீடு
சிறந்துமனத் தெளிவாகிச் சேர்ந்தோன் சித்தன்
சிவசிவா அவனவனென் றுரைக்கலாமே.

(பூரகம் – மூச்சு உள்வாங்கல், கும்பகம் – சுவாச பந்தனம், இரேசகம் – சுவாசத்தை விடல்)

26 கார்த்திகை, 2006

சிறையிலிருந்து ஒரு கடிதம்

அம்மா
நண்பர்கள் என்னைத் தேடி வந்து
கதவில் தட்டும்போதெல்லாம்
நீ வெம்பிக் கண்ணீர் மல்குதை
எண்ணி நான் வேதனைப்படுகிறேன்

ஆனால்
வாழ்க்கையின் சிறப்பு
என் சிறையில் பிறக்கிறதென்று
நான் நம்புகின்றேன் அம்மா
என்னை இறுதியில் சந்திக்க வருவது
ஒரு குருட்டு வெளவாலாய்
இருக்காதென்றும் நான் நம்புகின்றேன்
அது பகலாய்த்தான் இருக்கும்
அது பகலாய்த்தான் இருக்கும்.

(எம். ஏ. நுஃமானின் பாலஸ்தீனக் கவிதைகள் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது)

26 கார்த்திகை, 2006