Archive for வைகாசி, 2007

விக்கிபீடியா தேடுபொறி

Exalead தேடுபொறியானது தனது இணைய தேடுபொறியுடன் மேலதிகமாக இரண்டு தேடல் வசதிகளை இணைத்திருக்கின்றது. ஒன்று படங்களை தேடுதல் மற்றையது விக்கிபீடியாவில் தேடுதல்.

முதல் முறையாக ஒரு தேடுபொறியில் ஒரு தளத்தை மட்டும் தேடுவதற்கு ஒரு தேடுபொறியினை உருவாக்கி இருப்பது இதுதான் முதற்தடவை. நீங்களும் போய் ஏதேனும் தேடிப்பாருங்கள்.

6 வைகாசி, 2007

யப்பான் சிறுவர் தினம்

கூகிள் யப்பான், யப்பானின் சிறுவர் தினத்திற்காக கூகிள் யப்பான் பக்கத்தில் வெளியிட்ட சின்னத்தை பாருங்கள். யப்பானில் சிறுவர் தினம் மே 5 இல் வருகிறது. அப்படியே முன்னைய ஆண்டுகளில் வெளியிடப்பட்ட சின்னங்களையும் பாருங்கள்.

2007

2006


2005


2004


2003

6 வைகாசி, 2007

புதிய யாகூ அரட்டை

நீண்ட காலமாக இணையத்தில் முடிசூடா அரட்டை அரசனாக இருந்த யாகூவினை மெல்ல மெல்ல ஜிமெயிலின் அரட்டை மென்பொருள் வீழ்த்தத்தொடங்கியது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தது கூகிளின் அரட்டை மென்பொருள் பதிவிறக்க வேண்டிய கட்டாயம் இல்லாமல் இருந்ததும் அது தனது மின்னஞ்சலுடன் இணைந்து வேலை செய்ததும் என்பது யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இப்போது யாகூவும் தனது அரட்டை மென்பொருளின் இணைப்பதிப்பை வெளியிட்டிருக்கின்றது. போய்பார்த்துவிட்டு ஒரு பின்னூட்டம் போட்டு விடுங்கள்.

5 வைகாசி, 2007