Archives
Monthly Archive
for: ‘November, 2007’

Why I love Gmail

நான் முதல்முறையா மின்னஞ்சல் பாவிக்கத்தொடங்கினது 1999 இன்ர கடைசிப்பாதியிலதான். பாவிக்கத்தொடங்கினது எண்டதை விட கணக்கொண்டை உருவாக்கினது எண்டதுதான் உண்மை. முதலில Hotmail லில. பிறகு கொஞ்சக்காலம் போக Yahoo! அதைவிட வேகமா இருந்ததாலயும் Yahoo! அரட்டை மென்பொருள் மிகப்பிரபலமாகவும் தொடங்க அதில ஒரு கணக்கு தொடங்கினான்.
ஜிமெயில் அறிமுகமான காலத்தில கூகிள் மென்பொருட்கள் மேல ஒரு ஈர்ப்பு இருந்ததால (அந்த நேரத்தில மின்னஞ்சல் “பயன்படுத்த” தொடங்கீற்றன்) உடனேயே ஒரு மின்னஞ்சல் கணக்கு தொடங்கினாலும் பொதுவா பயன்படுத்தி வந்தது யாகூவைத்தான். …

Read More

ஐபோன் உச்சத்தில்…

2007ம் ஆண்டிற்கான “PC Magazine” சர்வேயில் 10 இற்கு 9.1 புள்ளிகள் பெற்று ஐபோன் (iPhone) முதலிடத்தை பெற்றுள்ளது. எந்த ஒரு வகையினை சார்ந்த கைப்பேசியும் கடந்த மூன்று ஆண்டுகளில் இப்படியான ஒரு புள்ளியினை பெற்றிருக்கவில்லை. ஐபோன் குறிப்பாக அனைவரும் எதிர்பார்த்த பாட்டு மற்றும் வீடியோ வசதிகளுக்கு 9.6 புள்ளிகளையும், பேச்சு தெளிவிற்கு 8.2 புள்ளியும் (இது சராசரியை விட அதிகமாகும்), கவரேஜ் இற்கு 8.2 புள்ளியும் பெற்றுள்ளது. பொதுவாக இந்த சர்வேயில் பங்குபற்றியவர்கள் அனைவரும் இந்த …

Read More

காரத்திகைத்தீபம் – யாழ்ப்பாணம்.

இண்டைக்கு கார்த்திகைத்தீபம். வழமையா யாழ்ப்பாணமே வெளிச்சக்காடாகிற ஒரு நிகழ்வு கார்த்திகைத்தீபம்தான். வழமையா வருசம் நிறைய வாற விசேடங்களுக்குள்ளேயே இண்டைவரைக்கும் எனக்கு பிடிச்சது கார்த்திகைதீபம்தான். ஏனென்ண்டா அண்டைக்குத்தான் இரவில வெளியால திரியலாம். வழமையான இரவு ஏழு மணிக்கு முதல் வீட்டுக்க வரவேணும் எண்டா அண்டைக்கு மட்டும் ஒம்பது மணி வரைக்கும் வரத்தேவையில்லை. (2002 வரைக்கும் கூடப்படிக்கிற பொம்பிளைப்பிள்ளையள் வீடுகளுக்கு எல்லாம் கூட்டமாய் போய் எங்கட வீர சாகசங்களை காட்டுறது, சில பிரச்சனை தந்த வாத்தியார் வீட்டு தீபத்துக்குள்ள உப்புபோடுறது …

Read More

குறிப்பேட்டிலிருந்து – அ. யேசுராசா

இண்டைக்கு ரவுணுக்கால மத்தியானம் போல நடந்து வரேக்க புத்தககடை ரவி அண்ணை மறிச்சு சொன்னார் புதுசா புத்தகங்கள் வந்திருக்கு வந்தொருக்கா பாருங்கோவன் எண்டு. ஏறத்தாள ஆறேழு மாசத்துக்கு பிறகு புத்தகங்கள் வந்திருக்கு. போன ஆவணிக்கு பிறகு ஒருக்கா வந்தது. அதுவும் ஒரு நூறு புத்தகம்தான் வரும். சரியெண்டு பின்னேரம் போல கடைக்குபோன ஒரு நாப்பது ஐம்பது உரப்பை நிரம்ப புத்தகங்கள் அப்பதான் கப்பலால வந்து இறங்கியிருக்கு. இ;ந்தமுறை பறவாயில்லை ஆனா விலைதான் என்னவெண்டு தெரியேல்ல. கப்பல்கூலியில இருந்து …

Read More

கூகிளுடன் AIM

கூகிள் நிறுவனம் ஜிரோக் இனை தனது மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலுடன் அறிமுகப்படுத்திய நாளிலிருந்து பெரியளவிலான எந்த விதமான மாற்றங்களும் இடம்பெறவில்லை. இருந்தாலும் இரண்டு வருடங்களுக்கு முன்னர் AOL நிறுவனத்தில் கூகிள் ஒரு பில்லியன் டொலர்களை முதலீடு செய்ததிலிருந்து ஜிரோக் இன் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
இப்போது அனேகமாக அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் கூகிள் நிறுவனம் AIM இனை தனது அரட்டை சேவையுடன் இணைக்கப்போகின்றது.
இதைவிட இரண்டு சுவாரசியமான இரண்டு தகவல்கள் என்னவென்றால் அப்பிள் நிறுவனத்தின் …

Read More

முன்னம் அலட்டியது