Flash பாவனையாளர்களுக்கு உதவி
Adobe Flash (முன்னர் Macromedia) மென்பொருள் இப்போது இணைய மற்றும் கைப்பேசி மென்பொருள்களை உருவாக்கும் ஒரு சாதனமாக வளர்ச்சியுற்றுள்ளமை அனைவரும் அறிந்தது. இந்த மென்பொருளின் வெளிவந்த இறுதிப்பதிப்பானது அதன் மொழியாக ActionScript 2.0 இனைக்கொண்டுள்ளமையும் அனைவரும் அறிந்ததே. இப்பொழுது Adobe Flash Player 9.0 உடன் ActionScript 3.0 வெளியிடப்பட்டு விட்டாலும் இன்னமும் அதிகளவான பாவனையில் உள்ளது AS 2.0 தான். (AS 3.0 இற்கும் AS 2.0 இற்கும் பெரிதளவான வெளிப்படையான மாற்றங்கள் இல்லை).
இந்த மொழியில் வேலை செய்யும் போது இந்த Cheat Sheet எப்போதும் எனக்கு உதவுவதுண்டு. உங்களுக்கும் உதவும் என்ற நம்பிக்கையில் இங்கு பகிர்கின்றேன். படத்தில் சொடுக்கி பூரணமான தாளினை பெற்றுக்கொள்ளுங்கள்.
குறிச்சொற்கள்: Adobe, Adobe Flash
எங்கையப்பு கனகாலம் சிலமனில்லை?
எங்கையப்பு கனகாலம் சிலமனில்லை?
என்ன இப்பிடி கேட்டிட்டியள் அண்ணை… யாழ்ப்பாணத்தில சில காலம் இணைய வசதிகள் வேலை செய்யேல்ல எண்டு உங்களுக்கு தெரியாதோ…
என்ன இப்பிடி கேட்டிட்டியள் அண்ணை… யாழ்ப்பாணத்தில சில காலம் இணைய வசதிகள் வேலை செய்யேல்ல எண்டு உங்களுக்கு தெரியாதோ…