அடொபி

Adobe AIR இனி லினிக்ஸிலும்.

நீண்ட காலமாக Adobe Lab இல் மேம்படுத்தப்பட்டு வந்த Adobe AIR இன் லினிக்ஸ் பதிப்பு இப்போது பூரணப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதனை இங்கு சென்று தரவிறக்கி கொள்ளலாம்.

Adobe AIR

உத்தியோகபூர்வமாக இது Ubuntu< OpenSUSE, Fedora லினிக்ஸ் வெளியீடுகளுக்கென்றே வெளியிடப்பட்டிருந்தாலும் ஏனைய லினிக்ஸ் வெளியீடுகளிலும் இது தொழிற்படும்.

இதனை நிறுவிக்கொள்ள உங்கள் Terminal இனை திறந்து Adobe AIR கோப்பிருக்கும் இடத்திற்கு செல்லுங்கள். பின்னர்
sudo ./AdobeAIRInstaller.bin
என தட்டச்சிட்டு என்ரர் செய்யுங்கள். இது பயனளிக்காவிடின் இதற்கு முன்னர்
sudo chmod 755 AdobeAIRInstaller.bin
என தட்டச்சிட்டு கொள்ளுங்கள்.

19 மார்கழி, 2008

ActionScript 3.0 உதவிக் கையேடு

நீங்கள் அடொபி நிறுவனத்தின் பிளாஸ் மற்றும் பிளெக்ஸ் மென்பொருள்களில் ஆர்வம் உள்ளவராக அல்லது, இணைய மென்பொருள்கள் Adobe AIR இனை பயன்படுத்தி மென்பொருட்களை உருவாக்குபவராக இருந்தால் இந்த உதவிக்கையேடு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இங்கே சென்று தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

29 ஐப்பசி, 2008

Microsoft released Silverlight 2.0

அடொபி நிறுவனத்தின் பிளாஸ் பிளேயருக்கு போட்டியாக அறிமுகப்படுத்தபட்ட silverlight இனது பதிப்பு இரண்டை மைக்ரோசொவ்ற் நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது. இணைய மென்பொருட்களை உருவாக்க பயன்படும் இது இன்றுவரை பிளாஸ் பிளேயருடன் போட்டியிட முடியாவிட்டாலும் தொடர்ச்சியான புதிய வசதிகளின் வருகை இதன் பயனாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்.

இந்த பதிப்பு இரண்டில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய வசதிகளாவன

  • .NET Framework support with a rich base class library.
  • Powerful built-in controls including DataGrid, ListBox, Slider, ScrollViewer, Calendar controls etc.
  • Advanced skinning and templating support.
  • Deep zoom with ultrahigh resolution imagery.
  • Comprehensive networking support with Out-of-the-box support for calling REST, WS*/SOAP, POX, RSS and standard HTTP services.
  • Expanded .NET Framework programming languages support, including Visual Basic, C#, JavaScript, IronPython and IronRuby.
  • Advanced content protection with Silverlight DRM, powered by PlayReady
  • Improved server scalability and expanded advertiser support.
  • Vibrant partner ecosystem.
  • Cross-platform and cross-browser support.

14 ஐப்பசி, 2008