Mac OS X உம் யுனிகோட் தமிழும்.
மக் இயங்கு தளத்தில் யுனிகோட் தமிழ் என்பதில் பலருக்கு சந்தேகம் இருப்பதாக ரவிசங்கர் பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்த இயங்குதளத்திற்கு நான் புதியவன் என்றாலும் நான் செய்த முதல் வேலையே தமிழை (யுனிகோட்டினை) இலகுவாக பயன்படுத்த முடியுமா என்று சோதித்தமைதான். நான் முன்னரே குறிப்பிட்டபடி ரைகர் பதிப்புடன் (10.4) தமிழ்99 விசைப்பலகை இணைக்கப்பட்டே வருகின்றது. அத்துடன் அஞ்சல் விசைப்பலகையும் இணைக்கப்பட்டுள்ளது. இதனை எவ்வாறு பயன்படுத்துவது என பார்ப்போம்.
அப்பிள் பொத்தானை அழுத்தி System preference இற்கு வாருங்கள்.
அங்கு Internationals இனை அழுத்துங்கள். அங்கு Input Menu இல் அஞ்சல் மற்றும் தமிழ் 99 இரண்டினையும் அல்லது உங்களுக்கு தேவையானதை மட்டும் தேர்வு செய்து விடுங்கள்.
பிறகு உங்களுடைய System tray இல் வேண்டிய பொழுது வேண்டிய உள்ளீட்டு முறையினை தேர்வு செய்து கொள்ளுங்கள். அவ்வளவுதான்.
சரி உங்களுக்கு இரண்டுமே பிடிக்கவில்லை பாமினி (நான் பாமினி) முறை அல்லது தமிங்கலம் அல்லது உங்கள் தனிப்பட்ட விசைப்பலகை முறைதான் வேண்டும் என்றால் என்ன செய்வது?? ஒரு பிரச்சனையும் இல்லை.
Ukelele மென்பொருளை தரவிறக்கிக்கொள்ளுங்கள் (இலவசம் – கூகிளின் தேடினால் எங்கு பெறலாம் என்று தேரியும்) உங்களுக்கு விரும்பிய விசைப்பலகை முறைமையினை இலகுவாக உருவாக்கி கொள்ள இது உதவும். பின்னர் நீங்கள் உருவாக்கிய விசைப்பலகையை நிறுவிக்கொண்டால் அஞ்சல் மற்றும் தமிழ் 99 ளுலளவநஅ வசயல இல் வருவது போல உங்கள் விசைப்பலகையையும் விரும்பியபோது தெரிவுசெய்து பயன்படுத்திக்கொள்ள முடியும். (மேலே உள்ள படம் நான் பாமினிக்காக விசைப்பலகையை உருவாக்கியபோது எடுக்கப்பட்ட திரைவெட்டு)
மக் புக்கில்.. இதனை பயன்படுத்த என்ன செய்யணும்.. ? விசைபலகையை அனுப்ப ஏலுமா..?
எனக்கும் புளீஸ்ஸ்ஸ்…. (விசைப்பலகை)