இந்த வார இணையம் – பெப் 17

ஜூம்லா பதிப்பு 2.5 வெளியானது

இணையத்தளங்களை உருவாக்க பயன்படுகின்ற திறமூல CMS களில் பிரபலமான ஒன்று ஜூம்லா ஆகும். வேர்ட்பிரஸிற்று அடுத்த படியாக அதிக பாவனையாளர்களை கொண்ட இந்த CMS, Mambo திற மூல நிரலில் இருந்து 2005ம் ஆண்டளவில் உருவாக்கப்பட்டது. 2011ம் ஆரம்பத்தில் ஒவ்வொரு ஆறுமாதத்திற்கும் ஒரு பதிப்பினை வெளியிடுவது என முடிவெடுக்கப்பட்ட பின்னர் வெளியிடப்பட்டுள்ள இரண்டாவது பதிப்பு இதுவாகும்.

பல புதிய வசதிகள் சேர்க்கப்பட்டிருந்தாலும் குறிப்பிடத்தக்க வசதிகளாவன

  • பல தரவுத்தளங்களை பயன்படுத்த முடிதல். இப்பதிப்பிற்கு முன்னர் ஜூம்லாவினை தனியே mySql தரவுத்தளத்துடன் மட்டுமே பயன்படுத்த முடியும். இப்பொழுது மேலதிகமாக MsSql இனையும் பயன்படுத்த முடியும்.
  • நீட்சிகள் மற்றும் வார்ப்புருக்களின் மேம்படுத்தப்பட்ட பதிப்புக்கள் தொடர்பிலான தன்னியக்க அறிவிப்பு முறை.
  • மேம்படுத்தப்பட்ட தேடுபொறி.

மேலதிக வசதிகள் தொடர்பாய் அறிந்து கொள்ள : http://joom.la/25features

நிறங்களை தேர்ந்தெடுக்க மென்பொருள்

இணையத்தளங்களை வடிவமைப்பவர்களுக்கு, வேறெங்காவதிருந்து அடிக்கடி நிறங்களின் குறியீடுகளை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை இருக்கும். நீங்கள் ஒரு வின்டோஸ் பாவனையாளர் எனின், உங்களுக்கு மிகவும் பயனளிக்க கூடிய இலவச மென்பொருள் Pixel picker ஆகும். உங்களுக்கு விரும்பிய நிறங்களை இலகுவாய் தேர்ந்தெடுக்கவும், விரும்பிய குறியீட்டு முறையில் அதனை பெற்றுக்கொள்ளவும் இம்மென்பொருள் பெரிதும் உதவும்.

தரவிறக்க : http://plastiliq.com/pixel-picker

CSS sprite களை உருவாக்க GLUE

இணையத்தளங்கள் வடிவமைப்பவர்கள் இணைய உலாவியின் வேண்டுகைகளின் எண்ணிக்கையினை குறைப்பதற்காக CSS Sprites இனை பயனபடுத்துவது வழமை. பல படங்களை ஒன்றிணைத்து ஒரே படமாக பயன்படுத்துவதனையே இவ்வாறு கூறுவார்கள். படங்களை ஒன்றிணைத்து அதற்கான CSS குறிகளை எழுதிக்கொள்ளுவதற்கு உங்களுக்கு அதிக நேரம் எடுக்கின்றது என்றால், அதற்கான தீர்வுதான் இந்த GLUE. இதனை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் படங்கள் இலகுவாய் ஒன்றிணைக்கப்படுவதோடு உங்களுக்கான CSS கோப்பும் எழுதித் தரப்பட்டு விடும்.

மேலும் தகவல்களுக்கும், தரவிறக்கவும் : http://glue.readthedocs.org/en/latest/index.html

இவ்வார இணையத் தளம்

நீங்கள் வாசிக்கின்றவற்றை மற்றவர்களுடன் ஒழுங்கு படுத்தி வைக்கவும், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் உதவும் இணையத்தளம் Pinterest.

மேலதிக தகவல்களுக்கு: http://pinterest.com

குறிச்சொற்கள்:

பின்னூட்டங்களில்லை