வேர்ட்பிரசும்(wordpress) தமிழும்.

நான் எனது புதிய இணையமான aslibrary.org இல் வேர்ட்பிரஸ் (wordpress) இனை பயன்படுத்தி வருகின்றேன். இப்போது அதனது தமிழ் பதிப்பினையும் ஆரம்பிக்க ஆர்வமாக உள்ளேன் (பின்னூட்டங்களால் வந்த வினை). இதற்கு வேர்ட்பிரஸ் இணையத்தளத்தில் அதன் தமிழ் பதிப்பை தேடிய போது எனக்கு அது கிடைக்கவில்லை. இதில் ஆச்சரியம் என்னவெனில் இது பல்வேறு மொழிகளில் கிடைப்பது. ஒரு தமிழ் மொழி பேசுபர்கூட இவ்வளவு காலமும் இதில் ஆர்வம் கொள்ளவில்லை என்பது (என்னையும் சேர்த்து). சிலவேளைகளில் மொழிபெயர்ப்பு செய்தவர்கள் அதனை அவர்களது இணையத்தில் இணைக்காமல் இருக்கவும் கூடும்.

இதனை மொழிபெயர்ப்பு செய்ய முன்னர் உங்கள் எவரிடமாவது அதன் தமிழ் பதிப்பு இருந்தால் தயவு செய்து எனக்கு கொடுத்துதவுமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன். அல்லது அதனை பெறக்கூடிய இணைய முகவரிகள் ஏதாவது இருந்தால் தந்துதவவும்.

குறிச்சொற்கள்: , ,

2 பின்னூட்டங்கள்

  1. ரவிசங்கர் சொல்லுகின்றார்: - reply

    பகீ, wordpress தமிழாக்க வேலை முறைப்படியே நடந்து வருகிறது. நீங்களும் இணைஞ்சுக்கலாம். ஏற்கனவே, மொழி பெயர்க்கப்பட்ட po கோப்புகள் அங்க கிடைக்கும். பார்க்க –

    http://blog.ravidreams.net/?p=273

  2. பகீ சொல்லுகின்றார்: - reply

    ரவிசங்கர் வாங்க. தகவலுக்கு மிக்க நன்றி