ஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு
பரிமளம் சுந்தர் அவர்களின் முனைவர் பட்டத்திற்கான ஆய்வாகச்செய்யப்பட்ட இந்த ஒப்பாய்வு நூலுருப்பெற்றிருக்கின்றது (கரோன் – நீரோன் பதிப்பகம் புரட்டாதி 2005). நூலை வாசிக்கும் போது நூலாசிரியர் இது சம்பந்தமாய் ஆய்வு செய்தார் என்பதைவிட தவம் செய்தார் என்பது தகுமெனலாம்.
ஆறு தலைப்புகளாக ஆய்வு வகைப்படுத்தப்பட்டிருக்கின்றது.
ஜப்பானிய ஹைக்கூவின் தோற்றமும் வளர்ச்சியும்.
தமிழில் ஹைக்கூவின் வரவும் வளர்ச்சியும்
ஜப்பானிய ஹைக்கூ கவிதைகள்
தமிழில் ஹைக்கூ கவிதைகள்
ஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஒப்பீடு
முடிவுகள்.
நல்ல ஹைகூசளை அடையாளம் காண முடிகின்றது. உதாரணத்துக்கு சில
இரவெல்லாம்
உன் நினைவுதான்
கொசுக்கள்
ஐயோ இருட்டிவிட்டதே
என் செம்மறி ஆட்டை பார்த்தீர்களா
விடிந்தால் தீபாவளி.
மேலும் இந்நூல் இரு மொழி கவிதைகளின் உள்ளடக்கம் உத்திகள் வேறுபாடுகள் பற்றியெல்லாம் பேசிச்செல்கிறது. முரண் உத்திகள் பற்றி தனி விளக்கம். ஹைக்கூ எழுத விரும்பகிறவர்களுக்கு நல்ல விளக்காமாய் இருக்கும் என நினைக்கின்றேன்.
நூலாசிரியர் பெண் என்பதால் நூலின் பல இடங்களிலும் பெண்மை தொட்டுச் செல்கிறது. தவிர்த்திருந்தால் நல்லது போல் தெரிகின்றது. உதாரணத்திற்கு
Though I have no love
I too rejoice
The change of clothes
எனக்கொரு காதலனும் இல்லை
ஆனாலும் நான் மகிழ்ந்திருக்கிறேன்
ஆடைமாற்றம்
யப்பானிய ஆடைமாற்ற திருவிழா பற்றிய ஹைக்கூ.. இங்கு காதலனுக்கு பதில் காதல் என மொழிபெயர்த்திருந்தால் சிறப்பாயிருக்கும் என்பது என் எண்ணம்.
//யப்பானிய ஆடைமாற்ற திருவிழா பற்றிய ஹைக்கூ.//
இந்தக் குறிப்பு இல்லாமல் போயிருந்தால்.
புரிதல் வேறு மாதிரி இருந்திருக்கும்.
பதிப்பகம் அல்லது புத்தகம் கிடைக்குமிடம் பற்றி தகவல் கிடைக்குமா?
அவுஸ்திரேலியாவில் எங்கு கிடைக்கும் என்று எனக்குத் தெரியாது. ஈழத்தில் எங்குவதில் பிரச்சனை ஏதும் இல்லை. வாங்க முடியவில்லை என்றால் அறியத் தாருங்கள். ஒன்று வாங்கி அனுப்பி வைக்கின்றேன். அது சரி வேறு எப்படி புரிந்திருக்கும்?
nandru
ஐயோ இருட்டிவிட்டதே
என் செம்மறி ஆட்டை பார்த்தீர்களா
விடிந்தால் தீபாவளி.
this is my haikoo. Not Japanese.
it was pulished in my book “sigarangalai nokkiya siragadippugal’ in 1991.
it was laso publised in Kumudham same year.