தொடர்ச்சியான பயணங்கள் மற்றும் வேலைப்பளுவிற்கு மத்தியில், இலங்கையின் இரண்டாவது தமிழ் வலைப்பதிவர் சந்திப்புக்கு செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அனேகமாக தினமும் வலைப்பதிவுகளினூடாக சந்திக்கின்ற நண்பர்களை நேரிலே காண்கின்ற வாயப்பு கிடைப்பது மிக அரிது. இந்த வலைப்பதிவர் சந்திப்பை ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றிகள்.
கடந்தமுறையை விட ஒழுங்குபடுத்தல் சிறப்பாக இருந்ததாக எனது எண்ணம். ஒன்றுகூடலுக்கு வந்த அனைவரும் எதிர்பார்ப்போடு வந்திருந்தது இன்னமும் விசேடம். கலந்துரையாடல்களுக்கான நேரம் போதாதிருந்த போதிலும் பலர் ஆர்வமுடன் கலந்துகொண்டது மிக மகிழ்ச்சியாகவும் பங்குபெறத்தூண்டியதாயும் இருந்தது. …
வலைப்பதிவர் சந்திப்பு – 2
இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு – ஒரு பிந்திய குறிப்பு
இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு முடிந்து நீண்ட நாட்களுக்கு பிறகே எனக்கு இதனை எழுத நேரம் கிடைத்திருக்கிறது. ஆனால் வந்தியத்தேவன் எல்லோரும் நிச்சயம் எழுதுங்கள் என்று கேட்டதானால் இந்த பதிவு. இலவச இணையத்தளம் தொடர்பாக அடுத்த பதிவில் எழுதுகின்றேன்.
வலைப்பதிவர் சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டவுடனே கௌபாய் மதுவிடம் இதனை இணைய ஒளிபரப்பு செய்தால் என்னாலும் பங்குகொள்ள முடியும் என்று கேட்டிருந்தேன். உடனே அவர் அதற்கான ஏற்பாடுகளை செய்து இணையத்தில் ஒளிபரப்பு செய்திருந்தார். என்னால் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்று நேரடியாக கலந்து …
மீளவும் ஊரோடி, யாழ்ப்பாணம் மற்றும் பிற..
கடந்த நான்கு மாதமாக ஊரோடியின் பக்கமே வருவதை தவிர்க்கவேண்டிய சூழ்நிலையில் இருந்து வந்தேன். எழுதுவதற்கு முயற்சிக்கும் போதெல்லாம் கடந்தா நான்கு மாத துயரங்களும் துக்கங்களும் முந்திவந்து நின்றதால் அவற்றை எழுதுவதை தவிர்க்கும் முயற்சியாகவே அது இருந்தது.
ஊரோடி என்று மட்டுமல்ல கடந்த நான்குமாத காலம் குறிப்பிட்ட ஒரு சிந்தனை வேலை தவிர்ந்து மற்றையதனைத்தும் ஒரு செயற்பாடற்ற நிலையினை அடைந்திருந்தது. தொடர்ச்சியான இலங்கைக்குள்ளான பயணங்களும் யுத்த பூமியிலிந்து வரும் மக்களை தினம் தினம் சந்திக்க வேண்டிய கட்டாயமும், அவர்கள் …
யாழ்ப்பாணமும் சினிமாவும்…..
சினிமா பற்றி தொடர்பதிவு எழுத இறக்குவானை நிர்ஷன் என்னை கூப்பிட்டு இருக்கிறார். தமிழ் சினிமா பற்றி எழுத கூப்பிட்டதுக்கு நன்றி சொல்லுவன் எண்டு நினைச்சா கடைசிவரைக்கும் அது நடக்காது. இருந்தாலும் என்னால முடிஞ்சளவுக்கு என்ர அனுபவங்களை கீழ எழுதியிருக்கு பாருங்கோ..
எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்.
நான் நினைக்கிறன் 93 இல எண்டு எட்டு வயசு இருக்கும், கறண்ட எண்டாலே என்னெண்டு தெரியாத காலம் சிறீதர் தியேட்டரில ஜூராசிக் …
ஊரோடி – இரண்டு வருடம் – சாதனைகள் சோதனைகள்
சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் பொழுது போகாமல் சயந்தனின் சாரல் பதிவினை பார்த்து நானும் ஒன்று தொடங்கினால் என்ன என்று தொடங்கியதுதான் ஊரோடி. இந்த இரண்டு வருட காலத்தில் மாறமல் இருப்பது ஊரோடி எனக்கு இன்னமும் ஒரு பொழுது போக்கும் இடமாக இருப்பது மட்டும்தான். ஆனால் கொஞ்சம் வீரியமான பொழுது போக்காக அல்லது எனக்கு தெரிந்தவற்றை மற்றவர்களோடு இலகுவாக பகிர்ந்து கொள்ளுவதற்கான ஒரு பொழுது போக்கிடமாக ஊரோடி மாறியுள்ளது.
எதனையும் ஒரு தொடர்ச்சியாக செய்வதில் பூச்சியப்புள்ளியை எப்போதும் வாங்குகின்ற …

பின்னூட்டங்கள்