OORODI : : ஊரோடி » யாழ்ப்பாணம்

மீளவும் ஊரோடி, யாழ்ப்பாணம் மற்றும் பிற..
கடந்த நான்கு மாதமாக ஊரோடியின் பக்கமே வருவதை தவிர்க்கவேண்டிய சூழ்நிலையில் இருந்து வந்தேன். எழுதுவதற்கு முயற்சிக்கும் போதெல்லாம் கடந்தா நான்கு மாத துயரங்களும் துக்கங்களும் முந்திவந்து நின்றதால் அவற்றை எழுதுவதை தவிர்க்கும் முயற்சியாகவே அது இருந்தது.

ஊரோடி என்று மட்டுமல்ல கடந்த நான்குமாத காலம் குறிப்பிட்ட ஒரு சிந்தனை வேலை தவிர்ந்து மற்றையதனைத்தும் ஒரு செயற்பாடற்ற நிலையினை அடைந்திருந்தது. தொடர்ச்சியான இலங்கைக்குள்ளான பயணங்களும் யுத்த பூமியிலிந்து வரும் மக்களை தினம் தினம் சந்திக்க வேண்டிய கட்டாயமும், அவர்கள் எங்கள் மீது இற்க்கிவிடும் அவர்களின் துயரங்களினையும் துக்கங்களினையும் தாங்கவேண்டடியவர்களாயும் இந்த நான்குமாதங்களும் கடந்து போயிருக்கிறது. இன்னமும் இது தொடர்ந்தாலும், பழகிப்போய்விட்டது என்று சொல்ல வேண்டி இருக்கின்றது. (எங்களுக்கு எல்லாமே பழகிப்போயிருக்கிறது)

இப்போது ஊரோடியில் திரும்பவும் ஏதாவது அலட்டுவது என்று முடிவுடன் திரும்பி வந்திருக்கின்றேன். நிச்சயமாக கடந்து போன மாதங்கள் பற்றியதாக அது இருக்காது. எப்போதாவது சாத்தியப்படும் என்ற நிலை வரும்போது அவைபற்றி நிச்சயம் எழுதுவேன்.

பதிவர் சந்திப்புக்காய் ஏ-9 வீதியால் பயணம் செய்தபோது எடுத்த புகைப்படங்களை நிச்சயம் ஒரு நாள் தரவேற்றுவது என்ற யோசனையும் இருக்கின்றது. பாரப்போம். இடையிலே தடைப்பட்டிருந்த எனது இணையத்தூடான வேலையையும் இப்போது தொடரத்தொடங்கியிருக்கின்றேன். இப்போது மீளவும் அதிகம் வாசிக்க முடிகிறது. நல்ல புத்தகங்கள் கிடைப்பதுதான் அரிதாகி இருக்கிறது. (நல்ல புத்தகங்கள் இருந்தால் சொல்லுங்கள் – யாழ்ப்பாணத்தில் கிடைக்கவும் வேண்டும்.) பார்ப்போம்.

யாழ்ப்பாணம்.

பொருட்களின் விலை குறைந்திருக்கிறது, யாழப்பாண உற்பத்திகளின் விலை அதிகரித்திருக்கிறது. அதிவேக இணையம் வந்திருக்கிறது அத்தோடு வீதிக்கு வீதி நெற்கவேக்களுமாக. யாழ்ப்பாணத்துக்குள் அதிகம் இறக்குமதியாவது மதுபானம்தான் – அரச அதிபரின் கூற்று. தேர்தல் ஒன்று வந்துபோயிருக்கிறது யாருக்கும் தெரியாமல். யாழ்ப்பாணத்தை பற்றி தொடர்ந்து அதிகம் அலட்ட முயற்சிக்கிறேன்.

அடுத்த பதிவில் சந்திக்கும் வரை

அன்புடன்

ஊரோடி.

யாழ்ப்பாணமும் சினிமாவும்…..
சினிமா பற்றி தொடர்பதிவு எழுத இறக்குவானை நிர்ஷன் என்னை கூப்பிட்டு இருக்கிறார். தமிழ் சினிமா பற்றி எழுத கூப்பிட்டதுக்கு நன்றி சொல்லுவன் எண்டு நினைச்சா கடைசிவரைக்கும் அது நடக்காது. இருந்தாலும் என்னால முடிஞ்சளவுக்கு என்ர அனுபவங்களை கீழ எழுதியிருக்கு பாருங்கோ..

எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்.

நான் நினைக்கிறன் 93 இல எண்டு எட்டு வயசு இருக்கும், கறண்ட எண்டாலே என்னெண்டு தெரியாத காலம் சிறீதர் தியேட்டரில ஜூராசிக் பாக் படம் போடுகினம் எண்டு வீட்டுக்காறர் அனுப்பி வைச்சினம். (விடுதலைப்புலிகள் நடத்தின சிறீதர் தியேட்டர் மட்டும்தான் அப்ப யாழ்ப்பாணத்தில இருந்த தியேட்டர். பொதுவா இந்திய தமிழ் சினிமாக்களுக்கு அங்க இடம் இருக்கேல்ல, குறிப்பிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் மட்டும்தான் போடுவினம், அல்லது ஒளிவீச்சு அப்பிடி படங்கள்தான்) படம் எண்டா என்னெண்டு அப்பதான் தெரியும் எண்டு நினைக்கிறன். இரவு நேரம் போனதால தொடங்கி கொஞ்ச நேரத்திலேயே நித்திரையா போனன். அதுக்கு பிறகு பாத்த படம் எண்டா 96 தொடக்கத்தில யாழ்ப்பாணமே இடம்பெயர்ந்து இருக்கேக்க நாங்கள் இருந்த வீட்டுக்கு பின்வீட்ட ஜெனரேட்டர் வச்சு ஞாயிற்றுக்கிழமை பின்னேரம் கறுப்பு வெள்ளையா தூரதர்சன் படம் போடுவினம். இரண்டொரு படத்துக்கு போனது ஞாபகம் இருக்கு என்ன படம் எண்டது ஞாபகம் இல்லை. அதுக்கு பிறகு எங்க 98 களில கறண்ட வந்த பிறகு பாத்த படங்கள் தான். (அப்பதான் கறண்ட் எண்டா என்னெண்டு தெரியும்.)

கடைசியா அரங்கில் அமர்ந்து பார்த்த சினிமா?

போன மாசம் வேலை விசயமா கொழும்பில நிக்கேக்க பாத்த தாம்தூம் (பேர் மறந்துபோய் என்னோட சுட வந்த நண்பருக்கு போன்போட்டு பெயர் கண்டுபிடிச்சு எழுதி இருக்கு). சிவாஜி படம் யாழ்ப்பாணம் மனோகரா தியேட்டரில பாத்த பிறகு அரங்குக்கு போய் பார்த்த படம் இதுதான். வா வா நல்ல படம் நான் கூட்டிக்கொண்டு போறன் எண்டு கூட்டிக்கொண்டு போய் என்ர காசிலேயே ரிக்கற் வாங்கின நண்பன் ஜெயக்காந்துக்குதான் எல்லா பெருமையும்..

கடைசியா அரங்கில் அன்றி பார்த்த தமிழ்சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

தமிழ் சினிமாவில் தொடர்ச்சியா வரும் குப்பைகளுக்கு நடுவே எனக்கு பிடித்த படங்களை கண்டு பிடிப்பதில் உள்ள சிரமத்தால் தமிழ் படம் பார்ப்பதை அறவே தவிர்த்து வருபவன் என்பதால், அண்மையில் நினைவு தெரிந்து அரங்கின்றி பார்த்ததாக எந்த தமிழ் படமும் நினைவில் இல்லை.

மிகவும் தாக்கிய தமிழ் சினீமா?

உண்மை என்னெண்டா, எனக்கு இந்த கேள்வி சரியாக விளங்கேல்லை. ஆனா 1998 அல்லது 1999 இருக்கும் அப்பதான் கறண்ட் ஓரளவுக்கு யாழ்ப்பாணம் வரத்தொடங்கியிருந்துது எண்டு நினைக்கிறன். இரவில மட்டும் கறண்ட வரும். அப்ப சொந்தக்காரர் வீட்டை நிக்கேக்க பாத்த படம் சூரியப்பார்வை (படம் பாக்க தொடங்கின காலத்தில பாத்த படம் எண்ட படியா படத்தின்ர பெயர் இன்னமும் நினைவில இருக்குது). சண்டை, துவக்குச்சூடு எண்டு எல்லாம் சும்மா அந்த மாதிரி இருக்க, படம் நல்லா பிடிச்சுக்கொண்டுது. ஆனா கொஞ்ச வருசத்துக்கு முந்தி அது Leon Professional எண்ட படத்தை மிக மோசமா பிரதி பண்ணியிருந்தது தெரிய வந்துது. இந்த சம்பவமும் தமிழ் படம் பாக்கிறதை நிறுத்திற அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதால, மிகவும் தாக்கிய சம்பவம் எண்டு இதை சொல்லலாம்.

உங்களை மிகவும் தாக்கிய தமிழ்சினிமா – அரசியல் சம்பவம்?

??????????????? (அல்லது துயா மாதிரி கிகிகிகிகி)

உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா – தொழிநுட்ப சம்பவம்?

தமிழ்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

இப்ப யாழ்ப்பாணத்தில வாற பத்திரிகை எதிலயும் சினமா பற்றி வாறேல்ல. அதனால வாய்ப்பும் இல்லை வாசிக்க பெரிசா விருப்பமும் இல்லை.

தமிழ் சினிமா இசை?

பொதுவாக மிகவும் அமைதியான நாட்டுப்புற இசைகளை விரும்புவதால் பழைய சோகப்பாடல்கள் கொஞ்சம் கேட்பதுண்டு. இதைவிட பக்தி பாடல்கள் தான். (வேற தமிழ் பாட்டும் இருக்கு அது சினிமா பாட்டு இல்லை).

தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

இப்போது பார்க்கும் படங்கள் எல்லாமே வேற்றுமொழிப்படங்கள் தான். எனது சேகரிப்பிலேயே ஏறத்தாள 200 இற்கு மேற்பட்ட சிறந்த (என்னை பொறுத்தவரை) படங்கள் இருக்கின்றன. மிகவும் தாக்கிய படங்கள் என்று சொல்வதானால்

Notebook

Samsarya (உண்மையாவே பாதிச்சது கதைதான், அந்த இந்திய பெண் இல்லை)

Nostalghia

Paris je taime

Lord of War

Monty python and holy grail

proof

The Jar

Black

Enough

Turtles can fly

வித்தியாசமா தாக்கின படங்களும் இருக்கு. ஆங்கில தொலைக்காட்சி தொடர்களை வாங்கி பாக்கிறது வழமை எண்டுறதால சில காலங்களுக்கு முன்னர் அப்படி நினைச்சு ILSA தொகுப்பை கொழும்புக்கு போயிருக்கேக்க வாங்கிக்கொண்டு வந்து பாத்தது. (ILSA படங்கள் என்ன எண்டு தெரியோணும் எண்டா கூகிள் பண்ணி பாருங்க.)

இதைவிட முப்பரிமாண கார்ட்டுன் படங்களை விரும்பிப்பார்ப்பதுண்டு..

தமிழ் சினிமா உலகுடன் நேரடி தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்சினிமா மேம்பட அது உதவுமா?

யாழப்பாணத்தில இருக்கிறவனுக்கு ஒழுங்கா கொழும்போடயே தொடர்பு இல்லை. அதுக்க தமிழ் சினிமாவோடயோ????

தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஒண்டும் நினைக்கேல்ல. அனா இப்படி குப்பை இல்லாமல் நல்ல படங்கள் வரவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது. (இப்ப வாற படங்கள் அனேகமா ILSA படங்களுக்கு இணையா வருகுது.)

அடுத்த ஓராண்டு தமிழில் சினமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்ளுவோம். உங்களுக்கு எப்படி இருக்கும். தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்.

எனக்கு ஒரு மாதிரியும் இருக்காது. தமிழர்களுக்கும் பெரிசா ஒண்டும் ஆகாது எண்டுதான் நினைக்கிறன்.

இனி நான் யாரை கூப்பிடறது. பாத்தா அனேகமா எல்லருமே தொடர் பதிவு எழுதீட்டினம்.

அப்ப நான் கூப்பிடுறது

1. ரவி சங்கர்

2. நா – மதுவதனன்

3. நீங்கள் தான்.

வல்லிபுரத்தாழ்வார் – யாழ்ப்பாணம்
சிங்கை என்று யாழ்ப்பாணத்தரசர் காலத்தில் புகழ்பெற்றிருந்த பருத்தித்துறைப்பிரதேசத்தில் அலைகடலின் அருகே குடிகொண்டிருக்கின்ற வல்லிபுரத்தாழ்வார் திருத்தலத்தில் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. இன்று எட்டாம் திருவிழாவிற்கு போகின்ற பாக்கியம் கிட்டியது. அதிகாலையில் சென்றமையினால் சில புகைப்படங்ளை எடுக்க முடிந்நது.

ஊரோடி – இரண்டு வருடம் – சாதனைகள் சோதனைகள்
சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் பொழுது போகாமல் சயந்தனின் சாரல் பதிவினை பார்த்து நானும் ஒன்று தொடங்கினால் என்ன என்று தொடங்கியதுதான் ஊரோடி. இந்த இரண்டு வருட காலத்தில் மாறமல் இருப்பது ஊரோடி எனக்கு இன்னமும் ஒரு பொழுது போக்கும் இடமாக இருப்பது மட்டும்தான். ஆனால் கொஞ்சம் வீரியமான பொழுது போக்காக அல்லது எனக்கு தெரிந்தவற்றை மற்றவர்களோடு இலகுவாக பகிர்ந்து கொள்ளுவதற்கான ஒரு பொழுது போக்கிடமாக ஊரோடி மாறியுள்ளது.

எதனையும் ஒரு தொடர்ச்சியாக செய்வதில் பூச்சியப்புள்ளியை எப்போதும் வாங்குகின்ற எனக்கு, யுத்தத்தின் சன்னத்தம் எந்நேரமும் வெளித்தெரிய நிற்கும் யாழ்ப்பாணத்தில் இருந்து இரண்டு வருடகாலம் என்னால் முடிந்தளவு தொடர்ச்சியாக டயல் அப் இணைப்பூடாக வலைப்பதிய முடிந்ததோடு என்னால் முடிந்தளவு வலைப்பதிவர்களுக்கு தொழிநுட்பரீதியாக உதவமுடிந்தது நிச்சயமாக ஒரு சாதனைதான்.

இந்த இரண்டு வருட காலத்தில் எனது நண்பர்களிடையே ஊரோடி எனக்கு ஒரு வித்தியாசமான பெயரை ஏற்படுத்தி தந்திருக்கின்றது. எனது பெயர் தெரியாமலே ஊரோடி என்கின்ற பெயரூடாக உறவாடுகின்ற நிறைந்த இணையநண்பர்களை இந்த வலைப்பதிவு ஏற்படுத்தி தந்திருக்கின்றது. அத்தோடு புளொக்கரில் இருந்த ஊரோடியை சொந்த வீட்டுக்கு கொண்டுவந்து வலைப்பதிய தொடங்கிய பின்னர் அதுவே எனது இணைய வேலைகளுக்கு ஆரம்பமாக அமைந்து வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்திருக்கிறது. வலைப்பதிய ஊக்கியாக நின்ற சயந்தன், வலைப்பதிய வந்த காலத்தில் இருந்து இன்றுவரை தொடர்ந்து வலைப்பதிய வேண்டும் என்று பின்னூட்டங்கள் மூலமும் மின்னஞ்சல்கள் மூலமும் காலத்துக்கு காலம் ஊக்கப்படுத்திய ஈழத்து மற்றும் இந்திய இணைய நண்பர்கள், குறிப்பாக தொடக்க காலத்தில் மிகவும் ஊக்கப்படுத்திய யோகன் அண்ணா, மலைநாடான், மதி என்று நீளும் பட்டியல் (எல்லோரையும் குறிப்பிட தனி ஒரு பதிவு தேவை அதனால் மன்னிக்கவும்), என்னோடு எப்போதும் கூட இருந்து, ஊரோடி பற்றி சொல்லும் எனது பள்ளிக்கால நண்பர்கள் என்று நன்றி சொல்லவேண்டியவர்கள் ஏராளம் உள்ளார்கள். அத்தோடு என்னைப்பார்த்து வலைப்பதிய வந்தவர்கள் என்று சொல்லி ஊக்குப்படுத்தியவர்களும் உள்ளார்கள்.

வழமைபோல சோதனைகளும் ஏராளம். யாழப்பணத்தில் இருக்கின்ற டயல் அப் இணைப்பு தான் நினைக்கின்ற நேரம் மட்டுமே இணையத்தில் இணைய அனுமதிக்கும். சில நேரங்களில் வாரக்கணக்காக பேசாமல் இருந்து விடும். அப்போதெல்லாம் பேசாமல் ஊரோடியை விட்டுவிட்டு தினம் ஒரு படம் பார்க்கலாம் என்கின்ற எண்ணம்தான் எழுந்து வரும்.

அதைவிட மிக மோசமாக எல்லாம் தெரியும் என்கின்ற நினைப்பில் வேலைபார்த்து இந்த வருடம் பங்குனி மாதத்தில் ஊரோடியை வழங்கியை விட்டு பூரணமாக அழித்தபின்னர், பேசாமல் அப்படியே விட்டுவிடுவோம் என்கின்ற முடிவுக்கே வந்தபின்னர் நண்பர்களின் வற்புறுத்தலால் ஒரு மாதம் செலவழித்து மீண்டும் ஊரோடியை இணையத்துக்கு கொண்டு வரமுடிந்தது. ஆனால் துரதிஸ்டவசமாக ஏறத்தாள இரண்டாயிரம் பின்னூட்டங்கள் ஒரேயடியாக அழிந்து போயின.

மூன்றாவது வருட நிறைவை எழுத முடியுமா என்று இப்போதே சொல்லமுடியாத நிலை யாழ்ப்பாணத்தில் இப்போது. காலம் நேரம் எல்லாம் நல்லது செய்தால் வருடங்களானாலும் ஊரோடியை தொடர ஆசை.

அன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார்
இப்பதிவானது இரவிசங்கரின் பதிவில் பின்னூட்டமாக வரவேண்டியது. அளவு கருதி பதிவாக இட்டிருக்கிறேன். ஆங்கில சொற்களை தமிழாக்கும் போது விகுதியில் கவனிக்க வேண்டியது தொடர்பாக இரவிசங்கர் ஒரு பயனுள்ள பதிவினை  இட்டிருந்தார். அதில் அவர்,

counter, filter, reader போன்று -er இல் முடியும் ஆங்கிலச் சொற்களையும் இன்ன பல சொற்களையும் எண்ணுவான், வடிகட்டுவான், படிப்பான் என்று -ஆன் விகுதி போட்டு தமிழாக்கும் வழக்கம் பரவலாக இருக்கிறது. இதைத் தவிர்க்கலாம்.

* -er விகுதி எந்தப் பாலையும் குறிப்பதில்லை. -ஆன் விகுதி ஆண்பாலைச் சுட்டுகிறது. அனைத்து பாலருக்கும் பொதுவாக தமிழாக்குவது அவசியம்.

என்று எழுதியிருந்தார். அதற்கு பின்னூட்டமிட்டிருந்த இரா. செல்வகுமார்,

அன் விகுதி கொண்ட அஃறிணைக்கு நன்றாக அறிந்த வியாழன், கதிரவன் முதலியவற்றைக் கூறலாம். அரச மரத்தை அரசன் என்றும் கூறுவதுண்டு. நண்டுக்கு அலவன் என்று ஒரு பெயர் உண்டு. காதில் அணியும் தோட்டுக்கு கடுக்கன். கடப்பமரத்திற்கு அடப்பன் என்று ஒரு பெயர் உண்டு. ஏன் கடன், என்னும் சொல்லைக் கூடச் சொல்லலாம். கூரன் என்பது ஒருவகையான நெல்லுக்கும், ஒரு வகையான நாய்க்கும் பெயர் . கூழன் என்பது ஒரு பலாப்பழ வகை. தட்டான் என்பது தட்டாரப்பூச்சிக்கு (தும்பிக்கு) வழங்கும் பெயர். முயலுக்கு செவியன் என்று ஒரு பெயருண்டு. கடுவன் என்பது பூனை, நாய், குரங்கு ஆகியவற்றின் ஆண். விரியன் என்பது ஒரு பாம்பு கட்டுவிரியன், கண்ணாடி விரியன் என்று கேள்விப்பட்டிருக்கலாம். நண்டுக்கு அலவன் என்று ஒரு பெயர் உள்ளது போலவே களவன் என்றும் ஒரு பெயருண்டு. சுழல் காற்றுக்குச் சுழியன் என்று பெயர். என்று பற்பல சொர்கள் உண்டு.

ஆன் என்னும் விகுதிக்குத் தட்டான் (தட்டாரப்பூச்சி). பல்லாங்குழியில் பயன்படுத்தும் காய்களுக்கு அலவான் என்று பெயர் (அலவுதல் = சுழலல், சிந்துதல், அலைதல்..) அடைப்பான் என்பது மூடி அடைக்கும் பொருள். இதே அடைப்பான் என்பது கால்நடைகளுக்கும், ஒரு நோய்க்கும் பெயர். சுக்கான் (ஒருவகைக் கல். இதனை சிக்கிமுக்கிக் கல் என்றும் சொல்வர்). காளான், பூரான், என்று பலவற்றைக் காட்டலாம்.

என்று கூறி இரவிசங்கரின் கருத்தை மறுத்திருந்தார். இதனை இரவிசங்கரும் ஏற்றுக்கொண்டு தனது வாக்கியத்தை கீழ் வருமாறு மாற்றியிருந்தார்.

இந்த -ஆன் விகுதி சொற்கள் பெரும்பாலும் அஃறிணைகளையே குறிக்கின்றன. இவற்றுக்கு -ஆன் விகுதி உயிருள்ளது போல் மயக்கம் தருகிறது.

இப்பொழுது விடயத்திற்கு வருவோம்.

ஒரு வரியில் சொல்லுவதானால் இரவிசங்கரின் சரியானதொரு கருத்தை இரா. செல்வகுமார் மிகப்பிழையானதொரு கருத்தூடாக மறுதலித்திருக்கிறார். இதனை இரவிசங்கரும் ஏற்றுக்கொண்டுள்ளார். செல்வகுமாரின் தவறு என்னவென்பதை பார்க்கும் முன்னர் விகுதி என்றால் என்னவென்றும், ஆன் விகுதி பற்றியும் பார்ப்போம்.  செல்வகுமாருக்கு விகுதி பற்றிய சரியாக விளக்கம் இன்மையே அங்கு சென்ற விவாதத்திற்கு காரணம் ஆகியுள்ளது.

விகுதி.

அன் ஆன் அள் ஆள் அர் ஆர் ப(ம்) மார்

அ ஆ கு டு து று என் ஏன் அல் அன்

அம் ஆம் எம் ஏம் ஓம் (ஓடு) உம் ஊர்

க ட த ற ஐ ஆய் இ(ம்) மின் இர் ஈர்

ஈயர் க ய உம் என்பனவும் பிறவும்

வினையின் விகுதி பெயரினுஞ் சிலவே.

என்று நன்னூல் விகுதி பற்றி பதவியலிலே சொல்லுகின்றது.

இது வினையெச்சம் மற்றும் பெயரெச்சத்தின் ஈற்றில் நிற்கின்ற மேற்சொன்னவை எல்லாம் விகுதி என்று பொருள்படும்.

இங்கே அன் மற்றும் ஆன் என்பது குறிப்பாய் ஆண்பால் படர்க்கைக்கே ஆனதென்று காண்டிகை உரை சொல்கிறது.

இங்கு செல்வகுமாரின் தவறு என்னவென்றால் அவர் குறிப்பிட்ட சொற்கள் விகுதிகளை கொண்டவை அல்ல. அவை அனைத்தும் ஒன்று காரண பெயர்கள் அல்லது இடுகுறி பெயர்கள். அனைத்தும் பெயர்ச்சொற்கள். எச்சங்கள் அல்ல. கொஞ்சம் குழப்பம் தரக்கூடிய அரசன் என்ற சொல் கூட ஆகு பெயரே என்றி அது அன் விகுதி கொண்ட அரசு அல்ல.

இங்குதான் இரவிசங்கரின் கருத்து வருகின்றது.

வடிகட்டுவான் என்ற சொல் வடிகட்டு என்பதன் “னவ்வீறு” சேர்ந்த ஆண்பால் சொல் என்பதே அதுவாகும்.

வடிகட்டி எனும்போது அங்கு சேரும் “இ” விகுதி ஒருமை முன்னிலைக்குரியது. இப்போது உங்கள் முன்னிருக்கும் வடிகட்டும் தொழில் செய்வோனுக்கு, அல்லது செய்பவளுக்கு, அல்லது செய்வதற்கு “இ” விகுதி சேர்த்து வடிகட்டி என்று சொல்லுவதே சரியாகும்.

அன் என்று முடிகின்ற எல்லா சொற்களும் “அன் விகுதி” கொண்டவை அல்ல. (முரளி மற்றும் செல்வகுமார் கவனிக்க) மாறாக அன்விகுதி கொண்ட எச்சங்களனைத்தும் ஆண்பால் படர்க்கையை குறிப்பன. இவ்வெச்சங்களும் பொருளால், இடத்தால், காலத்தால், சினையால், குணத்தால், தொழிலால் மற்றும் இடைச்சொல்லால் வரல் வேண்டும்.

துர்க்காபுரம் – தெல்லிப்பளை
நீண்ட நாட்களின் பின்னர் தெல்லிப்பளை துர்க்கையம்மன் கோவிலிக்கு செல்லும் வாய்ப்பு இன்று கிடைத்தது. வாசலிலேயே அமர்ந்திருந்து கண்களாலேயே காரியங்களை செய்விக்கும் சிவத்தமிழச்செல்வியை தவிர ஏனைய அனைத்தும் அவ்வவ்வாறே அழகாய் இருந்தன.

சில படங்கள் உங்களுக்காக.

யாழ்ப்பாண சாதி அமைப்பு.
சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்து சாதி அமைப்பு மற்றும் இனப்போராட்டம் காரணமாக சாதி அமைப்பின் வீழ்ச்சி தொடர்பாக இறக்குவானை நிர்ஷன் ஒரு பதிவிட்டிருந்தார். யாழ்ப்பாணத்தில் இருந்த சாதிமுறைமைபற்றி பல்வேறு நூல்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ சொல்லி இருக்கின்றன.

1790 இல் யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பின்போது காணப்பட்ட சாதிகள் பற்றி யாழ்ப்பாணச்சரித்திரம் (1912) என்கின்ற நூலில் அ. முத்துத்தம்பிப்பிள்ளை குறிப்பிட்டிருக்கின்றார். அதன் பிரகாரம் சாதி அமைப்பு கீழ்வருமாறு தரப்பட்டிருக்கின்றது.

வேளாளர்

பரதேசிகள்

மடைப்பள்ளியர்

மலையகத்தார்

செட்டிகள்

பிராமணர்

சோனகர்

தனக்காரர்

குறவர்

பரம்பர்

சிவியார்

பள்ளிவிலி

செம்படவர்

கடையர்

பரவர்

ஒடாவி

சான்றார்

கன்னார்

தட்டார்

யானைக்காரச்சான்றார்

கயிற்றுச்சான்றார்

கரையார்

முக்கியர்

திமிலர்

கோட்டைவாயில் நளவர்

கோட்டைவாயிற் பள்ளர்

மறவர்

பாணர்

வேட்டைக்காரர்

வலையர்

வர்ணகாரர்

வண்ணார்

தந்தகாரர்

சாயக்காரர்

தச்சர்

சேணியர்

கைக்கோளர்

குயவர்

கடையற்காரர்

குடிப்பள்ளர்

சாயவேர்ப்பள்ளர்

தம்பேறு நளவர்

தம்பேறுப்பள்ளர்

குளிகாரப்பறையர்

பறங்கி அடிமை

கொல்லர்

தவசிகள்

அம்பட்டர்

கோவியர்

தமிழ்வடசிறை

நளவர்

பள்ளர்

பறையர்

துரும்பர்

எண்ணெய்வணிகர்

சாயவேர்ப்பள்ளர்

சாயவேர்ப்பறையர்

அர்ச்கோயில் பறையர்.

ஆனால் இதிலே

மலையகத்தார்

சோனகர்

ஒடாவி

பறங்கி அடிமை

ஆகியன சாதி என்பதை விட அவர்களது இன ரீதியான இடரீதியான பாகுபாடாகத்தான் காணப்படுகின்றது.

இதன்பின்னர் நீண்டகாலப்போக்கில் இந்த சாதி அமைப்பினுள்ளே கிளைச்சாதிகள் மறைந்து ஏனையவை நிலவி வருகின்றன எனலாம்.

ஆனாலும் இன்றைய நாளிலும் சில சாதி மக்களிடையே கிளைச்சாதிகள் (இடசார்பாயோ அல்லது பழக்கம் சார்பாயோ தெரியவில்லை) காணப்படுவது கண்கூடு (செம்படவர் – மேல்கரை, கீழ்க்கரை). ஆனால் நான் நிர்ஷனின் பின்னூட்டத்தில் குறிப்பிட்டது போன்று அதன் தீவிரம் பெருமளவான நிகழ்வுகளில் குறைவடைந்து, திருமணத்தில் மிக்க தீவிரமடைந்திருக்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் சாதியை விட்டு திருமணம் செய்வதை நூறுவீதம் தவிர்த்து விடுகின்றார்கள்). அதற்காக யாழ்ப்பாணம் முழுவது அந்த நிலைதான் என்பது அர்த்தமல்ல. நான் பணிபுரிந்த சில இடங்களில் சில சாதிகாரர்களை கோயிலுக்குள் அனுமதிப்பதில்லை என்பது இன்னமும் நடைமுறையில் இருக்கின்றது.  இப்பொழுது அச்சாதியினைச்சேர்ந்த மக்கள் தங்களுக்கென்று கோயில் அமைத்து இருக்கின்றார்கள். அதேபோல் இன்னோரிடத்தில் ஒரே கிராமத்தில் இருக்கும் இரு சாதி மக்கள் தமக்குள் எந்த சம்பந்தமும் அற்று இருக்கிறார்கள். ஒருவர் ஒருவரை பற்றி பேசுவது கூட இல்லை. இவை சில உதாரணங்கள் தான்.

ஆனால் அதற்காக கைபட்டால் அடிப்பது போன்ற அளவுக்கு பிரச்சனைகள் இல்லை. பெரும்பாலான இளைஞர்கள் முற்போக்குள்ளவர்களாக இருப்பதால் இது சாத்தியமாகி இருக்கின்றது.

ஆனால் இதனை விட வித்தியாசமான சாதி அமைப்பொன்று யாழப்பாணத்தரசர் காலத்தில் இருந்ததென்று பண்டைய நூல்கள் சொல்கின்றன. அவற்றை தொகுத்து இன்னும் ஒரு பதிவில் தர முயற்சிக்கின்றேன்.

சிறுவர் உழைப்புக்கு எதிராய் ஒன்றுபடுவோம்.
சிறுவர் உழைப்புக்கு எதிராய் ஒன்றுபடுவோம் எனும் கருப்பொருளில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் கடந்த 13ம் திகதி நிகழ்வொன்று இடம்பெற்றது. சிறுவர் பாதுகாப்பு இலங்கை நிறுவனத்தின் ஒழுங்கு படுத்தலில் பல்வேறு உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்களின் கூட்டு முயற்சியினால் இந்நிகழ்வு ஆயிரத்திற்கு மேற்பட்ட பார்வையாளர்களோடு களைகட்டியிருந்தது. பல்வேறு சமய மற்றும் சமூகப்பெரியார்களும் கலந்து கொண்ட இந்நிகழ்வுக்கு யாழ் அரச அதிபர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

ஆசியுரை வழங்கும் நல்லை ஆதீன இரண்டாம் குருமகா சந்நிதானம் சிறீல சிறீ ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்.

செயல்திறன் அரங்க இயக்கம் வழங்கிய நாடகத்திலிருந்து…

இந்துக்களின் யுத்தம்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியும் கொக்குவில் இந்துக் கல்லூரியும் இண்டைக்கு பெரிய துடுப்பாட்ட போட்டி ஒண்டு நடத்துது. நானும் ஒரு இந்து எண்டதால போய் என்ர பங்குக்கு கொஞ்ச படம் எடுத்து போட்டிருக்கு… பாருங்கோ.மேலும்

விபரங்களுக்கு

Score card க்கு

தினக்குரலில் ஊரோடி
தினக்குரலில வாற வலைப்பூக்கள் பற்றிய அறிமுகத்தில இந்த முறை ஊரோடி இடம்பெற்றிருக்கு. இடம்பெற வைத்த தாசன் அண்ணாவிற்கு நன்றிகள். காலையில சில நண்பர்கள் தொலைபேசியில அழைச்சு சொன்னாங்கள் இப்படி உன்ரை வலைப்பதிவு பற்றி எழுதியிருக்கு எண்டு சொன்னாங்கள். பிறகு மாயாவும் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். இவர்களுக்கும் நன்றி. (கொழும்பு தினக்குரல் யாழ்ப்பாணத்தில் கிடைப்பதில்லை.)