Archives
Category Archive
for: ‘கணினி’

என்னோடு எப்போதும்…. விளையாடலாம் வாங்க.

எல்லாரும் தொடர் விளையாட்டு எண்டு தொடங்குகினம். நானும் என்ர பங்குக்கு எனக்கு தெரிஞ்சதை தொடர் விளையாட்டாக்கி இருக்கு. நீங்கள் தினமும் அல்லது அதிகமாக பயன்படுத்துகின்ற மென்பொருள்களை சிறு விளக்கங்களோடு பட்டடியல் இட வேண்டும். அவ்வளவுதான்.
சில நாட்களுக்கு முன்னர் தொடர்விளையாட்டாக இருந்த ABCD… பலருக்கும் மிகவும் பயன்பட்டது போல இத்தொடர்பதிவும் பலருக்கும் பயன்படும்.
சரி கீழ என்ர தொகுப்பு.. (அனேகமானவை பலரும் பயன்படுத்துவதுதான்)
Adobe Flash CS 3

இதுக்கு பெரிசா அறிமுகம் தேவையில்லை. மக்ரோமீடியா நிறுவனத்திடம் இருந்த இந்த மென்பொருளை வாங்கி …

Read More

wattOS – புதிய லினக்ஸ்

உபுந்து லினிக்ஸ் இனை அடிப்படையாக கொண்டு ஒரு பாரமற்ற புதிய லினிக்ஸ் வெளியீடாக wattOS வெளிவந்திருக்கின்றது. இதனால் மிகப்பழைய கணினி ஒன்றில் கூட இந்த இயங்குதளத்தை நிறுவி பயன்படுத்தி கொள்ள முடியும்.
இதன் இலகுத்தன்மையை அதிகமாக்குவதற்காக இதில் உபுந்துவில் வருகின்ற சில மென்பொருட்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு ஓப்பின் ஒவ்வீஸ் இற்கு பதிலாக அபி வேரட் சேர்க்கப்பட்டிருக்கின்றது.

இப்பொழுது அல்பா அளவில் இருக்கும் இந்த இயங்குதளம் நான்குவிதமான பதிப்பில் வந்திருக்கின்றது.
wattOS – The core desktop system using a fully …

Read More

இலவச வேர்ட்பிரஸ் வகுப்பு

ஒரு இரண்டு மூன்று வருசமா நான் வேர்ட்பிரஸை பயன்படுத்திக்கொண்டு இருக்கிறதால ஏதோ கொஞ்சம் வேர்ட்பிரஸ் பற்றி தெரிஞ்சிருக்கு. இதில முக்கியம் என்னெண்டா நான் கணினி மூலமா ஈட்டிற வருமானத்தில பெருமளவு வேர்ட்பிரஸ் சார்ந்ததா தான் இருக்குது. (மிச்சம் joomla).
இதனால வேர்ட்பிரஸ் பற்றி தெரியாதாக்களுக்கு எனக்கு தெரிஞ்ச கொஞ்சத்தை சொல்லிக்குடுப்பம் எண்டு பாக்கிறன்.
எப்பிடி சொல்லிக்குடுக்க போறன்?
என்னுடைய கணினி டெக்ஸ்ரொப்பை நீங்கள் பாக்க அனுமதிப்பதன் மூலம்.
மொழி மூலம்
தமிழ் அல்லது ஆங்கிலம் (உங்கள் தெரிவினை பொறுத்தது)
உத்தேச பொருளடக்கம்
1. வேர்ட்பிரஸ் என்றால் என்ன?
2. …

Read More

சேந்தா மட்டும் பணம் வராதுங்க…

நான் நேற்று இணையத்தில பணம் பண்ணுறது பற்றி இங்க சொல்லியிருந்தன். அதுக்கு பிறகு செந்தழல் அண்ணை வந்து வேற சில நல்ல தளங்களின்ர முகவரியும் தந்திருந்தார். சரி அங்கெல்லாம் போய் சேந்தாச்சு. (சேரக்க உங்கட திறமைகளையும் சரியா குறிப்பிட மறக்காதயுங்கோ). எங்க காசை காணேல்ல வேலை தேடி வரேல்ல எண்டு நினைக்கிறியளோ. போய் ஏலத்தில கலந்துகொள்ளுங்கப்பா. சேந்தாக்கள் ஒருத்தருமே இதுவரைக்கும் ஒரு ஏலத்திலயும் கலந்துகொள்ளேல்ல. ஒரு மாசத்துக்கு 16 ஏலத்தில நீங்கள் பங்குகொள்ள முடியும்.
இதுவரைக்கும் போய் சேராதாக்கள் …

Read More

இணையத்தில் பணம் பண்ணலாம் வாங்க..

உங்களிடம் நல்ல இணைய இணைப்பு உள்ளதா?? வேலையும் முடிஞ்சுது. வலைப்பதிவிலையும் எழுதியாச்சு, மற்ற வலைப்பதிவுகளையும் ஒரு சுத்து சுத்தி பாத்தாச்சு. இனியும் நேரம் இருக்கா. வாங்க கொஞ்சம் உழைக்கலாம்.
உங்களுக்கு கணினியில என்ன செய்யத்தெரியும்?? தகவல் உள்ளீடு?? கணினி வரைகலை?? இணைய வடிவமைப்பு?? மொழிபெயர்ப்பு?? பிளாஸ் வடிவமைப்பு?? எல்லா விதமான வேலைகளும் இங்க இருக்கு. கீழ இருக்கிற படத்தின் மேல சொடுக்கி ஒரு கணக்கு ஒன்றை உருவாக்கி கொள்ளுங்க. பிறகென்ன அங்க வரிசைப்படுத்தி இருக்கிற ஆயிரக்கணக்கான வேலைகளை வென்று …

Read More
Page 1 of 3123»

முன்னம் அலட்டியது