Archives
Category Archive
for: ‘கவிதை’

இன்றைய தமிழ்க் கவிதைகள்.

மேனாட்டார் சாத்திரங்களை தமிழுக்கு கொண்டு வருதல் வேண்டும் என்று பாரதி சொன்னது போய் இன்று தமிழ்க் கவிதைகள் மேனாட்டுக்கு போயிருக்கின்றன.
கலாநிதி. கே. எஸ் சுப்பிரமணியன் அவர்கள் Tamil poetry today என்கின்ற பெயரிலே 106 தமிழ்க் கவிதைகளை தொகுத்து ஆங்கிலத்திலே அவற்றை மொழிபெயர்த்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்துக் கூடாக வெளியிட்டிருக்கின்றார். ( இவர் ஏலவே பதினொரு தமிழ் நாவல்கள் உட்பட பல தமிழ்ப்படைப்புகளை ஆங்கிலத்திற்கு கொண்டு சென்றுள்ளார்).
மிக ஆழமாக எழுதப்பட்டிருக்கின்ற முன்னுரை, தமிழ்க் கவிதை பற்றி அறியாவதர்களுக்கு …

Read More

சிறையிலிருந்து ஒரு கடிதம்

அம்மாநண்பர்கள் என்னைத் தேடி வந்துகதவில் தட்டும்போதெல்லாம்நீ வெம்பிக் கண்ணீர் மல்குதைஎண்ணி நான் வேதனைப்படுகிறேன்
ஆனால்வாழ்க்கையின் சிறப்புஎன் சிறையில் பிறக்கிறதென்றுநான் நம்புகின்றேன் அம்மாஎன்னை இறுதியில் சந்திக்க வருவதுஒரு குருட்டு வெளவாலாய்இருக்காதென்றும் நான் நம்புகின்றேன்அது பகலாய்த்தான் இருக்கும்அது பகலாய்த்தான் இருக்கும்.
(எம். ஏ. நுஃமானின் பாலஸ்தீனக் கவிதைகள் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது)

Read More

என்றென்றும் பல்ஸ்தீன்

பாலஸ்தீனக் கவிஞர் ஃபத்வா துக்கானின் இந்தக்கவிதை எம். ஏ. நுஃமானின் பாலஸ்தீனக் கவிதைகளில் உள்ளது. உங்களின் பார்வைக்காக
மேன்மைமிகுமேன்மை மிகு தேசமேஇருள் மிகுந்த பெருந்துயர் இரவில்திரிகைக்கல் சுழலலாம்மேலும் சுழலலாம்ஆயின்உன் ஒளியை அழித்தொழிப்பதற்குஅவற்றால் இயலாஅவை மிகச் சிறியன.
ஓ பெரிய தேசமேஓ ஆழமான காயமேதனிப்பெரும் காதலேநசுக்கப்பட்ட உன் நம்பிக்கைகளில் இருந்துஒடுக்கப்பட்ட உன் வளர்ச்சியில் இருந்துதிருடப்பட்ட உன் முறுவலில் இருந்துதிருடப்பட்டஉன் குழந்தைகளின் சிரிப்பில் இருந்துசிதைவுகளிலிருந்துசித்திரவதைகளில் இருந்துஇரத்தம் உறைந்த சுவர்களில் இருந்துவாழ்வினதும் மரணத்தினதும்நடுக்கங்களில் இருந்துபுதிய வாழ்வொன்று கிளர்ந்தெழும்.
அது எழவே செய்யும்.

Read More

ஐந்து கவிதைகள் – உமாஜிப்ரான்

வசந்தனுக்காக நிலம் சஞ்சிகையில் மேற்கண்ட தலைப்பில் வெளிவந்த உமாஜிப்ரானின் கவிதைகளை தருகிறேன்.
சுகம்பல்லரும்பா மழலைவாய்குதப்பும் கைவிரல்முரசழுந்தும் குறுகுறுப்புகாதல் கவ்விக் குதப்பும் மனங்களில்
உள்ளொளிதெளிந்த ஆழ் சுனைமனதில்அலைகிளா அமிழ்ந்தாய்அதிர்வுசூழ் கவிதையெனஉன் சிறுசலனமும்குமிழ் பெருக்கசுனைமனது நுரைபூக்கும்கவிதை கவிதையாய்.
காமம்1பாத்தியில் விழுந்து தெறிக்காது தவழ்ந்துவடிந்தடங்கும் பக்குவமாய்.2தறிகெட்டு பாய்ந்துபாத்திமேவிபரவி வடிந்துதேங்கி நாறும் சகதியாய்காதல் வனைந்த வாழ்வுமடியும் கன்றின் மூக்குமாய்முட்டி முட்டிஉனதும் எனதும்பார்வைகள் உமிந்தனஎன்னையும் உன்னையும்மிச்சமில்லாமல் கரைந்துமிச்சமில்லாமல் நிறைந்து போனோம்சருமத் துவாரங்களில் காதல்வழியவெள்ளொளியும் வாசமுமாய் விகசித்தோம்முழுநிலவின் முகமெனச் சுடர்பொலியும்உன் மனதில்நிலவில் ஒளவையெனநித்தியம் என் சீவியமென்றுஉச்சிக்கபாலத்தில் எழுதினோம்ஒருவருக்கொருவர்
அலைப்புறும் மயிர்க்கீற்றுகள் ஒதுக்கிகைகளில் …

Read More

கவிதைகள்

எனக்கு பிடிக்காமல் போனவைகள் பற்றிஎப்போதும் நான் சிந்தித்ததில்லைஆனால்கவிதைகள் எனக்கு பிடிக்காமல்போனபோது கொஞ்சம்யோசித்துப்பார்த்தேன்
கவிதைகளை எனக்குமிகவும் பிடித்திருந்ததுஅப்போது நான்கவிதைகளை படிக்கத் தொடங்கவே இல்லைகவிதைகள் என்றால்புல்லரிக்கும் எனக்குஅப்போதெனக்குகவிதைகள் புரிவதேயில்லை.கவிதைகள் புரியத்தொடங்கியபோதுகவிதையே வாழ்க்கையானது
கவிதைகளை நான்கிறுக்கத் தொடங்கிய போதுதான்கவிதைகள் கொஞ்சம்உதைக்கத் தொடங்கியதுகவிதைகளை நான்யோசித்தபோதுகவிதைகள் எனக்குவெறுக்கத் தொடங்கியதுகவிதைகள் எனக்குள்தானாய் வந்தபோதுகவிதைகள் எனக்குசுத்தமாய் பிடிக்காமல் போனது.ஏனென்றால் கவிதைகள்உண்மைகளை சொல்லிவிடுகின்றனஎனக்கு பிடிக்காமல் போனவைகள் பற்றிநான் சிந்திப்பதேயில்லை.

Read More
Page 1 of 212»

முன்னம் அலட்டியது