அப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை

சாதாரணமாக அப்பிள் கணினிகளில் தமிழில் உள்ளீடு செய்ய தமிழ்99 மற்றும் அஞ்சல் எழுத்துரு வடிவமைப்பு முறைகளே காணப்படும். நான் அவை இரண்டையுமே பயன்படுத்துவதில்லையாகையால் அப்பிள் கணினி வாங்கிய புதிதில் (2007இன் ஆரம்பத்தில்) எனக்கென பாமினி முறையில் யுனிக்கோட் உள்ளிடுவதற்கான விசைப்பலகை ஒன்றினை உருவாக்கி வைத்திருந்தேன். ஆனால் அது பல வழிகளில் ஒரு பூரணப்படுத்தப்படாததாகவே இருந்து வந்தது.

நீண்ட காலத்தின் பின்னர் இப்பொழுது அதனை மேம்படுத்தி அனைவரும் பயன்படுத்துமளவிற்கு பூரணப்படுத்தியுள்ளேன். நீங்களும் கீழுள்ள தொடுப்பில் சொடுக்கி தரவிறக்கி நிறுவிக்கொள்ள முடியும்.

குறிப்பிடத்தக்க விடயங்கள்

ஸ்ரீ (S+R U+0BB8 U+0BCD U+0BB0) இற்கு பதிலாக சரியான ஶ்ரீ (SH+R U+0BB6 U+0BCD U+0BB0) பயன்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ் இலக்கங்கள்
தமிழ் இலக்கங்கள் CABS உடன் சேர்த்து எண் விசைகளை சொடுக்கும்போது வருமாறு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சாதாரணமாக இலக்கங்களும் SHIFT உடன் நெடில் எழுத்துக்களும் உள்ளிடப்படுவது மாற்றமின்றி உள்ளது.) அதிக இலக்கங்கள் காரணமாக சைபர் ஆனது ஒன்றிற்கு முன்னும், சைபர் இடத்தில் பத்தும், கழித்தல் அடையாளம் வருமிடத்தில் நூறும், சமன் அடையாளம் வருமிடத்தில் ஆயிரமும் வைக்கப்பட்டுள்ளன.

சைபர் – – CABS+`
ஒன்று – – CABS+1
இரண்டு – – CABS+2
மூன்று – – CABS+3
நான்கு – – CABS+4
ஐந்து – – CABS+5
ஆறு – – CABS+6
ஏழு – – CABS+7
எட்டு – – CABS+8
ஒன்பது – -CABS+9
பத்து – – CABS+0
நூறு – – CABS+-
ஆயிரம் – – CABS+=

தமிழ் குறியீடுகள்
தமிழிலுள்ள அனைத்து குறியீடுகளும் இன்னமும் சேர்க்கப்படவில்லையாயினும் – நாள், மாதம், வருடம், செலவு, வரவு, மேற்படி, ரூபாய், இலக்கக் குறியீடு மற்றும் நீளக் குறியீடு என்பன சேர்க்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் CAPS உடன் Q இல் தொடங்கி உள்ளன.

௳ ௴ ௵ ௗ ௶ ௷ ௸ ௹ ௺

நிறுவுதல்

தரவிறக்கிக்கொண்ட ஸிப் கோப்புறையினுள் இருக்கும் இரண்டு கோப்புகளையும் ~/Library/Keyboard Layouts இனுள் பிரதிசெய்து சேர்த்துவிடுங்கள். இப்பொழுது System Preferences–>international இல் இவ்விசைப்பலகையை தேர்வுசெய்து கொள்ள முடியும். சிலவேளைகளில் உங்கள் கணினியை மீள இயக்க வேண்டி இருக்கும்.

மேம்படுத்தல்

கீழே பின்னூட்டத்தில் அமலன் கேட்டவாறு விசைப்பலகை இப்போது சுருக்க விசைகள் வேலை செய்யக்கூடியதாக மேம்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் இதனை முன்னரே நிறுவியிருந்தால் மீளவும் தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.

தரவிறக்கம்

கீழே சொடுக்கி விசைப்பலகையினை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.

Bamini Keyboard Layout (2846 downloads)

பயனுள்ளதெனி்ன் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

குறிச்சொற்கள்: , , ,

28 பின்னூட்டங்கள்

  1. நிரூஜா சொல்லுகின்றார்: - reply

    நான் ஃபொனட்டிக் முறையைப் பயன்படுத்துவதால், மக் பயன்படுத்தும் போது எந்த பிரச்சனையும் இருக்கவில்லை. பாமினி ஒரு பத்து வருடங்களுக்கு முன்னர் பாவித்த ஒன்று. இப்போது எல்லாம் மறந்து விட்டது. பகிர்வுக்கு நன்றி.

    • பகீ சொல்லுகின்றார்: - reply

      பழகியவர்களுக்கு சரி ஆனால் மற்றவர்களுக்கு நான் பொதுவாக ஃபொனெட்டிக் முறையை சிபாரிசு செய்வதில்லை. மற்ற எம்முறையும் சம்மதமே.

  2. Amalan சொல்லுகின்றார்: - reply

    உங்கள் Bamini வேலை செய்கிறது. நல்ல முயற்சி பாராட்டுக்கள்.
    ஆனால் உங்கள் Bamini பாவிக்கும் போது os x keyboard shortcuts (Eg:-command+t)வேலை செய்யவில்லை.

    உருவாக்கியதற்கு நன்றி …

    • பகீ சொல்லுகின்றார்: - reply

      அமலன்,

      சுருக்க விசைகள் வேலை செய்யாது என்பது உண்மைதான். ஏனென்றால் நீங்கள் ஆங்கில உள்ளீட்டு முறையில் இருக்கும் போது “Command+t” சொடுக்குவதற்கும் தமிழ் உள்ளிட்டு முறையில் இருக்கும் போது சொடுக்குவதற்கும் வித்தியாசம் உண்டு. தமிழ் உள்ளிட்டு முறையில் இருக்கும் போது நீங்கள் உண்மையில் “Command + வ” இனையே அழுத்துகின்றீர்கள்.

      புரிந்திருக்கும் என நம்புகின்றேன்.

      • Amalan சொல்லுகின்றார்: - reply

        நண்பரே புரிகிறது shortcutயை வேலை செய்ய வைக்க வாய்ப்பு உள்ளதா? ஏனென்றால்! நான் உங்கள் Baminiயை பயன்படுத்தும் போது அடிக்கடி languageயை U.Sகும் பிறகு Baminiகும் மாற்ற வேண்டி உள்ளது.

        • பகீ சொல்லுகின்றார்: -

          அமலன்,

          விசைப்பலகையின் 2.1 பதிப்பு சுருக்க விசைகள் வேலைசெய்யக்கூடியவாறாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இப்பொழுது தரவிறக்கி நிறுவிக்கொண்டால் நீங்கள் கேட்டவாறாக சுருக்க விசைகள் வேலை செய்யும்.

  3. Amalan சொல்லுகின்றார்: - reply

    உங்களிடம் ஒரு கேள்வி.
    எப்போது நீங்கள் அப்பிள் WWDCக்கு போக போறீங்க?

  4. Amalan சொல்லுகின்றார்: - reply

    keyboard shortcut வேலை செய்கிறது.
    …………………….நன்றி………………….

  5. prashathg சொல்லுகின்றார்: - reply

    நன்றி பகீ.!

  6. பகீ சொல்லுகின்றார்: - reply

    பிரசாத், அமலன்,

    பின்னூட்டங்களுக்கு நன்றி

  7. […] அப்பிள் கணினி பாவனையாளர் எனின், இங்கே இருக்கும் எனது விசைப்பலகையை தரவிறிக்கி […]

  8. அசால்ட் ஆறுமுகம் சொல்லுகின்றார்: - reply

    அண்மையில் தான் மக் கிற்கு மாறினேன்… பாமினியை எப்படி உபயோகிப்பது என்று தடுமாறினேன்…. நல்ல பதிவு.. நன்றிகள்….

  9. செந்து சொல்லுகின்றார்: - reply

    மிக்க நன்றி.

  10. Chayini சொல்லுகின்றார்: - reply

    பெரிய பிரச்சினை தீர்ந்தது.. 🙂 நன்றி…

  11. Sangar சொல்லுகின்றார்: - reply

    Why it is not working ? i think i dont know how to input them. please help me. im usinf OS X 10.8.2

    • பகீ சொல்லுகின்றார்: - reply

      ~/Library/Keyboard Layouts இனுள் சரியாக இரு கோப்புக்களையும் பிரதிசெய்தீர்களானால், எவ்வித பிரச்சனையும் இன்றி வேலை செய்யும். உங்களுக்கு என்ன பிரச்சனை ஏற்படுகின்றது?

  12. சங்கர் சொல்லுகின்றார்: - reply

    வேலை செய்கிறது. நன்றி

  13. கண்ணன் வெ சொல்லுகின்றார்: - reply

    மக்கிற்கு சமீபத்தில் மாறியபின் இருந்த ஒரு தடங்கள் நீங்கியது. நன்றிகள் பல !!

  14. நரசிம்மன் சொல்லுகின்றார்: - reply

    வேலை செய்கிறது. நன்றி.

  15. ஆசீர் சொல்லுகின்றார்: - reply

    தங்களுடைய அருமையான பணிக்கு மிக்க நன்றி! இதைதான் அனேக நாட்களாக தேடிக்கொண்டிருந்தேன். ஆனால் எனக்கு ஒரு சிக்கல். இது Final Cut Pro Xல் சரியாக வேலை செய்வதில்லை. Shift keyயை அழுத்தும் போது வரும் எழுத்துக்கள் வருவதில்லை. உதாரணமாக கோ, ரு. என்னால் Copy and Paste கூட செய்ய முடியவில்லை. எதாவது வழி இருக்கிறதா? உதவுங்கள் நன்றி.

    • பகீ சொல்லுகின்றார்: - reply

      இது பொதுவாக அனைத்து அடொபி மென்பொருள்களிலும் இருக்கின்ற பிரச்சனை. அவை யுனிக்கோட் இற்கு ஆதரவு நல்குவதில்லை. நீங்கள் சாதாரணமான எழுத்துருக்களைத்தான் பயன்படுத்த வேண்டும்.

  16. Anuraj சொல்லுகின்றார்: - reply

    Do you have Tamil Inscript keyboard layout like as in Windows

    Please advise

  17. Vijay சொல்லுகின்றார்: - reply

    I have started using now only Mac. But I prefer to type in old Tamil typewriter model. any help for this. thanks

  18. Jalaludeen சொல்லுகின்றார்: - reply

    என Mac Pro லேப்டாப்பில் ஹ மற்றும் ஷ எழுத்துக்களை காண இயலவில்லை. தயவுசெய்து உதவவும் . நன்றி

  19. Gobi சொல்லுகின்றார்: - reply

    பதிவிறக்கம் செய்வற்கான இணைப்பு இல்லை. உதவ முடியும ?

  20. கோபிநாத் சொல்லுகின்றார்: - reply

    நன்றி…