பணம் பண்ணலாம் வாங்க..

புளொக்கரில் அல்லது இலவச வேர்ட்பிரஸில் பதிவு வைத்திருப்பவர்கள் தனித்தளம் ஒன்றிற்கு போகாமல் இருப்பதற்கு பணமும் ஒரு காரணமாக இருக்கலாம். (அதற்குரிய பணம் மிகச்சிறிதளவாக இருந்தாலும்- எதுக்குப்பா தேவையில்லா செலவு). நீங்கள் எந்த வகையில் இணையத்தளம் வைத்திருந்தாலும், அது இலவசமாகட்டும் உங்கள் சொந்தமானதாகட்டும் அதன் மூலம் சிறிதளவு பணமீட்டமுடிந்தால் அப்பணம் அதனை மேம்படுத்த பல்வேறு வழிகளில் உதவக்கூடும்.

முதலில் நான் Google Adsense இனை மட்டுமே விளம்பரத்திற்கு பயன்படுத்தி வந்தேன். மிக அதிகளவிலான வாசகர்களை கொண்ட இணையத்தளம் அல்லது வலைப்பதிவு ஒன்றிற்கே இது சிறப்பான விளம்பர முறையாகும். (இவங்களும் எனக்கு கொஞ்ச காசு இடக்கிட அனுப்புறாங்கள்) ஆனால் Text Link Ads எனப்படுகின்ற இந்த இணையத்தளம் மிகவும் வித்தியாசமான முறையில் விளம்பரங்களை செய்கிறது. இதன்மூலம் அவர்கள் தருகின்ற ஒரு தொடுப்பினை நீங்கள் உங்கள் இணையத்தளத்தில் வைத்திருந்தால் ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு அதற்குரிய பணத்தை தருவார்கள். நீங்கள் அதிக பட்சமாக எட்டு தொடுப்புகளை வைத்திருக்க முடியும். ஒரு தொடுப்புக்கு குறைந்தது 5$ எனக்கொண்டால் உங்களால் மாதம் ஒன்றிற்கு 40$ சம்பாதிக்க முடியும். (குறைந்தது மாதம் 5$ உங்களால் சம்பாதிக்க முடியும் என என்னால் கூற முடியும்). ஒரு domine இன் விலை வருடத்திற்கு ஆகக் கூடுதலாக 10$ கள் தான் என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.

எனக்கு அவர்கள் அனுப்பும் காசோலையினை கீழே பாருங்கள்.
பிறகென்ன இங்க சொடுக்கி ஆரம்பியுங்கோ.

குறிச்சொற்கள்: , ,

4 பின்னூட்டங்கள்

 1. vin சொல்லுகின்றார்: - reply

  romba nanri bahi nan tamilnadu nagapattinam mavattathai sernthavan enakku ungal padhivugal romba pidikkum athilum neenga comment seigiravargalai vanga ena alaipathu enaku romba pidikkum…..

  by tha way super information thalaiva…

 2. Raja சொல்லுகின்றார்: - reply

  தோழர்,
  உங்கள் பதிவு அத்தனையும் அருமை,

  இந்தியாவில் உள்ளவர்களுக்கு எவ்வாறு இவர்கள் பணம் செலுத்துவார்கள். காசோலை மூலமா…? ஆன்லைன் மூலமா…? அவ்வாறு ஆன்லைன் எனில் எவ்வாறு பரிவர்த்தனை செய்வது…?

  பதிலுக்கு காத்துள்ளேன்…

  • பகீ சொல்லுகின்றார்: - reply

   காசோலை மூலமாக இந்தியாவிற்கு அனுப்புவார்கள். நீங்கள் விரும்பினால் இப்போது அவர்களின் Debit Card இனையும் பெற்றுக்கொள்ள முடியும்.