புதுவருசம், புது உடுப்பு, புதுப் பிரச்சனை

புது வருசம் பிறந்தாப்பிறகு போடுற முதற் பதிவு இதுதான். வருசத்தண்டே வாழ்த்துப்போட வேணும் எண்டு நினைச்சிருந்தனான். புதுப்பிரச்சனைகள். நாலாவது தடைவயா ஊரோடி புது வடிவம் எடுத்திருக்கு (இடையில பாத்து திருத்தங்கள் சொன்னவர்களுக்கு நன்றி – குறிப்பா கௌபாய் மதுவுக்கு). ஆனா ஒண்டை கவனிச்சியள் எண்டா தெரியும் நான் எழுதின கன பதிவுகள் காணாமல் போயிருக்கிறது. தரவுத்தளத்தில வந்த பிரச்சனை காரணமா (அதில ஒண்டும் பிரச்சனை வரயில்ல நான்தான் பிழையாக்கி விட்டன்) காரணமா என்ர எல்லா பதிவுகளும் என்னை ஊக்கப்படுத்தின எல்லா பின்னூட்டங்களும் அப்பிடியே இல்லாமல் போயிட்டுது.

பழைய பதிவுகளை மீண்டும் இணைக்க முயற்சிக்கிறன், ஆனா பின்னூட்டங்கள்??? அவ்வளவுதான்…

என்ன பிழை நடந்தது எண்டதை விரிவா ஒரு பதிவில தர முயற்சிக்கிறன். புதிசா தனித்தளத்தில பதிய வாறாக்களுக்கு நிச்சயமா உபயோகமா இருக்கும்.

பிறகென்ன புது உடுப்பு எப்பிடி இருக்கு எண்டு சொல்லுங்கோ.

குறிச்சொற்கள்: , ,

11 பின்னூட்டங்கள்

 1. ரவிசங்கர் சொல்லுகின்றார்: - reply

  புது உடுப்பு நல்லா இருக்கு. அந்த ஓடை படிக்கிற பொம்மை படத்தை எங்க இருந்து பிடிச்சீங்க..இல்ல உங்க வடிவமைப்பா..நானும் பயன்படுத்தலாமா?

 2. பகீ சொல்லுகின்றார்: - reply

  ரவி அண்ணை வாங்க.

  அது என்ர வடிவமைப்பு இல்லை. தரவிறக்கினதுதான். நீங்களும் பாவிக்கலாம். பிரச்சனை இல்லை. வேறதுகளும் இருக்கு எங்க தரவிறக்கினது எண்டு தேடிப்பாத்து பிறகு சொல்லுறன்.

 3. ரவிசங்கர் சொல்லுகின்றார்: - reply

  நன்றி, பகீ

 4. Nytryk சொல்லுகின்றார்: - reply

  Nice Windows Vista style theme 🙂
  Is this your own design?

 5. பகீ சொல்லுகின்றார்: - reply

  Nytryk வாங்க, உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

  இது என்னுடைய வடிவமைப்புத்தான்.

 6. சயந்தன் சொல்லுகின்றார்: - reply

  அப்புறம் குருவோட வீடும் மாறிட்டுது
  blog.sajeek.com

  நல்ல நல்ல தீம்கள் பிடிக்கிறீங்கள் 🙂

 7. Lucas சொல்லுகின்றார்: - reply

  Hey man, pl see my blog
  http://pensamentos-pensantes.blogspot.com

 8. மதுவதனன் மௌ. சொல்லுகின்றார்: - reply

  பகீ,
  வார்ப்புரு அந்தமாதிரி இருக்கு. கொஞ்ச நாள் ஊரோடிய காணேல எண்டாலும் சும்மா கலக்கலா வந்து இறங்கியிருக்கிறீங்கள்.

  ம்ம்ம்…உங்கட வலைப்பதிவின்ர பின்னூட்டங்கள் போனது கவலைதான். அனுபவம்தான் நல்ல ஆசிரியன் எண்டதால இனிவரும் காலங்களில் பின்னூட்டங்கள இழக்க மாட்டீங்கள் எண்டு நினைக்கிறன்.

  ஹீஹீ..நானும் அந்த செய்தியோடை படிக்கிற பையன தூக்கப்போறன்.

  பகீ இது கௌபாய்மது. கௌபாய்மதுவில ஆங்கிலம் தமிழ் கலந்து இருக்கிறதால் இனிவரும் காலங்களில் எனது உண்மைப் பெயரில்.

  மதுவதனன் மௌ.

 9. sasi சொல்லுகின்றார்: - reply

  hi sanker
  HAPPY BIRTHDAY

 10. பகீ சொல்லுகின்றார்: - reply

  குரு வாங்க. உங்கட பின்னூட்டத்திற்கு நன்றி.

  இந்த தீம் நம்மட கைவண்ணம் குருவே..

 11. பகீ சொல்லுகின்றார்: - reply

  மதுவதனன், வாங்க

  உங்கள் பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்கும் நன்றி.