புத்தகக் கடைகள்

யாழ்ப்பாணத்து புத்தகக் கடைகள் எல்லாம் பூட்டியிருக்கு அல்லது பழைய புத்தகக் கடையாப்போச்சு. கொழும்பில வாங்கின புத்தகங்கள் எல்லாம் வாசிச்சும் முடிஞ்சுது. இப்போதய திட்டம் எல்லாம் இருக்கிற புத்தகங்களை திருப்பி வாசிக்கிறது தான். முதலாவதா ஆத்மாநாம் படைப்புகளை எடுத்து வச்சிருக்கு. முதல் வாசிக்கேக்க யோசிச்சனான் மனிசன் ஒரு ரெண்டு வருசமெண்டாலும் கூட உயிரோட இருந்திருக்கலாம் எண்டு. உங்களுக்கு ஏதாவது நல்ல புத்தகம் அம்பிடடால் எனக்கும் சொல்லுங்கோ காசு அனுப்பிறன் வாங்கி அனுப்புங்கோ. புத்தகங்கள் இல்லாம கஸ்டமாக் கிடக்கு. என்ர கணனியில வந்து இருந்தாச்சு தானே எனிமேல் கொஞ்சம் அடொப் பிளாஸ் பற்றியும் எழுதலாம் எண்டு நினைக்கிறன். முந்தி கொம்போனன்ற் எண்ட பெயரில கொஞ்சம் எழுதி வச்சிருந்தனான். அதுகளையும் எடுத்து விடலாம். இந்த பதிவுகளை மறுமோழியேக்க அரசியலை போராட்டத்தை சேத்துப்போடதையுங்கோ. அதுக்கும் என்க்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.

குறிச்சொற்கள்: ,

2 பின்னூட்டங்கள்

  1. கானா பிரபா சொல்லுகின்றார்: - reply

    வணக்கம் பகீ

    நீங்கள் உண்மையிலேயே யாழில் தான் இருக்கிறீர்களா? இணைய வசதி எப்படி உள்ளது? முடிந்தால் சிக்கலில்லாத பொதுவிடயங்களைத் தாருங்களேன். ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.

  2. பகீ சொல்லுகின்றார்: - reply

    அதில உங்களுக்கு என்ன சந்தேகம். சிக்கலில்லாத விசயமா எழுத முயற்சி பண்ணுறன். இணைய வசதி கொஞ்சம் பிரச்சனைதான். நெற் கவே ஒரு மணித்தியாலத்திற்கு 160.00 (முந்தி 50.00) என்னுடைய அலுவலகத்தில் நல்ல இணைய வசதி இருக்கு அதைத்தான் பயன்படுத்திறன்.