மீளவும் ஊரோடி, யாழ்ப்பாணம் மற்றும் பிற..
கடந்த நான்கு மாதமாக ஊரோடியின் பக்கமே வருவதை தவிர்க்கவேண்டிய சூழ்நிலையில் இருந்து வந்தேன். எழுதுவதற்கு முயற்சிக்கும் போதெல்லாம் கடந்தா நான்கு மாத துயரங்களும் துக்கங்களும் முந்திவந்து நின்றதால் அவற்றை எழுதுவதை தவிர்க்கும் முயற்சியாகவே அது இருந்தது.
ஊரோடி என்று மட்டுமல்ல கடந்த நான்குமாத காலம் குறிப்பிட்ட ஒரு சிந்தனை வேலை தவிர்ந்து மற்றையதனைத்தும் ஒரு செயற்பாடற்ற நிலையினை அடைந்திருந்தது. தொடர்ச்சியான இலங்கைக்குள்ளான பயணங்களும் யுத்த பூமியிலிந்து வரும் மக்களை தினம் தினம் சந்திக்க வேண்டிய கட்டாயமும், அவர்கள் எங்கள் மீது இற்க்கிவிடும் அவர்களின் துயரங்களினையும் துக்கங்களினையும் தாங்கவேண்டடியவர்களாயும் இந்த நான்குமாதங்களும் கடந்து போயிருக்கிறது. இன்னமும் இது தொடர்ந்தாலும், பழகிப்போய்விட்டது என்று சொல்ல வேண்டி இருக்கின்றது. (எங்களுக்கு எல்லாமே பழகிப்போயிருக்கிறது)
இப்போது ஊரோடியில் திரும்பவும் ஏதாவது அலட்டுவது என்று முடிவுடன் திரும்பி வந்திருக்கின்றேன். நிச்சயமாக கடந்து போன மாதங்கள் பற்றியதாக அது இருக்காது. எப்போதாவது சாத்தியப்படும் என்ற நிலை வரும்போது அவைபற்றி நிச்சயம் எழுதுவேன்.
பதிவர் சந்திப்புக்காய் ஏ-9 வீதியால் பயணம் செய்தபோது எடுத்த புகைப்படங்களை நிச்சயம் ஒரு நாள் தரவேற்றுவது என்ற யோசனையும் இருக்கின்றது. பாரப்போம். இடையிலே தடைப்பட்டிருந்த எனது இணையத்தூடான வேலையையும் இப்போது தொடரத்தொடங்கியிருக்கின்றேன். இப்போது மீளவும் அதிகம் வாசிக்க முடிகிறது. நல்ல புத்தகங்கள் கிடைப்பதுதான் அரிதாகி இருக்கிறது. (நல்ல புத்தகங்கள் இருந்தால் சொல்லுங்கள் – யாழ்ப்பாணத்தில் கிடைக்கவும் வேண்டும்.) பார்ப்போம்.
யாழ்ப்பாணம்.
பொருட்களின் விலை குறைந்திருக்கிறது, யாழப்பாண உற்பத்திகளின் விலை அதிகரித்திருக்கிறது. அதிவேக இணையம் வந்திருக்கிறது அத்தோடு வீதிக்கு வீதி நெற்கவேக்களுமாக. யாழ்ப்பாணத்துக்குள் அதிகம் இறக்குமதியாவது மதுபானம்தான் – அரச அதிபரின் கூற்று. தேர்தல் ஒன்று வந்துபோயிருக்கிறது யாருக்கும் தெரியாமல். யாழ்ப்பாணத்தை பற்றி தொடர்ந்து அதிகம் அலட்ட முயற்சிக்கிறேன்.
அடுத்த பதிவில் சந்திக்கும் வரை
அன்புடன்
ஊரோடி.
மீள் வருகைக்கு வாழ்த்துக்கள், ஊர்ப்புதினங்களை எதிர்ப்பார்க்கிறேன் நிறையவே
வாங்கோ பகி…
அட நேற்றுத்தான் பகியோட கதைக்கோணும் எண்டு சொல்லிக்கொண்டிருந்தேன் க-பிரபாவிடம்!!
நானும் எதிர்பார்க்கிறேன் நிறைய விசயங்களை, கூடவே ஒரு மின்னஞ்சலையும்.
மீண்டும் ஊரோடியில் பதிவுகளில் சந்திப்பது மகிழ்சியளிக்கிறது. மீள் வரவுக்கு வாழ்த்துக்கள்
என்னைய போல நீங்களும் கொஞ்சநாளா பதிவர் பக்கம் வாரதில்ல போல. என்ன பகி எழுத எதுவும் தோன்றல. இனி நானும் எழுதத் தொடங்க வேண்டும்.
வாருங்கள் ஊரோடி.. பதிவர் சந்திப்பில் உங்களை நேரடியாக சந்தித்தது மகிழ்ச்சி..
தொடர்ந்து உங்கள் படைப்புக்களை எதிர்பார்க்கிறேன்..
மீளவும் பதிவுகளில் சந்திப்பதில் மகிழ்ச்சி… தொடர்ந்து அலட்டுங்கோ…
மீள் வரவு முன்னர் போலவே சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
எதிர் பார்த்திருக்கிறேன்….
வருகைக்கு வாழ்த்துக்கள்
மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி 🙂
வாங்கோ பகீ
jaffna தமிழ் எழுதுவதற்கு நன்றி