யாழ் மண்

யாழ்ப்பாண மண்ணை மீள மிதிச்சதில யாழ்ப்பாணத்திற்கு கொஞ்சம் பாரமெண்டாலும் எனக்கு சரியான சந்தோசம். இரண்டு நாளா சுத்திப்பாத்தன் போகக்கூடிய இடங்களுக்கு. அனேகமா எல்லா சாப்பாட்டுக்கடையும் பூட்டு. எனக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்துது. யாழ்ப்பாணத்து விலைகள்தான் கொஞ்சம் பயப்பிடுத்துது. பால்மா, மின்கலம் எல்லாம் வாங்கவே ஏலாது. இப்பத்த விலைகளை நீங்களும் கொஞ்சம் பாருங்கோவன். முந்திவித்த விலைகள் அடைப்புக்குறிக்குள்ள போட்டிருக்கு.

தேங்காய் எண்ணெய் – 480.00 (240.00)
அரிசி – 110.00 (38.00)
சீனி – இல்லை (60.00)
பருப்பு – 140.00 (60.00)
சிகரெட் – 30.00 (12.00)
மண்ணெண்ணெய் – 190.00 (45.00)
பெற்றோல் – 450.00 (101.00)
நெருப்பெட்டி – 18.00 (2.50)

இன்னும் விலைகள் தெரியோணுமெண்டா சொல்லுங்கோ இன்னொரு முறை மிச்சத்தையும் எழுதுறன்.

குறிச்சொற்கள்: ,

5 பின்னூட்டங்கள்

  1. ILA(a)இளா சொல்லுகின்றார்: - reply

    எப்பா, என்ன ஒரு ஏற்றம், விலையில்தான்னு சொன்னேன்

  2. NONO சொல்லுகின்றார்: - reply

    //சிகரெட் – 30.00 (12.00)//
    இது மட்டும் இவ்வளவு விலை குறைந்திருக்கு கொழும்பில் 3 வருடங்களுக்கு முன் 150க்கு ஒரு பெட்டி (உள்நாட்டு தயாரிப்பு) வாங்கியதாக ஞாபகம்!!!!

  3. NONO சொல்லுகின்றார்: - reply

    //சிகரெட் – 30.00 (12.00)//
    இது மட்டும் இவ்வளவு விலை குறைந்திருக்கு கொழும்பில் 3 வருடங்களுக்கு முன் 150க்கு ஒரு பெட்டி (உள்நாட்டு தயாரிப்பு) வாங்கியதாக ஞாபகம்!!!!

  4. பகீ சொல்லுகின்றார்: - reply

    ஒரு பெட்டி 30.00 ரூபா இல்லையப்பா. ஒரு சிகரட் முப்பது ரூபாயப்பா.

  5. பகீ சொல்லுகின்றார்: - reply

    ஒரு பெட்டி 30.00 ரூபா இல்லையப்பா. ஒரு சிகரட் முப்பது ரூபாயப்பா.