கூகிள் 2009
கூகிள் நிறுவனத்தில் 2009 இல் என்ன நடக்கக்கூடும் என்று அலெக்ஸ் சிது தனது வலைப்பதிவில் வரிசைப்படுத்தி இருக்கின்றார். அவை இங்கு மீள… என்ர யோசனையோட..
1. கூகிள் குரோம் பத்து வீத சந்தை பங்குகளை கொண்டிருக்கும்.
அப்ப இன்ரெனெற் எகஸ்புளோரருக்கு ஒரு பெரிய ஆப்பிருக்கு…
2. கூகிள் தேடுபொறி குறிப்பிடத்தக்களவு சந்தைப்பங்குகளை இழக்கப்போவதோடு மைக்ரோசொவ்ற்றின் லைவ் தேடுபொறி அதனை பெற்றுக்கொள்ளும்.
என்ன நடந்தாலும் என்ர தேடுபொறி கூகிளாத்தான் இருக்கும். கூகிள் புதிதாக அறிமுகப்படுத்துகின்ற விக்கி தேடு பொறி போன்றவை நிலையை மாற்றக்கூடும்.
3. கூகிளின் கேள்வி பதில் சேவை, Google Apps உடன் சேர்த்துக்கொள்ளப்படும்.
இதில எனக்கு சந்தேகம்இருக்கு.. பாப்பம்.
4. GrandCentral ஜிமெயிலுடன் இணைக்கப்படுவதோடு ஐக்கிய அமெரிக்காவில் அனைவரினதும் பாவனைக்கும் விடப்படும்.
இதனால எனக்கு ஒண்டும் ஆகப்போறேல்ல எண்டாலும் யாகூ மற்றும் MSN அரட்டை மென்பொருள்களின் சந்தையை இது மேலும் பாதிக்கும் எண்டு விளங்குது.
5. கூகிள் கைப்பேசிகளுக்கான ஒரு இணைய உலாவியை வெளியிடும். (Non-Android களுக்கும் கூட)
மொஸிலாவுக்கு இன்னுமொரு போட்டி..
6. கூகிளின் Bookmarks சேவை மேலும் சிறப்பாக மேம்படுத்தப்படும்.
இது ஒரு நல்ல விசயம். நான் என்ன சொல்லுறன் எண்டா பேசாம கூகிள் Delicious வாங்கி, கூகிள் குரோமோடையும் அதை சேத்து விடலாம்.
7. கூகிள், கூகிள் குரோமின் சில வசதிகளை மற்றைய இணைய உலாவிகளுக்கும் கொண்டு வரும்.
8. கூகிள் மொழிபெயர்ப்பு சேவை மற்றைய கூகிள் சேவைகளுடன் இணைக்கப்படும்.
இப்பவே கூகிள் ரீடரில நான் ஜப்பானிய மொழி வலைப்பதிவெல்லாம் வாசிக்கிறன். இனி ஜப்பானில இருக்கிற நண்பருக்கு ஜப்பானிய மொழியிலவே ஒரு மின்னஞ்சல் இலகுவா அனுப்பலாம்.
9. கூகிள் ரீடர் வாசகர்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரபல இடுகைகளை வரிசைப்படுத்தி காட்டும்.
இது Customize பண்ணக்கூடியதா இருந்தா இன்னமும் நல்லம்.
10. Google Maps Live – Google’s service will showcase webcams that stream from all around the world, it will include a tab for Google Earth and the most recent custom maps, reviews and map edits from your contacts.
அட, நல்லாத்தான் இருக்கு.. அப்ப Privacy எண்டு சொல்லுவாங்களே அது எங்க போயிரும்.
11. கூகிள் Contacts மேலும் மேம்படுத்தப்பட்டு தனி சேவையாக வெளியிடப்படும்.
அப்பிடியே OpenID உம் சேந்தா நல்லா இருக்கும்.
12. கூகிள் தனது குரோம் இணைய உலாவியை பிரபலப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள், கூகிள் தொடர்பான மக்களின் எண்ணத்தை மாற்றக்கூடும்.
இப்பவே முறைப்பாடுகள் வரத்தொடங்கிவிட்டுது. போகப்போக என்ன நடக்குமோ..
13. மிரிசா மேயர் உட்பட பலர் கூகிளை விட்டு விலகக்கூடும்.
இன்னொரு குயில் அல்லது யாகூ 2.0
14. Google Apps மேலும் பிரபலம் பெறும்.
ஜாவா, Open office, Chrome, ??????
15. Personalized search ads
இப்பவே அப்பிடித்தான் இருக்கு…
16. OneGoogle – அனைத்து கூகிள் சேவைகளும் ஒரே இடத்தில் ஒரே மாதிரியான வடிவமைப்பில் இலகுவாக இடம்மாறக்கூடிய வகையில்.
ம் இது எல்லாம் நல்ல தான் இருக்கு ஆனா GMAIL ல் மட்டும் அடிக்கடி பிழைச்செய்திகளை காட்டி எரிச்சல் படுத்துகின்றதும். கூகிள்டாக் இடையிடையே இணைப்பை துண்டிப்பதும் மிகவும் எரிச்சலாக உள்ளதே. அதை அவர்கள் சரிசெய்தால் மிகவும் நல்லதாய் அமையும் 2009.
//GMAIL ல் மட்டும் அடிக்கடி பிழைச்செய்திகளை காட்டி எரிச்சல் படுத்துகின்றதும்.//
பிழைச்செய்தியை உடன காட்டினால் பறவாயில்லை . .
(2MB fileஐ அனுப்பும் போது அனுப்பிறமாதிரிசெய்துபோட்டு கடைசிநேரத்தில அனுப்பேலாதெண்டு சொல்லும்)
இலங்கேஸ்வரன் வாங்க,
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. எனக்கும் நீங்க குறிப்பிடுகிற பிரச்சனை இருக்கு. ஆனா வேகமான இணைய இணைப்புகளை பயன்படுத்தினா ஒரு பிரச்சனையும் இல்லாமல் இவை வேலை செய்யும்.
மயா,
ஜிமெயில் பூரணமா தரவிறங்க முதல் ஏதாவது கோப்பை அனுப்ப முட்பட்டால் அப்பிடி பிழைச்செய்தி வரும். இது கூகிளுக்கு மட்டும் எண்டு இல்லை. எல்லா மின்னஞ்சல் சேவைக்கும் தான்.