இரு கவிராயர்
இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் எழுதிய இலக்கிய வழி எனும் நூலில் (திருத்தப்பதிப்பு – 1964) இருந்து எடுக்கப்பட்ட இந்த பாடல்களை ருசித்துப்பாருங்கள்.
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வேட்டைத்திருவிழாவினை பற்றி முத்துக்குமார கவிராயர் பாடிய இந்த பாடலை பாருங்கள்.
முடிவி லாதுறை சுன்னாகத் தான்வழி
முந்தித் தாவடிக் கொக்குவின் மீதுவந்
தடைய வோர்பெண்கொ டிகாமத் தாளசைத்
தானைக் கோட்டைவெ ளிகட் டுடைவிட்டாள்
உடுவி லான்வரப் பன்னாலை யான்மிக
உருத்த னன்கடம் புற்றமல் லாகத்தில்
தடைவி டாதனை யென்றுப லாலிகண்
சார வந்தனள் ஓரிள வாலையே
இதே போல நல்லூர் கந்தசுவாமி கோவிலின் கொடியேற்றம் பற்றி சேனாதிராய கவிராயர் பாடுவதை பாருங்கள்
திருவாரும் நல்லைநகர்ச் செவ்வேற் பெருமானார்
இருபாலைக் குயத்தியரோ டின்பமுற்றா ரம்மானை
இருபாலைக் குயத்தியரோ டின்பமுற்றா ராமாயின்
தருவாரோ சட்டிகுடஞ் சாறுவைக்க அம்மானை
தருவார்காண் சட்டிகுடஞ் சாறுவைக்க அம்மானை.
இப்பாடல்களின் பொருளை பிறிதொரு பதிவில் தருகிறேன்.
பகீ!
இன்றைய இளைஞர்களும்,கவிஞர்களும் படித்துக் கவித்துவத்தின் அழகை,ஆழத்தை உணரவேண்டிய; அருமையான சிலேடைப் பாடலப்பா!!! இவற்றைத் தேடிக் கொண்டிருந்தேன். தந்ததற்கு மிக்க நன்றி!!
இப் பாடல்கள் இணையத்தில் இருந்தால் சுட்டி தரவும். உங்களிடம் புத்தகம் இருந்தால்; அதில் விற்குமிட விலாசமிருந்தால் எனக்குத் தரமுடியுமா???. இப்போதும் புத்தகம் கிடைக்குமா???கிடையாதெனில் எனக்கோர் பிரதி தரமுடியுமா?? உங்கள் பதிலை என் மின்னஞ்சலுக்கு இடவும். ஆர்வத்துடன் எதிர் பார்க்கிறேன்.
johan54@free.fr
யோகன் பாரிஸ்