தெய்வம் எல்லோர் சித்தத்தினு முண்டு

யோகர் சுவாமி அருளிச்செய்த நற்சிந்தனையில் வரும் பாடல் இதுவாகும்.

தெய்வம் எல்லோர் சித்தத்தினு முண்டு
உய்யும் மார்க்கம் உணர்ந்தோர்க் குண்டு
பொய்யும் பொறாமையும் புன்மையோர்க் குண்டு
ஐயன் அடியிணை அன்பர்க் குண்டே

கல்லா தார்பாற் கபட முண்டு
எல்லா ரிடத்து மீச னுண்டு
வில்லா ரிடத்தில் வீத்தொழில் உண்டு
எல்லாச் சக்தியும் இறைபால் உண்டே

தேடுவார் மாட்டுச் செல்வம் உண்டு
தேடுவார் மாட்டுத் தெய்வம் உண்டு
நாடுவார் மாட்டு நன்மை உண்டு
பாடுவார் மாட்டுப் பரமன் உண்டே

சீவன் சிவனெனல் தேறினோர்க் குண்டு
ஆவதும் அழிவதும் அசடர்க் குண்டு
ஈவது விலக்கார்க் கெல்லா முண்டு
தேவ தேவன் திருவடி உண்டே

அன்பு சிவமெனல் அறிஞர்க் குண்டு
பொன்புரை மேனி புனிதர்க் குண்டு
தன்போற் பிறரெனல் தக்கோர்க் குண்டு
விண்போல் விரிவு மேலோர்க் குண்டே

வீத்தொழில் – கொல்லுந்தொழில்

குறிச்சொற்கள்: , , ,

2 பின்னூட்டங்கள்

  1. யோகன் பாரிஸ்(Johan-Paris) சொல்லுகின்றார்: - reply

    பகீ!
    அருமையான பாடல், இறையியல்பை
    எவ்வளவு இலகுவாகச் சொல்லியுள்ளார்.
    இலகுதமிழ் கவியாக..
    தொடர்ந்திடவும்.
    நன்றி

  2. பகீ சொல்லுகின்றார்: - reply

    ஆமாம் யோகன் அண்ணா..

    நிச்சயமாக நல்ல பாடல்கள் அகப்படும் போது பதிவிடுகின்றேன்.

    உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.