இலக்கியம்

இலக்கியம் சார் பதிவுகள்.

நற்சிந்தனை

நல்லூரான் திருவடிநல்லூரான் திருவடியைநான்நினைத்த மாத்திரத்தில்எல்லாம் மறப்பேனடி - கிளியேஇரவுபகல் காணேனடி.ஆன்மா அழியாதென்று அன்றெனக்குச் சொன்னமொழிநான்மறந்து போவேனோடி - கிளியேநல்லூரான் தஞ்சமடிதேவர் சிறைமீட்டசெல்வன் திருவடிகள்காவல் எனக்காமடி - கிளியேகவலையெல்லாம் போகுமடிஎத்தொழிலைச் செய்தாலென்எதவத்தைப் பட்டாலென்கந்தன் திருவடிகள் - கிளியேகாவல் அறிந்தி்டெடிபஞ்சம்படை வந்தாலும்பாரெல்லாம் வெந்தாலும்அஞ்சுவோமோ நாங்களடி - கிளியேஆறுமுகன் தஞ்சமடிசுவாமி யோகநாதன்சொன்ன திருப் பாட்டைந்தும்பூமியிற் சொன்னாலெடி - கிளியேபொல்லாங்கு தீருமெடி.

மேலும் வாசிக்க →

பறாளை விநாயகர் பள்ளு

சுந்தரிக்காக வென்று இப்பதிவுபறாளை விநாயகர் பள்ளு நல்லூர் சின்னத்தம்பிப்புலவர் செயத நூலாகும். இது சுழிபுரத்திலுள்ள பறாளை என்னுந் தலத்தில் எழுந்தருளியிருக்கும் விநாயகப்பெருமானை பாட்டுடைத்தலைவனாக கொண்டு பாடப்பட்ட பள்ளுப்பிரபந்தமாகும். இத்தகய நூல்களின் இலக்கணத்துக்கமைய மூத்தபள்ளி, இளையபள்ளி, பள்ளன், பண்ணைக்காரன் ஆகிய நான்கு பாத்திரங்களைக்கொண்டு பறாளை விநாயகர் பெருமை தோன்றச் சிந்தும் விருத்தமும் கலிப்பாவும் விரவிச் செய்யப்பட்டுள்ளது. இதில் வரும் மூத்தபள்ளி ஈழமண்டலப் பள்ளியாயும் இளையபள்ளி சோழமண்டலப்பள்ளியாயும் காட்சியளிக்கிறார்கள்.இந்நூலிற் காப்புச்செய்யுள் வழக்கத்துக்கு ...

மேலும் வாசிக்க →

சூத்திரஞானம்

வால்மீகரின் சூத்திரஞானத்திலிருந்து 2ம் மற்றும் 3ம் பாடல்கள் உங்கள் பார்வைக்காக.வந்ததுவும் போனதுவும் வாசி யாகும் வானில் வரும் ரதிமதியும் வாசி யாகும் சிந்தைதெளிந் திருப்பவனா ரவனே சித்தன் ...

மேலும் வாசிக்க →

கதிரைச் சிலேடை வெண்பா 17-20

நற்குணமு ளோருமரு ணாடுசிவ யோகியருங் கற்பங் கடக்குங் கதிரையே - வெற்பரிந்தோன்தூவியா கத்தற் சுமப்பா னருள்புரிந்தமாவியா கத்தன் மலை (18)வெற்பு அரிந்தோன் - மலையின் சிறகை அரிந்த இந்திரன், தூவியாகத் தற் சுமப்பான் அருள் புரிந்த - மயிலாகத் தன்னைச் சுமக்குமாறு அருள் புரிந்த, மாவியாகத்தன் மலை - பெருமைமிக்க விசாகத் திருநாளுக்குரியவனாகிய முருகக் கடவிளினது மலை, நற்குணமுள்ளோர் - நற்குணமுடைய பெரியோர், கற்பு அங்கு அடக்குங் கதிரையே - ...

மேலும் வாசிக்க →

கதிரைச் சிலேடை வெண்பா 16,17

பின்னூட்டங்களின் பின் இந்த இரு பாடல்களையும் பொருளுடன் பதிந்திருக்கிறேன். உங்கள் கருத்துகளை பின்னூட்டமிடுங்கள்.சொற்புலவர் தூக்கினிலுந் தூயமலர்ச் சோலையிலுங்கற்பு மலருங் கதிரையே - வெற்புடனேமாமூல வேரறுத்து வாழ்வமரர்க் கீந்தவஞ்ச மாமூல வேரறுப்பான் வைப்பு (16)வெற்புடனே - மகேந்திர மலையுடனே, மா மூல வேரறுத்து - அம்மலையிலுள்ள அரக்கர் குலத்தின் பெரிய மூலவேராகிய சூரனையும் அழித்து, அமரர்க்கு வாழ்வு ஈந்த - தேவர்களுக்கு அமரவாழ்வை முன்போலக் கொடுத்தவனாகிய, வஞ்ச மாமூல வேரறுப்பான் - ...

மேலும் வாசிக்க →