புதிய வகை Flash Memory

வழமையாக நாங்கள் பயன்படுத்துகின்ற flash memoryகள் ஒரு குறிப்பிட்ட கொள்ளளவை கொண்டவை (256mb, 512mb). இதனால் எங்கள் தேவைகள் அதிகரிக்கின்ற போது ஒன்று நாங்கள் இரண்டு மூன்று memory களை வைத்திருக்க வேண்டும் அல்லது பழையதை வைத்துவி்ட்டு ஒரு புதிய கொள்ளளவு கூடிய flash memory இனை வாங்க வேண்டும் (நான்கூட முதலில் வைத்திருந்த flash memory 64 Mb கொள்ளளவம் உடையது(2002) பின்னர் 256, 512 என வளர்ந்து இப்போது 2Gb (2006 september) இல் வந்து நிற்கின்றது. பழையவைகள் அனேகமான நேரங்களில் பயன்படுத்தப்படாது கிடக்கின்றன).

இந்த பிரச்சனைகளின் தீர்வாக வந்திருக்கின்றது இந்த புதிய flash memory. இதில் ஒரு male connector மற்றும் ஒரு female connector உண்டு. male connector இனை கணினியுடன் இணைக்கலாம். மேலதிக கொள்ளளவம் தேவை எனின் இன்னுமொரு memory இன் male connector இனை முன்னயதன் female connector உடன் இணைத்துவிட்டால் சரி. தேவையான கொள்ளளவம் கிடைத்துவிடும்.


ஆனால் ஒரு 300Mb கொள்ளளவம் உள்ள கோப்பினை கொண்டு செல்ல இரண்டு 256Mb கொள்ளளவம் கொண்ட memory களை இணைத்தால் அது சரிப்படுமா எனத்தெரியவில்லை. ஆனால் அதற்கு மென்பொருட்கள் உண்டு.

குறிச்சொற்கள்:

4 பின்னூட்டங்கள்

  1. Anonymous சொல்லுகின்றார்: - reply

    web 2.0 வா?! நடத்துஙக! நடத்துஙக!

    அருமையான மாற்றஙகள்

  2. Anonymous சொல்லுகின்றார்: - reply

    web 2.0 வா?! நடத்துஙக! நடத்துஙக!

    அருமையான மாற்றஙகள்

  3. பகீ சொல்லுகின்றார்: - reply

    வாங்க அனானி அதுக்குதான் முயற்சி பண்ணுறன் . இன்னும் கனக்க வேலை இருக்கு்

  4. பகீ சொல்லுகின்றார்: - reply

    வாங்க அனானி அதுக்குதான் முயற்சி பண்ணுறன் . இன்னும் கனக்க வேலை இருக்கு்