ஊரோடி மைதானம்

கொஞ்சக்காலமா ஊரோடி எண்ட பெயரில விசயம் இருக்கோ இல்லையோ ஏதோ அலட்டிக்கொண்டிருக்கிறன். இப்ப புதுசா ஒரு ஆசை வந்து செய்யத்தொடங்கியிருக்கிறது தான் இந்த ஊரோடி மைதானம். இந்த புளொக்கர் எஞ்சின் (Back end) இல என்னவிதமா நாங்கள் ஏதாவுது மாற்றங்கள் செய்யலாம், அல்லது front end இல எனக்கு (ஓரளவுக்கு) தெரிஞ்ச ஜாவா(Java), அக்சன்ஸகிரிப்ட்(AS 2), பிளெக்ஸ்(flex), php இதுகளை வச்ச என்னென்ன மாறுதல்கள் செய்யலாம். புதுசா ஏதாவது செய்தா சரியா வேலை செய்யுதா எண்டு பாக்கிற விளையாட்டு மைதானம் தான் இது. அதவிட ஏதோ புளொக்கர் அபி எண்டு அதையும் ஒரு ஆசையில எடுத்து படிக்கத் தொடங்கி இருக்கிறன். எங்க போய் முடியுதோ தெரியேல்ல. இதையெல்லாம்
ஊரோடியிலயே செய்து பாக்கலாம்தான் ஏதாவது பிசகிபோன என்ன செய்யிறது எண்ட பயத்திலதான் புதுசா ஒரு இடம். இருந்தாலும் இப்ப எங்கட இடத்தில இருக்கிற இணையத்தின்ர வேகத்திலயும் இணையம் பாவிக்ககூடிய நேரத்திலும் இதை தொடங்கியிருக்கிறன். ஏதோ ஒரு துணிவுதான். இத தமிழ்மணத்தில இணைக்கிற பிளான் ஒண்டும் இல்லை. எனக்கு இதில உதவி செய்யிறன் எண்டொருபெடியள் சொல்லியிருக்கிறாங்கள். பாப்பம் ஏதாவது பிரியோசனம் வருகுதோ எண்டு (பிரியோசனம் வராட்டியும் பிரச்சனை வராட்டி சரிதான்).

http://oorodiground.blogspot.com

குறிச்சொற்கள்:

4 பின்னூட்டங்கள்

  1. கானா பிரபா சொல்லுகின்றார்: - reply

    செய்யுங்கோ பாப்பம்,

  2. கானா பிரபா சொல்லுகின்றார்: - reply

    செய்யுங்கோ பாப்பம்,

  3. johan -paris சொல்லுகின்றார்: - reply

    பகீ!
    சரியான வேலை செய்தீர்கள்; இப்படியான பரிசோதனைக்கு ,படிப்புக்கென்று ,இன்னும் ஒன்றை உருவாக்கியதே! மிகப் புத்திசாலித்தனம்.இத்துறையை நன்கு பரீட்சித்து, எங்களுக்கும் உதவுங்கள் அடுத்து; வானம்பாடி இன்னும் பறக்கவில்லை. அப்படியே “என் பார்வை” போல் இருக்கிறது.
    யோகன் பாரிஸ்

  4. johan -paris சொல்லுகின்றார்: - reply

    பகீ!
    சரியான வேலை செய்தீர்கள்; இப்படியான பரிசோதனைக்கு ,படிப்புக்கென்று ,இன்னும் ஒன்றை உருவாக்கியதே! மிகப் புத்திசாலித்தனம்.இத்துறையை நன்கு பரீட்சித்து, எங்களுக்கும் உதவுங்கள் அடுத்து; வானம்பாடி இன்னும் பறக்கவில்லை. அப்படியே “என் பார்வை” போல் இருக்கிறது.
    யோகன் பாரிஸ்