ஊரோடியை கேளுங்கள்!

நீண்டகாலமாகவே இருந்து வந்த ஒரு யோசனை இன்றுதான் சாத்தியமாகி உள்ளது. எனது மின்னஞ்சலுக்கு அடிக்கடி வேர்ட்பிரஸ், தமிழில் வேர்ட்பிரஸ் மற்றும் இணையமூடு வேலைசெய்தல் தொடர்பான கேள்விகள் வருவதுண்டு. அவற்றில் சில கேள்விகள் மீள மீள கேட்கப்படுபவையாக இருப்பதனால் அவற்றை பொதுவில் அனைவரும் பார்க்கக்கூடியதாக வைப்பதற்காக ஊரோடியை கேளுங்கள் என்ற இணையத்தை உருவாக்கியிருக்கின்றேன்.

வேர்ட்பிரஸ், ஜூம்லா, சிஎஸ்எஸ், இணைய மென்பொருள்கள், மக், இணையத்தூடு சம்பாதித்தல், மென்பொருள் தமிழாக்கம் போன்ற விடயங்களில் உங்களுக்கு எழும் கேள்விகளை நீங்கள் இங்கே கேட்கலாம். இதன்மூலம் பதிவிற்கு சம்பந்தமில்லாத பின்னூட்டங்களையும் தவிர்க்க முடியும்.

இவ்விணையத்தில் நான் மட்டும் பதிலளிப்பது என்றில்லாமல் பதில் தெரிந்த எவரும் பதிலளிக்க முடியும். இவ்விணையத்தளத்தை வேர்ட்பிரஸ் 3.1 தமிழ் மொழிபெயர்ப்புக்கான ஒரு பரிசோதனை இடமாகவும் பயன்படுத்த எண்ணியுள்ளேன்.

அன்புடன்
பகீ

குறிச்சொற்கள்: ,

8 பின்னூட்டங்கள்

  1. மதிசுதா சொல்லுகின்றார்: - reply

    நன்றி… வாழ்த்துக்கள்..

  2. Dharshan சொல்லுகின்றார்: - reply

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

  3. yoga சொல்லுகின்றார்: - reply

    very good idea bahi

  4. நீச்சல்காரன் சொல்லுகின்றார்: - reply

    நல்ல முயற்சி நானும் கேள்விகள் கேட்கிறேன்.

  5. பகீ சொல்லுகின்றார்: - reply

    யோகா, மதிசுதா, நீச்சல்காரன்,

    உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி.

  6. uorodi veerakumar சொல்லுகின்றார்: - reply

    தம்பி…உங்கள் ஊரோடி பெயர் என்னை உங்களுடன் தொடர்பு கொள்ள வைத்தது..நானும் ஊரோடி எனும் பெயரில் தமிழகத்தில் எழுதி வருகின்றேன்..