ஐடியாவை சொல்லுங்க, பணத்தை வெல்லுங்க

தமிழ் வலைப்பதிவுகளில் பொதுவாக ஆங்கில பதிவுகளில் காணப்படுவது போல போட்டிகள் வைக்கப்படுவது குறைவு. அதற்கான தேவைகளும் இல்லாதிருப்பது ஒரு காரணம். இதோ அனைவரும் இலகுவாக கலந்துகொள்ளக் கூடிய ஒரு போட்டி.

போட்டிப் பரிசுகள்
முதற்பரிசு :- 4000.00 இலங்கை உரூபாக்கள் அல்லது சமமான அமெரிக்க டொலர்கள்
இரண்டாம் பரிசு : 2000.00 இலங்கை உரூபாக்கள் அல்லது சமமான அமெரிக்க டொலர்கள்

இதைவிடவும் இப்போட்டியை பற்றி தங்கள் வலைப்பதிவூடாகவோ அல்லது twitter மற்றும் facebook ஊடாக மற்றவர்களுக்கு தெரியப்படுத்துபவர்களுக்கும் பரிசு உண்டு. அதற்கு நீங்கள் உங்களுக்கு விரும்பிய முறையில் மற்றவர்களுக்கு அறிவித்து பின் பின்னூட்டத்தில் அதனை தொடுப்போடு தெரிவிக்கவேண்டும்.

பரிசு: இருவருக்கு தலா 1000.00 இலங்கை உரூபாக்கள் அல்லது சமமான அமெரிக்க டொலர்கள்.

விபரம்:
அனேகம் பேர் எனது யாழ்ப்பாணம் இணையத்தளத்தை ஒருமுறையாவது பார்த்திருக்ககூடும் (யாழ்ப்பாணத்துடன் தொடர்புடையவர்களாயிருப்பின்). அவ்விணையத்தளம் தொடங்கப்பட்டு மூன்று வருட காலத்துள் பலமுறை மீளமீள வடிவமைப்பு செய்து வந்திருக்கின்றேன். இருப்பினும் அங்கிருக்கின்ற அனைத்து விடயங்களையும் சரியாக வௌிப்படுத்த ஒரு வடிவமைப்பை இதுவரை என்னால் உருவாக்க முடியவில்லை.

போட்டி:
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் முதற்பக்கத்திற்கு ஒரு கோட்டு வரிப்படம் (homepage layout mockup) ஒன்றை வரைந்து அனுப்ப வேண்டும். யாழ்ப்பாணம் இணையத்தளத்தூடு சென்று மற்றைய பக்கங்களுக்கும் Layout அனுப்ப விரும்பினால் அனுப்பலாம். நீங்கள் ஒரு கடதாசியில் வரைந்து scan செய்தோ அல்லது நேரடியாக கணினியில் வரைந்தோ அனுப்பலாம். layout கள் சரியாக குறிக்கப்பட்டிருக்க வேண்டும். புதுமையான Layout இற்கு முன்னிடம் வழங்கப்படும்.

விதிமுறைகள்
1. பரிசு இலங்கையராயின் வங்கி மூலமாகவும், வேறு நாட்டவராயின் paypal மூலமாகவும் அனுப்பப்படும்.
2. எவரும் பங்குபற்றலாம்.
3. layout கள் (bage@me.com) இற்கு மின்னஞ்சல் செய்யப்படவேண்டும். நான் பதிலிடுவேன்.
4. போட்டியை பிரபலப்படுத்துபவர்கள் sql query மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்
5. Layout இனை அனுப்புவர் பிரபலப்படுத்துவதிலும் பங்கு பற்றலாம்.
6. போட்டிக்காலம் 01-11-2011 தொடக்கம் 07-11-2011 வரை.

ஏதேனும் கேள்விகள் இருப்பின் கேளுங்கள்.

குறிச்சொற்கள்: , ,

5 பின்னூட்டங்கள்

  1. இலகுவாக Mockupகளை வரைதல் சொல்லுகின்றார்: - reply

    […] எனது mockup வரைந்து பணத்தினை வெல்லும் போட்டி பற்றிய விபரத்தில் உங்களை ஒரு mockup வரைந்து அனுப்புமாறு […]

  2. இம்பாஸ் சொல்லுகின்றார்: - reply

    நான் இப்போதுதன் உங்கள் போட்டியை கண்டேன். எனது வடிவமைப்பையும் அனுப்ப முடியுமா?

  3. Rim சொல்லுகின்றார்: - reply

    பகீ
    எனது இங்கே. http://imageshack.us/f/9/thejaffnafinal.jpg/
    உங்கள் கருத்தை சொல்லவும்.

  4. இலகுவாக Mockupகளை வரைதல் சொல்லுகின்றார்: - reply

    […] எனது mockup வரைந்து பணத்தினை வெல்லும் போட்டி பற்றிய விபரத்தில் உங்களை ஒரு mockup வரைந்து அனுப்புமாறு […]

  5. vivek சொல்லுகின்றார்: - reply

    oorodi.
    potti mutivukalai arinthukolla mutiyuma?
    muthalavathu vantha template design um publish pannalame.