மலைநாடானுக்கு நன்றிகள்.

எல்லாற்ற பதிவுகளும் தமிழ்மணத்தில காட்டுப்படுறது என்றது பொதுவானது. ஆனா என்னுடைய ஊரோடி வானொலியில தெரிஞ்ச செய்தி உங்களுக்கு தெரியுமோ தெரியாது. அப்பிடி தெரிய வைச்சவர் மலைநாடான். தனது இன்பத்தமிழ் வானொலி நிகழ்ச்சியில என்னுடைய இந்த பதிவை பற்றி அறிமுகம் செய்து வைச்சிருக்கிறார். இது நிச்சயமா என்னோடு வாசகர்களின்ர அல்லது விருந்தினர்களின்ர எண்ணிக்கையை கூட்டும் என்பது ஒருபக்கம் இருக்க நானும் ஏதோ எழுதிறன் எண்டு இரண்டு மூன்று பேராவது நினைக்கிறார்கள் எண்டு ஒரு சந்தோசம்.

மலைநாடானுடன் எனது பழக்கம் நிச்சயமாக மண்ணிலிருந்தே உருவானது என நினைக்கின்றேன். ஏனென்றால் எத்தனை பதிவுகள் இருந்தாலும் நான் முதலில் ஈழத்தவர்களின் பதிவு என்றால் உடன் சென்று வாசிப்பது வழக்கம். இதற்காக நான் யாரையும் வெறுக்கின்றேன் என்று அர்த்தமல்ல. அப்படி வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு கூட நான் இருப்பதில்லை. இருந்தாலும் தமிழ்மணத்தின் முகப்பில் அந்த பெயர்களை கண்டவுடன் எனது விரல் தானாகவே அந்த தொடுப்புகளை சொடுக்கிவிடும். அப்படித்தான் மலைநாடானின் பக்கங்கள் எனக்கு தெரிய வந்தது, அவருக்கும் அவவாறு இருக்கக்கூடும். அதன்பின் ஜிமெயிலின் அரட்டை மூலம் சிலதடைவைகள் சுகம் விசாரித்திருக்கின்றோம். யாழ்ப்பாண செய்திகள் பரிமாறியிருக்கின்றோம். ஆனால் மிக நீண்ட நாட்கள் பழகிய நண்பர்கள் போல மனதில் ஒரு எண்ணம். மலைநாடானுக்கு எப்படியோ தெரியவில்லை. இப்படியான பழக்கம் மலைநாடானுடன் மட்டுமல்ல வேறு பல ஈழத்து பதிவர்களுடன்தான்.

சரி அப்பிடியே மலைநாடானின் அந்த நிகழ்ச்சியை கேட்க இங்கு சொடுக்குங்கள்.

குறிச்சொற்கள்: ,

28 பின்னூட்டங்கள்

 1. ரவிசங்கர் சொல்லுகின்றார்: - reply

  வாழ்த்துக்கள் பகீ.

  கூகுள் தன் விருப்பப்பக்கத்தில் அழகழகாய் தோற்றக்கருக்கள் (themes) வந்திருக்கு. பார்த்தீங்களா? கூகுளின் அதிகாரப்பூர்வத் தமிழ் செய்தியாளர் 🙂 என்ற முறையில் நீங்களே அத பதிவா போட்டிரலாம்

 2. கானா பிரபா சொல்லுகின்றார்: - reply

  உங்கள் திறமைக்குக் கிடைத்த பரிசு, தொடர்ந்தும் எழுதுங்கள்

 3. கானா பிரபா சொல்லுகின்றார்: - reply

  உங்கள் திறமைக்குக் கிடைத்த பரிசு, தொடர்ந்தும் எழுதுங்கள்

 4. ரவிசங்கர் சொல்லுகின்றார்: - reply

  வாழ்த்துக்கள் பகீ.

  கூகுள் தன் விருப்பப்பக்கத்தில் அழகழகாய் தோற்றக்கருக்கள் (themes) வந்திருக்கு. பார்த்தீங்களா? கூகுளின் அதிகாரப்பூர்வத் தமிழ் செய்தியாளர் 🙂 என்ற முறையில் நீங்களே அத பதிவா போட்டிரலாம்

 5. யோகன் பாரிஸ்(Johan-Paris) சொல்லுகின்றார்: - reply

  பகீ!
  உங்களைப் போன்ற திறமைமிக்க;அதுவும் மிக இக்கட்டான சூழலில் அதை வெளிப்படுத்துவோரை ; வெளிக் கொணர்வதுதான் மிக நன்று; அதை மலை நாடர் நல்லபடி செய்துள்ளார்.

 6. யோகன் பாரிஸ்(Johan-Paris) சொல்லுகின்றார்: - reply

  பகீ!
  உங்களைப் போன்ற திறமைமிக்க;அதுவும் மிக இக்கட்டான சூழலில் அதை வெளிப்படுத்துவோரை ; வெளிக் கொணர்வதுதான் மிக நன்று; அதை மலை நாடர் நல்லபடி செய்துள்ளார்.

 7. செந்தழல் ரவி சொல்லுகின்றார்: - reply

  உங்களுக்கு வாழ்த்தும், மலைநாடனுக்கு நன்றிகளும்…!!!

 8. செந்தழல் ரவி சொல்லுகின்றார்: - reply

  உங்களுக்கு வாழ்த்தும், மலைநாடனுக்கு நன்றிகளும்…!!!

 9. பகீ சொல்லுகின்றார்: - reply

  ரவிசங்கர் வாங்க. அதிகாரபூர்வ எழுத்தாளரா??? அட இது நல்லாத்தான் இருக்கு. ஆனா நான் அதைப்பயன்படுத்திறது இல்லை. நீங்க சொன்னாப்பிறகுதான் இப்ப போய்ப்பாத்திருக்கிறன். இனி பதிவு போட வேண்டியதுதான்.

  கானா பிரபா நன்றி உங்கள் வாழ்த்துகளுக்கு.

 10. பகீ சொல்லுகின்றார்: - reply

  ரவிசங்கர் வாங்க. அதிகாரபூர்வ எழுத்தாளரா??? அட இது நல்லாத்தான் இருக்கு. ஆனா நான் அதைப்பயன்படுத்திறது இல்லை. நீங்க சொன்னாப்பிறகுதான் இப்ப போய்ப்பாத்திருக்கிறன். இனி பதிவு போட வேண்டியதுதான்.

  கானா பிரபா நன்றி உங்கள் வாழ்த்துகளுக்கு.

 11. பகீ சொல்லுகின்றார்: - reply

  யோகன் அண்ணா, உங்கள் பின்னூட்டத்தை நிச்சயமாக எதிர்பார்த்தேன். உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

  செந்தழல் ரவி வாங்க. உங்க வாழத்துக்கு நன்றி. அதுசரி உங்களை யார் கூகிள் வேலைக்கு கூப்பிட்டிருக்கிறதை பதிவா போட சொன்னது?? நான்தான் உத்தியோக பூர்வ அறிவிப்பாளர் தெரியாதா?? வேணுமெண்டா ரவிசங்கரை கேட்டு பாருங்க… சும்மாதான் சொன்னேன் கோவிச்சுக்காதீங்க

 12. பகீ சொல்லுகின்றார்: - reply

 13. முதலாளி, கூகுள் சொல்லுகின்றார்: - reply

  உங்களைப் பற்றிய நிகழ்ச்சி கேட்டேன். மொழி புரியாததால் மொழி பெயர்த்து கேட்டேன். வாழ்த்துக்கள்.

 14. முதலாளி, கூகுள் சொல்லுகின்றார்: - reply

  உங்களைப் பற்றிய நிகழ்ச்சி கேட்டேன். மொழி புரியாததால் மொழி பெயர்த்து கேட்டேன். வாழ்த்துக்கள்.

 15. சின்னக்குட்டி சொல்லுகின்றார்: - reply

  வணக்கம் பகீ… வாழ்த்துக்கள்… இந்த சிரமத்தில் மத்தியிலும் யாழிலிருந்து பதியும் ஒரே வலை பதிவர் என்ற சிறப்பு உங்களுக்கு இருக்கிறது. உங்கள் சிறப்பை மேலும் வெளிச்சம் போட்டு காட்டிய மலைநாடருக்கும் நன்றிகள்.

 16. வி. ஜெ. சந்திரன் சொல்லுகின்றார்: - reply

  பகீ உங்கள் வலைப்பதிவை பற்றி மலைநாடானின் பதிவு மூலமாக தான் அறிந்து கொண்டேன். இக்கட்டான சூழலில் இருந்து வலைப்பதியும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

 17. மலைநாடான் சொல்லுகின்றார்: - reply

  //மிக நீண்ட நாட்கள் பழகிய நண்பர்கள் போல மனதில் ஒரு எண்ணம். மலைநாடானுக்கு எப்படியோ தெரியவில்லை//

  பகி!

  எல்லோர்க்கும் தன் ஊரவன் என்கின்ற ஒரு நேசம் இருப்பது இயல்பே. ஆனால் இந்நிகழ்ச்சியில் உங்களை இணைத்துக் கொண்டதற்கான முக்கிய காரணம், உங்களது வயதும், திறமையுமே. உங்களுக்கு முன் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட ரவிசங்கருக்கும் இது பொருந்தும். உண்மையில் சொல்லப் போனால் நீங்கள் இருவரும் ஏறக்குறைய என் மகனின் வயதை ஒத்தவர்கள். இளைய தலைமுறையோடு எப்போதும் எனக்கிருக்கும் நேசம்தான் இதற்கான அடிப்படை. உங்களுடனாவது இணைய பரையாடல் வழி அறிமுகம் இருந்தது. ஆனால் ரவிசங்கருடன் அறிமுகத்துகுப் பின்னரே மின்மடலில் தொடர்புகொண்டேன். அதுபோன்று செந்தழல் ரவி, என்றென்றும் அன்புடன் பாலா, திரு ஆகியோருக்குப் பாராட்டுத் தெரிவித்துப் பதிவு போட்டிருந்த போதும் கூட, திருவைத் தவிர மற்ற இருவருடனும் இதவரையில் எனக்கு மின்மடல் தொடர்பு கூட இல்லை. ஆனாலும் அவர்களின் பணிச்சிறப்பே பாராட்டத் தூண்டியது.
  இறுதியாக நீங்கள் குறிப்பிட்டது போன்று உங்களடனான தொடர்பு நீண்டநாள் நெருக்கத்தை என்னுள்ளும், ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மையே.

  உங்களைப்பற்றிய அறிமுகம், வானொலியில் மட்டுமல்லாது, இந்த ஒரு வாரகாலமும், என் இணையத்தளத்திலும் இருக்கும்,அதுபோல் இணைவில் எனும் இணைப்புப் பட்டியலில், உங்கள் தளத்துக்கான தொடர்பு தொடர்ந்திருக்கும். இது அறிமுகம் செய்யப்படும் எல்லா நண்பர்களுக்கும் பொருந்தும்.
  நன்றி.
  இணையத்தள முகவரி.
  http://www.mnnpages.ch.vu

 18. சின்னக்குட்டி சொல்லுகின்றார்: - reply

  வணக்கம் பகீ… வாழ்த்துக்கள்… இந்த சிரமத்தில் மத்தியிலும் யாழிலிருந்து பதியும் ஒரே வலை பதிவர் என்ற சிறப்பு உங்களுக்கு இருக்கிறது. உங்கள் சிறப்பை மேலும் வெளிச்சம் போட்டு காட்டிய மலைநாடருக்கும் நன்றிகள்.

 19. வி. ஜெ. சந்திரன் சொல்லுகின்றார்: - reply

  பகீ உங்கள் வலைப்பதிவை பற்றி மலைநாடானின் பதிவு மூலமாக தான் அறிந்து கொண்டேன். இக்கட்டான சூழலில் இருந்து வலைப்பதியும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

 20. மலைநாடான் சொல்லுகின்றார்: - reply

  //மிக நீண்ட நாட்கள் பழகிய நண்பர்கள் போல மனதில் ஒரு எண்ணம். மலைநாடானுக்கு எப்படியோ தெரியவில்லை//

  பகி!

  எல்லோர்க்கும் தன் ஊரவன் என்கின்ற ஒரு நேசம் இருப்பது இயல்பே. ஆனால் இந்நிகழ்ச்சியில் உங்களை இணைத்துக் கொண்டதற்கான முக்கிய காரணம், உங்களது வயதும், திறமையுமே. உங்களுக்கு முன் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட ரவிசங்கருக்கும் இது பொருந்தும். உண்மையில் சொல்லப் போனால் நீங்கள் இருவரும் ஏறக்குறைய என் மகனின் வயதை ஒத்தவர்கள். இளைய தலைமுறையோடு எப்போதும் எனக்கிருக்கும் நேசம்தான் இதற்கான அடிப்படை. உங்களுடனாவது இணைய பரையாடல் வழி அறிமுகம் இருந்தது. ஆனால் ரவிசங்கருடன் அறிமுகத்துகுப் பின்னரே மின்மடலில் தொடர்புகொண்டேன். அதுபோன்று செந்தழல் ரவி, என்றென்றும் அன்புடன் பாலா, திரு ஆகியோருக்குப் பாராட்டுத் தெரிவித்துப் பதிவு போட்டிருந்த போதும் கூட, திருவைத் தவிர மற்ற இருவருடனும் இதவரையில் எனக்கு மின்மடல் தொடர்பு கூட இல்லை. ஆனாலும் அவர்களின் பணிச்சிறப்பே பாராட்டத் தூண்டியது.
  இறுதியாக நீங்கள் குறிப்பிட்டது போன்று உங்களடனான தொடர்பு நீண்டநாள் நெருக்கத்தை என்னுள்ளும், ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மையே.

  உங்களைப்பற்றிய அறிமுகம், வானொலியில் மட்டுமல்லாது, இந்த ஒரு வாரகாலமும், என் இணையத்தளத்திலும் இருக்கும்,அதுபோல் இணைவில் எனும் இணைப்புப் பட்டியலில், உங்கள் தளத்துக்கான தொடர்பு தொடர்ந்திருக்கும். இது அறிமுகம் செய்யப்படும் எல்லா நண்பர்களுக்கும் பொருந்தும்.
  நன்றி.
  இணையத்தள முகவரி.
  http://www.mnnpages.ch.vu

 21. கரிகாலன்- karikaalan சொல்லுகின்றார்: - reply

  வணக்கம் பகி.
  யாழ்ப்பாணத்தில் இருந்து பதியும் உங்களின் பதிவினை அடிக்கடி பார்ப்பேன்.இன்றுதான் பின்னுட்டம்
  இடுகிறேன் என்ருநினைக்கிறேன்.உங்களைப்போல
  தான் ஈழத்தவரின் பதிவுகளை அடிக்கடி
  பார்ர்ப்பேன்.

  இது உங்கள் ட்திறமைக்கான பரிசு.
  தொடர்ந்து எழுத்துங்கள்.

 22. கரிகாலன்- karikaalan சொல்லுகின்றார்: - reply

  வணக்கம் பகி.
  யாழ்ப்பாணத்தில் இருந்து பதியும் உங்களின் பதிவினை அடிக்கடி பார்ப்பேன்.இன்றுதான் பின்னுட்டம்
  இடுகிறேன் என்ருநினைக்கிறேன்.உங்களைப்போல
  தான் ஈழத்தவரின் பதிவுகளை அடிக்கடி
  பார்ர்ப்பேன்.

  இது உங்கள் ட்திறமைக்கான பரிசு.
  தொடர்ந்து எழுத்துங்கள்.

 23. பகீ சொல்லுகின்றார்: - reply

  வாங்க முதலாளி. வாழ்த்துக்களுக்கு நன்றி.

  வாங்க சின்னக்குட்டி அண்ணை (அண்ணைதானே???). உங்கள் வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி.

 24. பகீ சொல்லுகின்றார்: - reply

  வாங்க முதலாளி. வாழ்த்துக்களுக்கு நன்றி.

  வாங்க சின்னக்குட்டி அண்ணை (அண்ணைதானே???). உங்கள் வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி.

 25. பகீ சொல்லுகின்றார்: - reply

  வாங்க வி.ஜே. சந்திரன். உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.

 26. பகீ சொல்லுகின்றார்: - reply

  வாங்க வி.ஜே. சந்திரன். உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.

 27. பகீ சொல்லுகின்றார்: - reply

  மலைநாடான் அண்ணா மிக்க நன்றிகள். ஊரவன் என்கின்ற உணர்வு ஊரில் ஒன்றாக இருக்கும் போது வருவதைவிட எங்கெங்கோ இருக்கும் போது அடி மனதில் இருந்து எழுகின்றது

  மீண்டும் ஒருமுறை நன்றிகள்

 28. பகீ சொல்லுகின்றார்: - reply