ஐந்து கவிதைகள் – உமாஜிப்ரான்

வசந்தனுக்காக நிலம் சஞ்சிகையில் மேற்கண்ட தலைப்பில் வெளிவந்த உமாஜிப்ரானின் கவிதைகளை தருகிறேன்.

சுகம்
பல்லரும்பா மழலை
வாய்குதப்பும் கைவிரல்
முரசழுந்தும் குறுகுறுப்பு
காதல் கவ்விக் குதப்பும் மனங்களில்

உள்ளொளி
தெளிந்த ஆழ் சுனைமனதில்
அலைகிளா அமிழ்ந்தாய்
அதிர்வுசூழ் கவிதையென
உன் சிறுசலனமும்
குமிழ் பெருக்க
சுனைமனது நுரைபூக்கும்
கவிதை கவிதையாய்.

காமம்
1
பாத்தியில் விழுந்து
தெறிக்காது தவழ்ந்து
வடிந்தடங்கும் பக்குவமாய்.
2
தறிகெட்டு பாய்ந்து
பாத்திமேவி
பரவி வடிந்து
தேங்கி நாறும் சகதியாய்

காதல் வனைந்த வாழ்வு
மடியும் கன்றின் மூக்குமாய்
முட்டி முட்டி
உனதும் எனதும்
பார்வைகள் உமிந்தன
என்னையும் உன்னையும்
மிச்சமில்லாமல் கரைந்து
மிச்சமில்லாமல் நிறைந்து போனோம்
சருமத் துவாரங்களில் காதல்வழிய
வெள்ளொளியும் வாசமுமாய் விகசித்தோம்
முழுநிலவின் முகமெனச் சுடர்பொலியும்
உன் மனதில்
நிலவில் ஒளவையென
நித்தியம் என் சீவியமென்று
உச்சிக்கபாலத்தில் எழுதினோம்
ஒருவருக்கொருவர்

அலைப்புறும் மயிர்க்கீற்றுகள் ஒதுக்கி
கைகளில் ஏந்தி
கதுப்புகளில் புதையுண்டு
தழுவும் கணப்புகள் தணிவதேயில்லை.
காதலின் சுட்டுவிரல் பற்றி
வாழ்வின் வசீகரப்பொழுதுகள் நடையிட
வாழ்வு காலெடுத்த தடங்களில்
பசுந்தங்கப் படிவுகள்.

பூக்கவ்விய நாய்
பூக்கவ்வி
சலிக்காத வாலசைத்து
தெருவெல்லாம் முகர்ந்தலைந்தேன்

புழுதிபடல் நீள் தெருவில்
காத்திருந்து
வால்குழைத்துக் கால்சுற்றி
சிணுங்கினேன் செல்லமாய்,
பரிவொளிரும் பார்வை கொண்டு
மிருதுவாய் மனசளைந்து
கைசொடுக்காது கடந்து போனாய்
காட்சிகள் நீரில்மூழ்க

திருக்கோவில்களில்
நூலணிந்த கைகூப்பி
நீறணிந்து தொழுதழுது
சலிக்காது வாலசைக்கும்
பூக்கவ்வி.

குறிச்சொற்கள்: , ,

6 பின்னூட்டங்கள்

  1. மாசிலா சொல்லுகின்றார்: - reply

    “மிச்சமில்லாமல் கரைந்து
    மிச்சமில்லாமல் நிறைந்து போனோம்”
    நன்று.

    தமிழ் மொழியைத்தவிற வேறு எம்மொழியால் இவ்வளவு அழகாக பாவிக்கமுடியுமோ?

    ஊக்கங்கள்.
    தொடர்ந்து எழுதிவரவும்.
    நன்றி.

  2. மாசிலா சொல்லுகின்றார்: - reply

    “மிச்சமில்லாமல் கரைந்து
    மிச்சமில்லாமல் நிறைந்து போனோம்”
    நன்று.

    தமிழ் மொழியைத்தவிற வேறு எம்மொழியால் இவ்வளவு அழகாக பாவிக்கமுடியுமோ?

    ஊக்கங்கள்.
    தொடர்ந்து எழுதிவரவும்.
    நன்றி.

  3. பகீ சொல்லுகின்றார்: - reply

    வருகைக்கு நன்றி மாசிலா. வாழ்த்துக்கு நன்றி.

  4. பகீ சொல்லுகின்றார்: - reply

    வருகைக்கு நன்றி மாசிலா. வாழ்த்துக்கு நன்றி.

  5. sooryakumar சொல்லுகின்றார்: - reply

    அருமையான கவிதைகள். தொடர்ந்து படிக்க ஆவல். வாழ்த்துகள்.

  6. sooryakumar சொல்லுகின்றார்: - reply

    அருமையான கவிதைகள். தொடர்ந்து படிக்க ஆவல். வாழ்த்துகள்.