ரொரென்ற் கோப்பை Firefox ஆல் தரவிறக்குங்கள்
சாதாரணமாக நாங்கள் கோப்பொன்றினை இணையத்தில் இருந்து தரவிறக்க இணைய உலாவியே போதுமானது. ஆனால் ரொரென்ற் கோப்பொன்றினை தரவிறக்குவதாயின் Torrent client ஒன்று தேவைப்படும்.
தினமும் ரொரென்ற் கோப்புகளை தரவிறக்குபவர்கள் இதற்கென ஒரு மென்பொருளை வைத்திருக்க முடியும். ஆனால் ஏப்போதாவதுதான் ரொரென்ற் கோப்புகளை தரவிறக்குபர்களுக்கு ஒரு மென்பொருளை வைத்திருப்பது வீண் சுமையாத்தான் முடியும்.
இதற்கு தீர்வாக வந்துள்ளது தான் Firetorrent நீட்சி. இதனை நீங்கள் உங்கள் Firefox உலாவியில் நிறுவிக்கொண்டால் சாதாரணமாக ஒரு கோப்பை தரவிறக்குவது போல ரொரென்ற் கோப்புகளையும் தரவிறக்கிக்கொள்ள முடியும். இது இன்னமும் அல்பா பதிப்பிலேயே இருந்தாலும் மிகவும் சிறப்பாக வேலை செய்கின்றது.
இங்கே வந்து நீட்சியினை பெற்றுக்கொள்ளுங்கள்.
மிகவும் பயனுள்ளதாக இருக்கும்…
பகிர்வுக்கு நன்றி…!
நிமல் வாங்க,
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. ஒபெரா இணைய உலாவியிலும் இதுபோன்ற வசதி உண்டு.