Posts Tagged "ஊரோடி"

ஊரோடி – புதிய பரிமாணம்.

புதுவருசமும் வரப்போகுது எல்லாரும் ஏதோ புதிசா முடிவுகள் இலட்சியங்கள் எல்லாம் எடுப்பினம். ஊரோடி மட்டும் அப்பிடியே பழசா இருந்தா நல்லாஇருக்காது எண்டு சொல்லி அதுக்கும் ஒரு புதுச்சட்டை போட்டிருக்குது. இவ்வளவு காலமும் புளொக்கர் தந்த அடைப்பலகையை பாவிச்சது இப்ப புதுசா ஒண்டு. இந்த அடைப்பலகை முற்றுமுழுதா CSS மற்றும் javascript இனை பாவிச்சிருக்கு. இதில இருக்கிற விசேசங்கள் என்னெண்டா.

1. தேடு பொறி – வழமையா புளொக்கில தேடோணுமெண்டா புளொக்கர் search இனை பாவிக்க வேணும். அதில இருக்கிற பிரச்சனை திருப்பி புளொக்குக்க வாறதுக்க சீவன் போயிரும். அத்தனை தரம் back button ஐ அமத்த வேணும். ஆனா இந்த தேடுபொறி அப்பிடியில்லை. கரையிலயே ஒரு பக்கமா முடிவுகளை காட்டும் தேவையில்லையெண்டா நிப்பாட்டிவிடலாம்.

2. பிரிவுகள் – ஒவ்வொரு பதிவையும் வகைப்படுத்தி இருக்கு. அந்த வகைப்படுத்தலை அழுத்தினா உடன அதில இருக்கிற பதிவுகள் எல்லாம் காட்டுப்படும். இது ஏற்கனவே புளொக்கர் பேற்றா பாவிக்கிற ஆக்களுக்கு தெரிஞ்சாலும் இதில இருக்கிற விசேசம் என்னெண்டா இது feeds ஐ பாவிக்குது. அதால வேகமா அது தெரியும். வேறொரு பக்கம் லோட் ஆகிற வேலையெல்லம் இங்க இல்ல. (ஆனா இதை இன்னமும் சரியா நான் முடிக்கல இரண்டு நாளில எல்லா பதிவையும் சேத்திருவன்)

3. பின்னூட்டபெட்டி – இதில ஒரு விசேசமும் இல்ல. இது cocomments பின்னூட்டப்பெட்டியை பாவிக்குது. பின்னூட்டங்களை தொடரா வாசிக்க வேணுமெண்டால் இது உதவி செய்யும்.

4. புளொக்கர் Nav bar – இதில மேல இருந்த புளொக்கர் கருவிப்பட்டையை எடுத்துப்போட்டு அந்த கோப்புகளையே பயன்படுத்தி கீழ எனக்கெண்டு ஒரு கருவிப்பட்டை போட்டிருக்கிறன்.

5. படவேலைப்பாடு – இந்த அடைப்பலகையில ஒரு படமும் பயன்படுத்தப்படேல்ல. எல்லாம் CSS ஐத்தான் பயன்படுத்தியிருக்கு. வேகமா பக்கம் லோட் ஆகும்.

6. பின்னூட்டங்கள் – இந்த அடைப்பலகையில ஒரு பதிவின்ர பின்னூட்டத்தை பாக்க அந்த பதிவை தனியா எடுத்து வாசிக்கோணுமெண்டெல்லாம் இல்லை. பின்னூட்டங்கள் எண்ட லிங்கை அமத்தினா போதும் கீழு தானே வந்திரும் (பின்னூட்டங்கள் இருந்தா மட்டும்).

தொடுப்புகள் இன்னும் சேர்க்கேல்ல. நாளைக்கு அல்லது நாளைக்கு மறுநாளைக்குள்ள சேர்த்திருவன்.

இன்னும் சில வசதிகளை சேக்க இருக்கிறன்.

எல்லாத்தை விட முக்கியமான விசயம் என்னெண்டா இது நெருப்புநரி 2.0, internet explorer 7.0, Opera 9.0 க்குத்தான் வடிவா வேலை செய்யும். மற்ற உலாவிகளுக்கும் வேலைசெய்தாலும் சில வசதிகள் வேலை செய்யாது.

மிகமிக முக்கியமான விசயம் என்னெண்டா இது மொத்தமும் நான் உருவாக்கினதில்லை. அங்கங்க தூக்கி ஒண்டாக்கி சின்ன சின்ன மாற்றம் செய்தது. ஊரோடி மைதானத்தில 10 நாளா போட்டு சரியா வேலைசெய்யுதோ எண்டு பாத்து பாத்து திருத்தினது. இன்னும் பிழை இருக்கும் குறையா நினைக்காதங்கோ.

தயவுசெய்து இது சம்பந்தமான உங்கட பின்னூட்டங்கள தாங்கோ. திருத்திறதுக்கு உதவியா இருக்கும்.

12 மார்கழி, 2006

ஊரோடி மைதானம்

கொஞ்சக்காலமா ஊரோடி எண்ட பெயரில விசயம் இருக்கோ இல்லையோ ஏதோ அலட்டிக்கொண்டிருக்கிறன். இப்ப புதுசா ஒரு ஆசை வந்து செய்யத்தொடங்கியிருக்கிறது தான் இந்த ஊரோடி மைதானம். இந்த புளொக்கர் எஞ்சின் (Back end) இல என்னவிதமா நாங்கள் ஏதாவுது மாற்றங்கள் செய்யலாம், அல்லது front end இல எனக்கு (ஓரளவுக்கு) தெரிஞ்ச ஜாவா(Java), அக்சன்ஸகிரிப்ட்(AS 2), பிளெக்ஸ்(flex), php இதுகளை வச்ச என்னென்ன மாறுதல்கள் செய்யலாம். புதுசா ஏதாவது செய்தா சரியா வேலை செய்யுதா எண்டு பாக்கிற விளையாட்டு மைதானம் தான் இது. அதவிட ஏதோ புளொக்கர் அபி எண்டு அதையும் ஒரு ஆசையில எடுத்து படிக்கத் தொடங்கி இருக்கிறன். எங்க போய் முடியுதோ தெரியேல்ல. இதையெல்லாம்
ஊரோடியிலயே செய்து பாக்கலாம்தான் ஏதாவது பிசகிபோன என்ன செய்யிறது எண்ட பயத்திலதான் புதுசா ஒரு இடம். இருந்தாலும் இப்ப எங்கட இடத்தில இருக்கிற இணையத்தின்ர வேகத்திலயும் இணையம் பாவிக்ககூடிய நேரத்திலும் இதை தொடங்கியிருக்கிறன். ஏதோ ஒரு துணிவுதான். இத தமிழ்மணத்தில இணைக்கிற பிளான் ஒண்டும் இல்லை. எனக்கு இதில உதவி செய்யிறன் எண்டொருபெடியள் சொல்லியிருக்கிறாங்கள். பாப்பம் ஏதாவது பிரியோசனம் வருகுதோ எண்டு (பிரியோசனம் வராட்டியும் பிரச்சனை வராட்டி சரிதான்).

http://oorodiground.blogspot.com

7 மார்கழி, 2006

இணையத்தளங்களுக்கான கருவிகள்

இணையத்தளங்களில் பொருத்தி பயன்படுத்தக்கூடிய கருவிகள் பல கருவிகள் (gadgets) இலவசமாக இணையமெங்கும் கிடைத்தாலும், அவை குறிப்பிட்ட வசதிகளை கொண்டவையாகவும் அதைவிட விளம்பர நோக்கத்துடனுமேயே வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ் பதிபவர்கள் பலர் அவ்வாறன கஜெற்சை உருவாக்கும் வல்லமையுடையவர்களாயிருப்பதை அவர்களின் பதிவுகளிலிருந்து உணரக்கூடியதாக உள்ளது. இதனால் தமிழ் பதிபவர்கள் நாங்களாகவே எங்களுக்கு தேவையான கருவிகளை உருவாக்கிகொண்டால் அவை தேவைக்கேற்றபடி மாற்றி பயன் படுத்தக்கூடியதாக இருக்கும். இப்படி யராவது உருவாக்கினால் அவற்றை இணையத்தில் ஏற்ற நம்பிக்கையான எனது இணையப்பிரதேசத்தினை(web hosting place) தரமுடியும்.

இதன் மூலம் ஏனைய வலைப்பதிபவர்களும் பயன்பெற முடியும்.

உங்கள் பயனுள்ள கருத்துகளை எதிர்பார்க்கிறேன்

28 கார்த்திகை, 2006