Posts Tagged "திறமூல மென்பொருள்கள்"

பயனுள்ள சில திறமூல மென்பொருள்கள்

1. Notepad++
வின்டோஸ் இயங்குதளத்திற்கு கிடைக்கின்ற ஒரு மிகச்சிறந்த text editor இதுவாகும். நீங்கள் ஏதாவது ஒரு கணினி மொழியை பயன்படுத்துபவராகவும், வின்டோஸ் இயங்குதள பாவனையாளராயும் இருப்பின் இம்மென்பொருள் உங்களுக்கு ஏற்கனவே பரீட்சயமான ஒன்றாகத்தான் இருக்கும்.

இம்மென்பொருளுக்கு ஏராளமான செருகிகளும் (plugins) இருப்பது குறிப்பிடத்தக்கது. இம்முகவரிக்கு சென்றால் அவற்றுள் ஏராளமானவற்றை கண்டுகொள்ள முடியும்.

2. Blender

மிகச்சிறந்த ஒரு முப்பரிமாண உருவங்களை உருவாக்கக்கூடியதும் அவற்றினை அசை படங்களாக உருவாக்குவதற்குமான ஒரு மென்பொருள் இதுவாகும். பல வணிக ரீதியான மென்பொருட்களை விட இது அதிக வசதிகளும் இலகுவாக அனைவரும் பயன்படுத்தக்கூடியதுமாக அமைந்தள்ளது. மிகப் பிந்திய பதிப்பான Blender 2.5 பதிப்பினை கொண்டு துகள்களை (Particles) இலகுவாக உருவாக்கிவிட முடிவதால், மிகவும் கஸ்டமான சில அசைபடங்களை மிக விரைவாக உருவாக்கி விட முடிகின்றது.

3. FileZilla
வின்டோஸ் இயங்கு தளத்தில் கிடைக்கின்ற மிகச்சிறந்த இணைய தரவேற்றி இதுவாகும். நீங்கள் ஒரு சொந்த இணையத்தளத்தை வைத்திருப்பவராகவும், வின்டோஸ் இயங்குதளத்தை பயன்படுத்துபவராயுமிருப்பின் இம்மென்பொருளை நீங்கள் ஏலவே அறிந்திருப்பீர்கள். இல்லாதவர்கள் கட்டாயம் இதனை பயன்படுத்தி பாரக்கவேண்டும்.

இம்மென்பொருளின் மிகப்பிந்திய பதிப்பு FTP, FTPS, SFTP போன்றவற்றினூடாக இணைப்பினை ஏற்படுத்துவதோடு IP பதிப்பு 6 இலும் சிறப்பாய் வேலை செய்கின்றது.

4. MIRO
நான் தினமும் பயன்படுத்தும் முக்கியமான மென்பொருள் இதுவாகும். நீங்கள் ஒரு Podcast பிரியரென்றால் உங்களிடம் கட்டாயம் இருக்க வேண்டிய மென்பொருளும் இதுதான். ஆயிரக்கணக்கான Podcast களை இலவசமாக தரவிறக்கிக்கொள்ள முடிவதோடு இம்மொன்பொருளிலேயே அவற்றை சிறப்பாக ஒழுங்குபடுத்தி பார்வையிடவும் முடியும். தானகவே புதிய பொட்காஸ்ட் பதிப்புக்கள் வரும்போத தரவிறக்கிக்கொள்வதும், பார்த்தபின் குறிப்பிட்ட நாட்களின் பின் அவற்றை நீக்கிவிடுவதும் இதன் சிறப்பியல்புகள்.

Podcast கள் மட்டுமல்லாது ஒரு சிறந்த ரொறன்ற் கோப்புக்களை தரவிறக்கும் மென்பொருளாயும் இதனை பயன்படுத்த முடியும். ஒரு Torrent செய்தியோடையிலிருந்து கோப்புக்களை தொடர்ச்சியாக தரவிறக்கும் வசதியும் இங்குண்டு. நீங்கள் ஒரு நாடகங்கள் பார்க்கும் பிரியரானால், தொடர்ச்சியாக அவற்றை ரொறன்ற் மூலம் தரவிறக்கிப் பார்க்க இம்மென்பொருள் உதவும்.

5. BitTorrent


நீங்கள் Torrent கோப்புக்களை தரவிறக்குபவராயின் இது ஒரு சிறந்த மென்பொருள். இம்மென்பொருளுக்கென்று ஒரு தனியான APP Studio இருப்பது இதன் சிறப்பம்சம்.

6. XAMPP

உங்கள் வின்டோஸ் கணினியை மிக இலகுவாக ஒரு வழங்கியாக மாற்றிவிடக்கூடிய மென்பொருள் இது. நீங்கள் தனித்தனியே நிறுவவேண்டிய Apache, MySQL, PHP + PEAR, Perl, mod_php, mod_perl, mod_ssl, OpenSSL, phpMyAdmin, Webalizer, Mercury Mail Transport System for Win32 and NetWare Systems v3.32, Ming, FileZilla FTP Server, mcrypt, eAccelerator, SQLite, and WEB-DAV + mod_auth_mysql போன்ற அனைத்தையும் இது ஒரேயடியாக நிறுவி Configure செய்து உங்கள் வேலைப்பளுவை குறைத்துவிடும்.

5 ஆவணி, 2011

சில சுவாரசியமான திறமூல இணைய மென்பொருள்கள்

நாங்கள் சாதாரணமாக கேள்விப்படுகின்ற இணைய மென்பொருள்கள் ஜும்லா, டுருபல், வேர்ட்பிரஸ் என்பன. இவை பொதுவாக எங்கள் இணையத்தளங்களை உருவாக்கிக்கொள்ள பயன்படும். ஆனால் இவற்றைவிட பல விதமான தேவைகளுக்கு பயன்படுத்தக்கூடிய பல சுவாரசியமான திறமூல இணைய மென்பொருள்கள் இருக்கின்றன. இவற்றை நாமும் எங்கள் வழங்கிகளில் நிறுவி பயன்படுத்த முடியும். இவற்றில் சிலவற்றை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன். உங்களுக்கு தெரிந்தவற்றை நீங்களும் பின்னூட்டங்களில் சொல்ல முடியும்.

1. Simple Invoices
இதனை நீங்கள் உங்கள் வழங்கியில் நிறுவிக்கொண்டால் இலகுவாக இணையத்திலிருந்தே தேவையானவர்களுக்கு சிட்டைகளை அனுப்பிக்கொள்ள முடியும்.

2. Orange HRM
இது சாதாரணமான ஒருவருக்கு பயன்படாவிட்டாலும், ஒரு நிறுவனம் தனது மனிதவளங்களை முகாமை செய்வதற்கு பெருமளவில் பயன்படும். இது ஒரு பூரணமான மிகச்சிறந்த மனிதவள முகாமைத்துவ இணைய மென்பொருளாகும்.

3. Lime Survey
நீங்கள் இணையமூடாக ஒரு கணக்கெடுப்பை நடாத்த இருந்தால் உங்களுக்கு மிகவும் பயன்தரக்கூடிய மென்பொருள் இது. கணக்கெடுப்புக்களை நடாத்துவதற்கென்றே உருவாக்கப்பட்ட திறமூல மென்பொருளாகையால் அதற்கான எல்லா வசதிகளும் இங்கு நிறைந்திருக்கின்றன.

4. Gloss Word
இணையத்திலிருந்து இயங்கக்கூடிய அகராதியொன்றை உருவாக்கிக்கொள்ளக்கூடிய ஒரு திறமூல இணைய மென்பொருள் இதுவாகும். இதனை உங்கள் வழங்கியில் நிறுவிக்கொள்ளுவதன்மூலம் அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஒரு அகராதியை நீங்கள் இலகுவாக உருவாக்கிவிட முடியும்.

5. Bug Genie
நீங்கள் ஒரு மென்பொருள் வடிவமைப்பாளராகவோ அல்லது ஒரு குழுவாக கணினியில் பணிபுரபவராகவோ இருந்தால் இது உங்களுக்கு மிகவும் பயன்படும். பிரச்சனைகளை கண்காணித்துக்கொள்ளவும், திட்ட மேலாண்மை செய்யவும் இது ஒரு சிறந்த திறமூல மென்பொருள்.

25 ஆடி, 2011