Posts Tagged "பிளாஸ்"

Flash Tool tip ஐ எப்பிடி பாவிக்கிறது??

நான் உருவாக்கின Flash Tooltip component ஒண்டை சில நாட்களுக்கு முன் தரவிறக்க தந்திருந்தனான். ஆனா சிலவேளைகளில அதை என்னெண்டு பாவிக்கிறது எண்டு உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தா அதுக்காகத்தான் இந்த பதிவு. இது மிகவும் தொடக்க நிலை பயனாளர்களுக்கானது.

முதலில நீங்கள் இன்னமும் அதை தரவிறக்காமல் இருந்தால் போய் தரவிறக்கி உங்கட கணினியில நிறுவிக்கொள்ளுங்கோ. உங்களிட்ட கட்டாயம் Adobe Extension manager இருக்க வேணும். நிறுவினா கீழ இருக்கிற மாதிரி Extension manager இல காட்டும்.

சரி இனி உங்கட பிளாஸ் மென்பொருளை திறந்து அதில Component panel ஐ திறந்து பாருங்கோ. அதில கீழ காட்டியிருக்கிற மாதிரி இருக்கும்.

இனி இதை எப்பிடி பயன்படுத்திறது எண்டு பாப்பம்.

ஒரு Button ஒன்றை முதலில உருவாக்கி அதுக்கு ஒரு பெயர் வையுங்கோ. கீழ நான் அதுக்கு home_but எண்டு பெயர் வைச்சிருக்கிறன்.


அடுத்ததா Tooltip component ஐ இழுத்து வந்து அந்த button க்கு மேல விடுங்கோ. பிறகு parameters இக்கு வந்தா இப்படி இருக்கும்.

இதில Content எண்ட field இல உங்களுக்கு விரும்பினதை தட்டச்சுங்கோ. நான் Go to home எண்டு அடிச்சிருக்கிறன்.

பிறகென்ன publish பண்ணி பாருங்கோ. உங்கட சுட்டியை அந்த button க்கு மேல கொண்டு போக அந்த tool tip தெரியும். அவ்வளவுதான்.


மற்ற field களையும் மாத்தி என்ன நடக்குது எண்டு பாருங்கோ.

3 பங்குனி, 2008

Adobe Releases AIR 1.0

ஏறத்தாள ஒரு வருட கால பீற்றா மற்றும் அல்பா சோதனைகளின் பின்னர் அடொப் நிறுவனம் சற்று முன்னர் தனது Adobe AIR 1.0 இனை வெளியிட்டுள்ளது.




HTML, AJAX, Flash and Flex போன்ற இணைய மென்பொருள் உருவாக்க திறமை உள்ளவர்கள் Adobe AIR இனை பயன்படுத்தி அவற்றை தமது கணினியில் பயன்படுத்தக்கூடிய மென்பொருட்களாக மாற்றிக்கொள்ள முடியும்.

இங்க போய் AIR இனை தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

26 மாசி, 2008

Tool Tip component for Flash

நீங்க ஒரு பிளாஸ் பாவனையாளரா இருந்தா உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது உங்கள் பிளாஸ் வடிவமைப்புகளில ஒரு Tool tip ஐ இலகுவாக சேர்க்க பயனுள்ளதாக இருக்கும்.




கீழ சொடுக்கி தரவிறக்குங்கோ. அப்படியே ஒரு பின்னூட்டமும். எப்படி பாவிக்கிறது எண்டு தெரியாட்டா கேளுங்கோ.

[download#7#image]

23 மாசி, 2008