Posts Tagged "லினிக்ஸ்"

உபுந்துவில போட்டோசொப்

கொஞ்சம் கொஞ்சமா உபுந்து லிலிக்சுக்கு பழக்கமாகி கொண்டு வாறன். உபுந்து டேபியன் லினிக்சை அடிப்படையா கொண்டதால முந்தி மாண்ரேவுக்கு எண்டு எடுத்த ஒரு மென்பொருளும் வேலைசெய்யாது. இப்ப புதுசா தான் பதிவிறக்கம் செய்யிறன். அப்பிடியே இப்ப Wine ஐ configure பண்ணி ஒரு மாதிரி போட்டோ சொப்பும் போட்டுட்டன். இப்போதக்கு ஒரு பிரச்சனையும் இல்லாம வடிவா வேலை செய்யுது. சில திரை வெட்டுககளை பாருங்கோவன். நல்லா இருந்தா ஒரு பின்னூட்டத்தை போட்டு விடுங்கோவன்.






6 தை, 2007

உபுந்து (ubuntu)

8 மில்லியன் பயனாளர்களுக்கு மேலதிகமாக நானும் இப்ப உபுந்துவை பயன்படுத்த தொடங்கிற்றன். நண்பர் ஒருவரிடமிருந்து இறுவட்டு கிடைச்சுது. முகப்பில் “உபுந்து – மனிதர்களுக்கான இயங்குதளம்” வாசகம் (அப்ப இவ்வளவு காலமும் நான் பாவிச்ச மான்ட்ரேவ்?????). சரி என்னதான் இருக்கெண்டு பாப்பம் எண்டு நிறுவியதில இப்ப நானும் ஒரு பயனாளர் ஆகிட்டன்.

பாவிச்சு பாத்த இரண்டு நாளில எனக்கு தெரிஞ்ச நல்லதுகள்.

  • வழமைபோல இலவசம் (பதிஞ்சு விட்டா இறுவட்டு வீட்டுக்கே இலவசமா அனுப்பி வைப்பினமாம்)
  • சுகமான add/remove softwares கருவி (வேணுமெண்டா வேற லினிக்ஸ் இயங்குதளத்திலயும் நிறுவலாம்)
  • மேம்படுத்தப்பட்ட gnome gui. (வழமையா பாவிச்சது KDE தானே)
  • உபுந்துவுக்கான ATI VGA driver.
  • அனேகமான வன்பொருட்களுடன் ஒத்திசைதல். (மான்ட்ரேவ், நொப்பிக்ஸ் இதுகளும் ஒத்திசையுதுதான்)
  • அபி வேர்ட், ஓபின் ஒவ்வீஸ், நெருப்பு நரி எல்லாம் இதோடயே வருகுது. (மற்றதுகளிலயும்தான்).
  • எல்லாவகையான ADSL மொடங்களையும் அடையாளப்படுத்தி தானே நிறுவிக் கொள்ளல்.
  • மேம்படுத்தப்பட்ட Disk manager, My computer.
  • plug and play devices உடன் மிகுந்த ஒத்திசைவை காட்டல்.


எனக்கு வந்த பிரச்சனைகள்.

  • என்ர மொடத்தை (Motorola) மற்ற லினிக்ஸ் இயங்குதளங்கள் மாதிரியே கண்டுகொள்ளாமலே விட்டுட்டுது. மான்ட்ரேவுக்காவது driver இருந்துது. இன்னும் configure பண்ணி முடியேல்ல இப்பதான் linmodems க்கு போயிருக்கிறன். ஆருக்காவது தெரியுமெண்டா சொல்லுங்கோ. (சுகமான வழி)
  • wvdial சரிவரமாட்டன் எண்டுது.
  • windows partition க்க போறதுக்கு தலைகீழா நிக்க வைச்சிட்டுது. ஒரு மாதிரி இப்ப உள்ள போயிட்டன். (terminal ஐ பாவிக்க வைச்சிட்டுது)

இப்பதானே பாவிக்க தொடங்கியிருக்கிறன். போகப்போக ஏதாவது புதுசா கண்டா உங்களுக்கும் சொல்லுறன். (கூகிள் உபுந்துவோட சேந்து மலிவான கணினிகளை விக்கப்போகுது எண்டும் கேள்விப்பட்டன் உண்மையோ தெரியேல்ல) உங்களுக்கும் ஏதாவது அனுபவமிருந்தா பின்னூட்டமா போடுங்கோவன்.

2 தை, 2007