இலவச வேர்ட்பிரஸ் வகுப்பு
ஒரு இரண்டு மூன்று வருசமா நான் வேர்ட்பிரஸை பயன்படுத்திக்கொண்டு இருக்கிறதால ஏதோ கொஞ்சம் வேர்ட்பிரஸ் பற்றி தெரிஞ்சிருக்கு. இதில முக்கியம் என்னெண்டா நான் கணினி மூலமா ஈட்டிற வருமானத்தில பெருமளவு வேர்ட்பிரஸ் சார்ந்ததா தான் இருக்குது. (மிச்சம் joomla).
இதனால வேர்ட்பிரஸ் பற்றி தெரியாதாக்களுக்கு எனக்கு தெரிஞ்ச கொஞ்சத்தை சொல்லிக்குடுப்பம் எண்டு பாக்கிறன்.
எப்பிடி சொல்லிக்குடுக்க போறன்?
என்னுடைய கணினி டெக்ஸ்ரொப்பை நீங்கள் பாக்க அனுமதிப்பதன் மூலம்.
மொழி மூலம்
தமிழ் அல்லது ஆங்கிலம் (உங்கள் தெரிவினை பொறுத்தது)
உத்தேச பொருளடக்கம்
1. வேர்ட்பிரஸ் என்றால் என்ன?
2. என்ன மென்பொருட்கள் என்னத்துக்கு பாவிக்கிறன்.
3. வேர்ட்பிரஸ் நிறுவல் – எங்கள் கணினியில்
– வழங்கி ஒன்றில்
4. வேர்ட்பிரஸ் நிருவாக முகப்பை அறிந்து கொள்ளல்
4.5 CSS அறிமுகம் (நீங்க விரும்பினா மட்டும்)
5. வேர்ட்பிரஸ் theme உருவாக்கம் – கொஞ்சம் விரிவா
6. வேரட்பிரஸை மேம்படுத்தல் – Custom fields.
கால அளவு
ஒண்டு தொடக்கம் ஒண்டரை மணித்தியாலம்
நேரம்
பங்குபற்றுபவர்களை பொறுத்து தீரமானிக்கபடும்
சரி உங்களிட்ட என்ன இருக்கவேணும்.
அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம்
VNC நிறுவப்பட்ட கணினி
வேகமான இணைய இணைப்பு
உங்களுக்கு என்ன தெரிஞ்சிருக்க வேணும்.
CSS பற்றி கேள்விப்பட்டிருக்க வேணும்.
PHP, MySQL எண்டு கொஞ்சம் உலகத்தில இருக்குது எண்டு தெரிஞ்சிருக்க வேணும்.
சரி நீங்கள் குறுக்கால கேள்வி கேக்கலாமா?
வடிவா கேக்கலாம். ஆனா நான் பதில் தெரிஞ்சாத்தான் சொல்லுவன்.
பங்குபற்ற என்ன செய்யவேண்டும்.
உங்களுக்கு எந்தெந்த நாளில என்னென்ன நேரம் சரிவரும் (தயவு செய்து இலங்கை இந்திய நேரத்தை குறிப்பிடவும்), என்ன மொழி மூலம் எண்டா நல்லம் எண்டு சொல்லி ஒரு பின்னூட்டம் போட்டா சரி. (உத்தேச பொருளடக்கத்தில ஏதாவது சேக்க வேணும் எண்ட நினைச்சாலும் பின்னூட்டத்தில சொல்லுங்கோ.
பின்குறிப்பு
உங்களுக்கு தெரிஞ்சாக்களுக்கு இதைப்பற்றி உங்கள் பதிவு மூலமா சொல்லுங்கோ.
இந்த வகுப்பு நல்லா நடந்தா WordPress, Joomla பற்றி மேலும் சில வகுப்புகள் எடுக்கிற யோசனை இருக்கு.
மு.மயூரனிட்ட wiki பற்றி ஒரு வகுப்பு எடுக்கச்சொல்லி எல்லாருமா சேந்து ஒரு அலுப்பு குடுக்கலாம்.
நான் வோர்ட்பிரஸ் கற்றுக்கொள்ள நினைக்கிறேன்.
தயசு செய்து உதவவும்.
இந்திய நேரம் எனக்கு காலை 9.30லிருந்து 11 மணி வரை. மேலும் உங்களுக்கிணங்க எந்நேரமும் நான் தயார். உங்கள் நேரம் மட்டும் கொடுத்தால் போதும்.
வாவ்,மிகவும் பயனுள்ள பாராட்டவேண்டிய செயல் பகீ.
எனக்கும் கொஞ்சம் வேட்பிரஸ் உதவி வேண்டும்.
ta.wordpress.com ல் உருவாக்கும் பதிவு போல எனது server (hisubash.com/tblog)லும் முற்றிலும் தமிழில் வரவேண்டும். Support Forum ல் சொன்னதெல்லாவற்றையும் செய்து பார்த்தேன். எனது செயன்முறை சரியில்லை எண்டு நினைக்கிறேன். நேரமிருந்தால் உதவ முடியுமா?
நன்றி.
சுபாஷ்.
சுபாஸ் உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறேன் பாருங்கள்.
மிகவும் அருமையாக உள்ளது… தமிழில் கணினி மென்பொருட்கள் பற்றிய தங்கள் சேவையை தொடருங்கள்…
எனக்கு Joomla பற்றி தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளது. அது பற்றி மேலும் அறிய ஆர்வமாக உள்ளேன். தங்கள் மின்னஞ்சல் தர முடியுமா?
please give me your mobile number sir
எனக்கு wordpress பற்றி தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளது. அது பற்றி மேலும் அறிய ஆர்வமாக உள்ளேன். தங்கள் மின்னஞ்சல் தர முடியுமா?
நான் வோர்ட்பிரஸ் கற்றுக்கொள்ள நினைக்கிறேன்.
தயசு செய்து உதவவும்.
இந்திய நேரம் எனக்கு மாலை 3.30லிருந்து 6 மணி வரை. மேலும் உங்களுக்கிணங்க எந்நேரமும் நான் தயார். உங்கள் நேரம் மட்டும் கொடுத்தால் போதும்.தங்கள் மின்னஞ்சல் தர முடியுமா?
அண்ணா நான் யாழ்ப்பாணத்தில தான் இருக்கிறேன் உங்களால் எனக்கு நேரடியாக இந்த வகுப்பு எடுக்க முடியுமா…?
நான் web design படிக்கிறதுக்கு நிறைய இடத்தில படிச்சும் பலன் கிடைக்கல உங்களால சொல்லிதர முடியுமா…?
ஜனா,
ஒரு தொடர்ச்சியான இணையத்தள வடிவமைப்புக்கான வகுப்பு எடுக்குமளவிற்கு என்னிடம் நேரம் இல்லை. ஆனால் நீங்கள் ஏதாவது கேள்விகள் இருந்தால் http://ask.oorodi.com/ மூலமாகவோ அல்லது சிலவேளைகளில் நேரத்தை பொறுத்து நேரிலோ சந்தேகங்கள் கேட்க முடியும்.
ok. அண்ணா எனக்கு அடிப்படையான விடயங்களை மட்டும் நேரில் சொல்லித்தர முடியுமா..? தொடர்ச்சியான வகுப்புக்கள் தேவையில்லை.
ஹாய் பகி, நீங்க மற்றவர்களுக்கு வோர்ட்ப்றேச்ஸ் நேரில் குருவதைவேட வீடியோ தமிழ் டுடோரியல் அளிப்பதன் மூலம் மற்றவர்கள் அதை தெளிவாக தீரும்ப தீரும்ப பார்த்து நிறைய பயன் அடைவர்களே, அப்படி ஒரு யோசனை உங்களுக்கு இருந்தால் உதவுங்கள்.
எனக்கு வோர்ட்ப்றேச்ஸ் மற்றும் ஜூம்ல கற்று கொள்ள விருப்பம் உள்ளது. நீங்கள் உதவினால் எனக்கு மட்டும் அல்லாது மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும்.
அப்படி நீங்கள் தயார் செய்தால் எனது மின்னசல் க்கு அனுப்புங்கள்.
nanbara guruprakash sona matheri nengal video potal engalkum megavum payanaga irukum
பகி தாங்கள் எமக்கு வடிவமைத்த இணையத்தை கடந்த 3 வருடமாக மாற்றமின்றி பாவிக்கின்றோம். எமது தேவை கருதி சில அவசிய மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது. நேரம் வருமா? தயவுசெய்து 0778449739 தொடர்பு கொள்ளவும்
nanba endu nengal wordpress class eduperkal enaku thakaval kodukangal
நான் வோர்ட்பிரஸ் கற்றுக்கொள்ள நினைக்கிறேன்.
im waiting . neenga virumbiya neram podunga nanba naan kattayam varuwen.
நான் வோர்ட்பிரஸ் கற்றுக்கொள்ள நினைக்கிறேன்.
தயசு செய்து உதவவும்.
நான் கதை எழுதுறேன் அதனால் எனக்கு world press கற்றுதரமுடியும அண்ணா நான் இந்தயாவில் வசிக்கிறேன் .
I am trying to get your Tamil bamini typing soft and ends up here!. You do a good service to the society. 🙂
நல்ல பணி ! நன்றி ! எந்த நேரமும் எனக்கு உகந்த நேரமே .
நண்பரே உங்கள் வலையத்தில் சம்பாதிப்பது பற்றிய அனைத்து தகவல்களும் மிகுந்த பயனுள்ளதாகவும் தொடர்ந்து அதை அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலும் உள்ளது.வேர்ட்பிரஸ் கற்றுக்கொள்ள ஆசை உள்ளது .நேரம் பிரச்சனை இல்லை .எவ்வுளவு துரிதமாக கற்றுக்கொள்ள முடியுமோ உங்களிடம் கற்றுக்கொள்ள விரும்புகிறேன் .தொடரட்டும் உங்கள் தகவல் சேவை.