உங்கள் பதிவுக்கு இலவச இணைய சேவை

வலைப்பதிவுகள் வைத்திருப்பவர்கள் அனேகமாக புளொக்கரில் அல்லது வேர்ட்பிரஸ் இலவச சேவையில் தங்களது வலைப்பதிவினை வைத்திருக்கின்றார்கள். இந்த சேவைகள் ஒரு அளவுக்கு மேல் நீங்கள் நினைப்பது எல்லாவற்றையும் செயற்படுத்த அனுமதிப்பதில்லை.

சொந்தமாக ஒரு வலையிடத்தை வாங்கி வேர்ட்பிரஸ் போன்ற மென்பொருளை நிறுவி வலைப்பதிவு வைத்திருப்பதில் பொருளாதார சிக்கல் ஏற்படுகின்றது. ஆனால் நீங்கள் இவ்வாறு ஒரு வலைப்பதிவினை இலவச வழங்கிகளிலும் கூட வைத்திருக்க முடியும். வேண்டுமானால் நீங்கள் உங்களுக்குரிய பெயரில் டொமைனை மட்டும் பதிவு செய்துகொண்டு வலைப்பதிவினை இவ்வாறான இலவச வழங்கிகளில் வைத்திருக்க முடியும்.

ஒரு நல்ல வலைப்பதிவு ஒன்றினை வைத்திருக்ககூடிய அளவிற்கு இலவச வழங்கிகளை வழங்கும் நிறுவனங்கள் கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. நீங்கள் ஒரு வலைப்பதிவை வைத்திருப்பதற்கு மட்டும் என்று அல்லாது வேர்ட்பிரஸ் போன்றவற்றை கற்றுக்கொள்ளவும் இந்த சேவைகள் உதவும்.

000webhost

இந்த நிறுவனம் பயனாளர்களிடம் இருந்து கிடைக்கின்ற நன்கொடையினை வைத்து செயற்பட்டு வருகின்றது. இது வழங்கும் வசதிகளாவன..

000webhost

Website Builder
PHP scripts Autoinstaller
1500 MB disk space
100 GB bandwidth limit
Backup options
99.9% uptime
FTP support
No advertisement

110MB Hosting

110mb

FTP support
No Advertisement
5 GB disk space
300 GB bandwidth
Site promotion guides and
99% uptime
1 click blog and forum install

SitesFree

SitesFree

Free sub domain
7 GB Bandwidth
500 MB disk space
Ability to host your own domains
Powerfull and fast support
FTP access for uploading your files on our free hosting
Web based file manager to upload your free websites
Powerfull online editor to create high quality free websites!
PHP, MySQL

Zymic

Zymic

FTP Access
MySql database support
5 GB disk space
50 GB data transfer
No Ads

Doteasy

DotEasy

Website Creator tool
24/7 Email support
100 MB Disk space
1 Gb Bandwidth
Online Control Panel
Domain Forwarding

குறிச்சொற்கள்: , ,

8 பின்னூட்டங்கள்

  1. கொத்து புரோட்டா சொல்லுகின்றார்: - reply

    ரொம்ப பயனுள்ளதா இருக்குங்க. நானும் ஒரு ஹோஸ்டிங்க் கிரியேட் பண்ணிட்டேன்.

  2. நிமல் - NiMaL சொல்லுகின்றார்: - reply

    இலவச வழங்கிகளில் ஒரு முக்கிய சிக்கல், அவர்கள் திடீரெண்டு கடையை மூடிக்கொண்டு சென்றுவிடுவது…

    எனது அனுபவத்தில் இரண்டு முக்கிய தளங்களை இவ்வாறு இழந்திருக்கிறேன்… (தரவுத்தளத்தை காப்பெடுக்காதது எனது பிழை)

    இந்த நிலை புளொக்கரில் அல்லது வேர்ட்பிரஸ் இலவச சேவையில் சாத்தியம் என்றாலும் அவர்கள் கடையை சாத்துவதை விட இந்த இலவச சேவைகள் கடையை சாத்த சாத்தியம் அதிகம்!

  3. Sharepoint The Great சொல்லுகின்றார்: - reply

    இந்த நிலை புளொக்கரில் அல்லது வேர்ட்பிரஸ் இலவச சேவையில் சாத்தியம் என்றாலும் அவர்கள் கடையை சாத்துவதை விட இந்த இலவச சேவைகள் கடையை சாத்த சாத்தியம் அதிகம்!

    இது கண்டிப்பான நிதர்சனமான உண்மை.
    File sharing sites – அவங்களும் இப்படிக் காணாமல் போகியிருக்காங்க

  4. மதுவதனன் மௌ. சொல்லுகின்றார்: - reply

    உண்மைதான்…இவற்றை சும்மா பழகிப்பாக்க மட்டும் பயன்படுத்தலாம்… மற்றையபடிக்கு என்றுமே புளொக்கர் மற்றும் வேர்ட்பிரஸ்களே நம்பகமானவை… நானும் இரண்டை இழந்திருக்கிறேன்… There is nothing called free lunch.. 😉

  5. slwaran சொல்லுகின்றார்: - reply

    நிமல் அவர்கள் சொல்வது உண்மை தான். அதேவேளையில் இலவசமாக கிடைக்கும் இந்தத்தளங்கள் மிகவும்மெதுவாக இயங்குகின்றது. நானும் சில தளங்களில் முயற்சி செய்து பார்த்துள்ளேன். அவைகளின் வேகம் ஆமை வேகத்தில் இருந்ததால் கைவிட்டுவிட்டேன்.

  6. jude சொல்லுகின்றார்: - reply

    nanbarkale enaku yaaru sari elavasamagavum,elaguvagavum oru wesit niruvuvathatrku uuthivi seyveergala?

  7. Surya சொல்லுகின்றார்: - reply

    தகவல்களுக்கும் குறிப்பாக பின்னூட்டமிட்டவர்களுக்கும் நன்றி.

    சூர்யா
    http://butterflysurya.blogspot.com

  8. மஸாகி சொல்லுகின்றார்: - reply

    அண்மையில் ஜியோசிட்டி யும்..

    GEOCITIES IS CLOSING ON OCTOBER 26, 2009

    http://geocities.yahoo.com