சரி அப்ப ஊரோடிக்கு என்ன நடந்தது??
நீங்க தனித்தளத்தில பதியிறனிங்கள் எண்டா, அல்லது புதுசா தனித்தளத்தில பதியப்போறீங்கள் எண்டா இந்த பதிவு உங்களுக்கு உபயோகமா இருக்கும். இது மிகவும் தொடக்க நிலை பயனாளர்களுக்கானது.
இது வேர்ட்பிரஸ் மட்டும் என்று மட்டுமல்ல எந்த ஒரு தரவுத்தளத்தை பயன்படுத்தும் இணையத்தளத்திற்கும் பொதுவானது.
நான் வேர்ட்பிரஸை 2007 ஆனியில் நிறுவி ஊரோடியை தனித்தளத்திற்கு கொண்டு வந்தபோதிலிருந்து தரவுத்தளம் தொடர்பான எந்த வித கவனமும் எடுக்காததோடு இரண்டு கிழமைக்கு ஒருமுறை Back-up எடுத்துக்கொண்டிருந்தேன். ஆனால் வேர்ட்பிரஸ் 2.5 வந்து அதனை மேம்படுத்தியபோதுதான் வந்தது வில்லங்கம்.
வேர்ட்பிரஸை நிறுவிய காலத்தில் இருந்து அது தமிழிற்கு ஒவ்வாத ஒரு ஒருங்குகுறியில் இருந்து வந்துள்ளது. நான் தரவுத்தளத்தை மேம்படுத்திய போது அனைத்து தரவுகளும் பூச்சிகள் பூச்சிகளாக மாறிவிட்டன.
எனவே நீங்கள் இதுவரைக்கும் உங்கள் தரவுத்தளத்தை பற்றி கவனிக்காமல் விட்டிருந்தால் அதனை கவனித்து கீழே காட்டப்பட்டுள்ளது போன்று யுனிகோட் ஒருங்குகுறிக்கு மாற்றி விடுங்கள். மாற்றாவிட்டால் நீங்கள் செய்கின்ற எந்த ஒரு Bacu-up ம் உங்களுக்கு பயனளிக்காது.
சரி உங்களுக்கு மாற்றத்தெரியாவிட்டால், உங்கள் தரவுத்தள மேலாண்மை மென்பொருளை திறந்து கொள்ளுங்கள். பொதுவாக phpMyAdmin மிக இலகுவானது.
கீழே காட்டப்பட்டது போன்று மாற்றுவதற்கு தேவையான Field களை தெரிவுசெய்து Edit buttn இனை அழுத்துங்கள்.
பின்னர் உங்களுக்கு தேவையான வாறு யுனிக்கோட் ஒருங்கு குறிக்கு மாற்றிக்கொள்ளுங்கள். அவ்வளவுதான்.
புரியல..இந்தப் பூச்சிப் பிரச்சினைக்கும் உங்க மறுமொழிகளை இழந்ததுக்கும் என்ன தொடர்பு? எனக்கு 2.5க்கு இற்றைப்படுத்தும் போது ஒன்னும் ஆகலியே?
http://blog.ravidreams.net/wordpress-jilebi/ ல் உள்ள குறிப்பு உதவவில்லையா?
உங்கள் யோசனையை mahirம் இங்கு சொன்னார் – http://ravidreams.net/forum/topic.php?id=10
தரவுத் தளத்தில் குறிமுறை மாற்றாமல் இருந்தால் ஏன் backupஐ restore செய்யும் போது பிரச்சினை வருகிறது என்று இன்னும் கொஞ்சம் விளக்க முடியுமா
வாங்க ரவிசங்கர், உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. என்னால் முடிந்தளவு விளக்கமாக எழுதியிருக்கின்றேன். பாருங்கள்
நல்ல தகவல் ரவிக்கிருக்கும் சந்தேகம் எனக்கும்!!! நீங்கள் சொல்வது புரிகின்றது அதன் பின்னால் உள்ள அர்த்தம் புரிகின்றது~~
பக்கப் எடுத்தபின்னர் வேலைசெய்யாத்து ஏன் பக்கப் எடுக்க முன்னர் வேலை செய்கின்றது???
மயூரேசன் வாங்க,
பக்கப் எடுக்கும் போது SQL கோப்பிலேயே தமிழ் எழுத்துக்கள் எல்லாம் பூச்சிகளாகி விடுகின்றன. அதனால் அக் கோப்பினால் பின்னர் எப்பயனும் இல்லை.
உமது பங்குக்கு படம் எடுத்து போட்டதிற்கு இந்துக்கள் சார்பில் நன்றிகள்
UTF – 8 குறியீட்டு முறைக்கு மாற்றுவதற்கான உங்கள் விளக்கம் எனக்குப் போதவில்லை.
Edit என்றோறு பொத்தான் என் phpmyadminஇல் இல்லையே???
சரி மாத்திட்டம்… ஆனா config கோப்பில் கொமன்ட் செய்த
define(‘DB_CHARSET’, ‘utf8’);
define(‘DB_COLLATE’, ”);
வரிகளையும் நீக்கினால் கடுமையான பிழைச்செய்திகள் வருகின்றதே????
மயூரேசன் வாங்க,
கீழ பென்சில் மாதிரி போட்டிருக்கிறதுதான் edit பொத்தான்
define(’DB_CHARSET’, ‘utf8′);
define(’DB_COLLATE’, ”);
அந்த வரிகளை நீக்க வேண்டாம். இருந்த மாதிரியே விட்டு விடுங்கள். கொமன்ற் பண்ணக்கூட வேண்டாம்.
இருக்கிற மாதிரியே விட்டு விடுங்க.
எதற்காக Back-up எடுக்கணும்
ஜீவா, வாங்க.
எதுக்கு பக்கப் எடுக்க வேணுமோ?? என்ன இப்படி கேட்டுட்டியள்??
பகீ, உண்மையாகவே உங்க கால தொட்டு நன்றி சொல்லணும். இதுல இருக்கயமாதிரி செய்ய எல்லாமே சரியாயுட்டுது. நடக்கறது நடக்கட்டும், ஏதாவது மக்கறு பண்ணா பன்டாஸ்டிகோல மறுபடியும் இன்ஸ்டால் பண்ணலாமுனு றிஸ்க் எடுத்தேன்.
Wordpress Support forum answers கூட இப்படியொரு தீர்வை தரவில்லை. மிக்க நன்றி தோழரே.
my WP version 2.6
சுபாஸ் உங்களுக்கு உதவ முடிந்ததில் மகிழ்ச்சியே….
ஈழத்தில் இருந்து பலர் வலைப்பதிய வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது.