வேர்ட்பிரஸில் இலகுவாக Adsense இனை சேர்த்தல்
நேற்று நான் எழுதிய பதிவில் பின்னூட்டமாக இரண்டாம் சொக்கன் (அப்ப யாரு முதலாம் சொக்கன்??) எப்பிடி Adsense ஐ WordPress இல் சேர்ப்பது என கேட்டிருந்தார். அதற்காகத்தான் இந்த பதிவு.
ஒவ்வொரு பதிவிலும் கீழே காட்டப்பட்டவாறு Adsense இனை இணைப்பதானால் ஒரு பிரச்சனையும் இல்லை.
மிக இலகுவாக கீழே இருக்கின்ற plugin இனை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள் (அதுக்கு முதல் ஒரு பின்னூட்டம் போட்டுவிடுங்கோ). உள்ளேயே Readme கோப்பில் என்ன செய்யவேண்டும் என்று விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பதிவில சேக்கிறதெல்லாம் ஒரு பெரிய விசயமா?? அதையெல்லாம் போய் யாராவது கேப்பாங்களா?? மற்ற இடங்களில என்னெண்டு சேக்கிறது எண்டு கேக்கிறாக்கள் கீழ வாசியிங்கோ.
சரி உங்கள் முன்பக்கத்தில ஒரு Adsense தொகுதியை எப்பிடி சேக்கிறது எண்டு பாப்பம்.
[html]<div id="homepage_unit">
<script type="text/javascript"><!–
google_ad_client = "";
google_ad_width = 468;
google_ad_height = 15;
google_ad_format = "468×15_0ads_al";
google_ad_channel = "";
google_color_border = "FFFFFF";
google_color_bg = "FFFFFF";
google_color_link = "CC3300";
google_color_text = "000000";
google_color_url = "804000";
//–>
</script>
<script type="text/javascript"
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js">
</script>
</div>
[/html]
எண்ட நிரலை ஒரு புதிய PHP கோப்பில homepage_unit.php எண்ட பெயரில உங்கள் Home directory இல சேமித்து கொள்ளுங்கள். Client id இல உங்கள் Id இனை மாற்றிக்கொள்ளுங்கள்.
அடுத்ததா உங்கட index.php இனை திறந்து கொள்ளுங்கள். அதில
[html]<div id="content">[/html]
எண்ட வரிக்கு கீழ
[php]<?php include(‘homepage_unit.php’) ?>[/php]
எண்ட வரியை சேர்த்துக்கொள்ளுங்கோ. அவ்வளவுதான். இதைமாதிரி உங்களுக்கு விரும்பின இடத்தில Adsense தொகுதியை சேர்த்துக்கொள்ளலாம். உதாரணத்துக்கு Sidebar இல சேக்க வேணும் எண்டா, அதுக்குரிய php கோப்பு ஒன்றை தயார் செய்து கொள்ளுங்கள். sidebar.php கோப்பை திறந்து அதில
[php]<?php include(‘file_name.php’) ?>[/php]
எண்ட வரியை சேத்து விடுங்கோ. அவ்வளவுதான்.
வேறேதும் சந்தேகம் இருந்தா கேளுங்க முடிஞ்சளவுக்கு சொல்லுறன்.
பின்னூட்டங்களில்லை