வேர்ட்பிரஸில் SEO – பாகம் 4

நாங்கள் இந்தப்பகுதியினில் நுழைவதன் முன்பாக ஒரு அடைப்பலகையை அல்லது நீட்சியை எவ்வாறு நிறுவுவது என்பது தொடர்பாக பார்ப்போம். வேர்ட்பிரஸ் அதிகளவான இலவச அடைப்பலகைகளையும் நீட்சிகளையும் கொண்டுள்ளது. அனேகமாக உங்களுக்கு வேர்ட்பிரஸில் இருக்கின்ற வசதியினை விட மேலதிகமாக ஒரு வசதி தேவைப்படும்போது அதற்குரிய நீட்சியொன்றை இலவசமாக wordpress.org இலிருந்து உங்களால் தரவிறக்கிக் கொள்ள முடியும்.

அடைப்பலகை அல்லது நீட்சியொன்றை நிறுவுதல்.
உங்களுக்கு தேவையான அடைப்பலகையை அல்லது நீட்சியை எடுத்துக்கொள்ளுங்கள். அதனை பிரதிசெய்து அவற்றிற்குரிய கோப்புறைகளில் ஒட்டி விடுங்கள்.

அடைப்பலகையாயின், htdocs-wordpress-wp-content-themes
நீட்சியாயின், htdocs-wordpress-wp-content-plugins

பின்னர் உங்கள் நிருவாக முகப்பிற்கு சென்று அதனை activate செய்து விடுங்கள். அவ்வளவுதான்.

இதற்கு நீங்கள் அடைப்பலகையாயின் Design tab இற்கும் நீட்சியாயின் plugin tab இற்கும் செல்ல வேண்டி வரும்.

சரி இன்றைய விடயத்துக்கு வருவோம்.

SEO என்றால் என்ன?
Search Engine Optimization என்பதன் சுருக்கமே SEO ஆகும்.

ஏன் SEO அவசியமானது??
உலகில் எத்தனையோ வலைப்பதிவகள் நாளாந்தம் உருவாகிய வண்ணம் உள்ளன. ஒரு இணைய பாவனையாளரால் ஒவ்வொரு இணையமாக சென்று பார்க்க முடியாது. எனவே எமக்கு தேவையானவற்றை பொதுவாக தேடுபொறிகளின் உதவியோடு தேடிப்பெற முயல்கின்றோம். எனவே நாங்கள் என்னதான் திறமையாக எழுதினாலும் வெளி உலகிற்கு தெரியவருவதற்கு எமது வலைப்பதிவுகள் தேடுபொறிக்கு இயைவானவையாக இருத்தல் வேண்டும்.

உதாரணமாக ஒருவர் சிறப்பாக மிகவும் பயனுள்ள மருத்துவக்குறிப்புகளை வலைப்பதிந்து வருகின்றார் என கொள்வோம். இப்பொழுது நான் மருத்துவக்குறிப்புகள் தொடர்பாக கூகிள் பண்ணும்போது அவரது வலைப்பதிவு முதல் அல்லது இரண்டாம் பக்கத்துக்குள் வரிசைப்படுத்தப்படாவிட்டால், எனக்கு அவரது வலைப்பதிவை அணுகும் வாய்ப்பு இல்லாமல் போய்விடும். அவ்வலைப்பதிவு சிறப்பாக SEO செய்யப்பட்டிருந்தால் நிச்சயமாக அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கும்.

சரி அப்படியானால் எவ்வாறு அதனை செய்வது??

வலைப்பதிவின் தலைப்பும் Tagline உம்.
உங்கள் வலைப்பதிவின் நிருவாக முகப்பிற்கு சென்று, அங்கு Settings tab இற்கு செல்லுங்கள். அங்கே General settings இல் Blog title மற்றும் Tagline இருப்பதை காண்பீர்கள்.

இங்கே முக்கியமாக Tagline இல் தேடுபொறிக்கு இயைவான ஒரு உங்கள் வலைப்பதிவு சம்பந்தமான ஒரு வசனத்தை உள்ளிடுங்கள். பொதுவாக இது உங்கள் பதிவை ஒருவரியில் சொல்லுவதற்கு ஒப்பானது. இன்போது உங்கள் வலைப்பதிவு எது தொடர்பானதோ அந்த விடயம் தொடர்பான குறிச்சொற்களை பயன்படுத் மறக்காதீர்கள்.

வலைப்பதிவின் Title tag.
வழமையாக நீங்கள் உங்கள் Title tag உங்கள் வலைப்பதிவின் பெயரை மட்டும் காட்டுவதாக அமைந்திருக்கும். இதனை ஒவ்வொரு பதிவிற்கு அதனதன் தலைப்புகளை காட்டக்கூடியவாறு மாற்றிக்கொள்ளுங்கள்.

இதற்கு நீங்கள் உங்கள் அடைப்பலகையின் header.php (htdocs-wordpress-wp-content-themes) கோப்பினை திறந்து கொள்ளுங்கள். பொதுவாக அது கீழே காட்டப்பட்டது போன்று இருக்கும்.

இப்பொழுது Title tag இற்குள் இருக்கும் நிரலை கீழே தரப்பட்டுள்ள நிரலை கொண்டு பிரதி செய்து விடுங்கள்.

இப்பொழுது உங்கள் வலைப்பதிவின் தலைப்பு கீழே காட்டப்பட்டது போன்று மாற்றமடையும்.

Permalink இனை மாற்றிக் கொள்ளுதல்.
பொதுவாக எமது வலைப்பதிவின் முகவரி கீழே காட்டப்பட்டது போன்று இருக்கும். இது தேடுபொறிக்கு ஒவ்வானதல்ல.

எனதே இதனை தேடுபொறிக்கு இயைவான அர்த்தமுள்ள முகவரியாக மாற்றிக்கொள்ள வேண்டும். இதற்கு உங்கள் நிருவாக முகப்பில் Settings tab இல் Permalink sub tab இற்கு வாருங்கள்.

இங்கே Custom structure என்பதனை தேர்வு செய்து %postname% என்தனை உள்ளீடாக கொடுத்து விடுங்கள். அல்லது %postname%.html என்தனை உள்ளீடாக கொடுத்து விடுங்கள் பின்னையது மிகச்சிறப்பானதாகும்.

குறிப்பு
இவ்வசதி வேலை செய்வதற்கு உங்களிடம் ஒரு லினி;க்ஸ் வழங்கி இருக்கவேண்டும். அவ்வாறல்லாவிட்டால் நீங்கள் இரண்டாவதாக இருக்கின்ற Date and name based இனை பயன்படுத்த முடியும்.
எனவே இதனை உங்கள் கணினியில் நீங்கள் செய்திருக்கினற நிறுவலில் சோதித்து பார்க்க வேண்டாம். சோதித்து பார்த்தால் நீங்கள் மீள ஒருமுறை வேர்ட்பிரஸை நிறுவவேண்டி வரும்.

Update services.
இதனை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் வலைப்பதிவில் நீங்கள் ஒவ்வொருமுறை பதிவினை இடும்போதும் இது தொடர்பான தகவல்கள் பல்வேறு சமூக இணையங்களுக்கும் திரட்டிகளுக்கும் தெரியப்படுத்தப்படும். இதன் மூலம் பெருமளவிலான வாசகர்களை பெற்றுக்கொள்ள முடியும்.

இதற்கு நீங்கள் Settings tab இல் Writing settings இற்கு செல்லுங்கள் அங்கு கீழே இருக்கின்ற Update services இற்கு வாருங்கள்.

இங்கே உங்களால் ஒன்றன் கீழ் ஒன்றாக பல இணையத்தளங்களை உள்ளிட முடியும். எந்தெந்த இணையத்தள முகவரிகளை இடவேண்டும் என்று இங்கு சென்று பார்த்துக்கொள்ளுங்கள்.

ஆனால் இங்கிருக்கின்ற பிரச்சனை என்னவெனில் நீங்கள் ஒவ்வொரு முறை பதிவொன்றை இடும்போதும் இது அனைத்து இணையங்களுக்கு தகவல் அனுப்பவேண்டி இருப்பதால் உங்கள் நேரத்தை தின்றுவிடும். நீங்கள் இவ்வசதியை பயன்படுத் விரும்பின் No ping wait என்கின்ற இந்த நீட்சியை பயன்படுத்தலாம். இந் நீட்சி உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும்.

இதைவிட மேலதிகமாக வேண்டுமானால் நீங்கள் AddThis போன்றதொரு Social bookmarking plugin ஒன்றினை உங்கள் வலைப்பதிவில் பயன்படுத்த முடியும்.

இவை மிக அடிப்படையான SEO முறைகளாகும். இவற்றை விட மேலதிகமாக பல விடயங்களும் உள்ளன. அவை தொடர்பாக இந்த தொடரில் பின்னர் பார்ப்போம்

அவ்வளவுதான். சந்தேகம் ஏதும் இருந்தா பின்னூட்டத்தில கேளுங்க. சுகமான கேளவியெண்டா விடை சொல்லுறன்.

குறிச்சொற்கள்: , , ,

5 பின்னூட்டங்கள்

  1. […] பின்னர் அதனை ஓரளவுக்கு தேடுபொறிக்கு இயைவாக்கியும் (SEO) உள்ளோம். இப்பொழுது நாங்கள் எங்கள் […]

  2. Cyril Alex சொல்லுகின்றார்: - reply

    உங்க பதிவுகள் படிக்க சிரமமாய் இடதுபக்கம் எழுத்துக்கள் மறைக்கப்பட்டு காட்சிதருகின்றன. கொஞ்சம் சரி பண்ணுங்களேன். அருமையான தகவல்கள் என்போன்றோருக்கு மிகவும் உபயோகமாயுள்ளன.

  3. பிரபு சொல்லுகின்றார்: - reply

    // இங்கே Custom structure என்பதனை தேர்வு செய்து %postname% என்தனை உள்ளீடாக கொடுத்து விடுங்கள் //

    Using only %postname%

    If you use postname as the only element in your permalinks to create a structure such as example.com/post-title, the rewrite rules may make it impossible to access pages such as your stylesheet (which has a similar format) or the /wp-admin/ folder [is this true in WordPress 2.0+ versions?]. It’s best to include some numeric data (e.g. the post ID or date) in the permalink to prevent this from happening. Additionally, WordPress v1.2.x requires the use of a date structure in order for some features, such as the calendar, to function properly. /%year%/%monthnum%/%day%/%postname%/ is always a good start.

  4. தீபா சொல்லுகின்றார்: - reply

    என்னைப் போன்று seo பற்றி எதுவுமே தெரியாதவர்களுக்கும் இந்த வலைபதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மேலும் சில விபரங்கள் அறிய விரும்புகிறேன் உதவுங்கள். seo செய்ய என்ன details வேண்டும். அதாவது cpanel username and password மாதிரியான details வேண்டுமா? please help me.

    • பகீ சொல்லுகின்றார்: - reply

      உங்கள் இணையத்தளத்திற்கு SEO செய்வதாயின் உங்கள் அதற்கு உங்கள் இணையவழங்கியின் நிருவாக முகப்பு தேவையில்லை.