வேர்ட்பிரஸ், தரவுத்தளத்தில் கவனிக்க வேண்டியவை

நான் ஊரோடிக்கு வேர்ட்பிரஸை மேம்படுத்தியபோது எழுத்துக்கள் பூச்சி பூச்சி போன்று மாறியமைக்கு ரவிசங்கர் இந்த பதிவில் குறிப்பிட்டிருப்பது செய்தாலும் சரியாக வேலை செய்யவில்லையா என்று கேட்டிருந்தார்.

ஆனால் அவரது பதிவில் குறிப்பிட்டிருப்பது ஒரு தற்காலிக தீர்வேயன்றி ஒரு பூரணமான தீர்வு முறையன்று. அத்தோடு அத்தீர்வு முறை பின்னைய நாட்களில் நிச்சயமாக பிரச்சனையை கொண்டுவரும். இது எவ்வாறு நடைபெறுகின்றது என்று என்னால் முடிந்தவரையில் விளக்க முயற்சிக்கின்றேன்.

நீங்கள் வேரட்பிரஸை நிறுவும் போது அதற்குரிய தரவுத்தளம் தொடர்பான தகவல்களை கொடுக்க வேண்டி இருக்கும். இத்தகவல்களே config.php என்கின்ற கோப்பில் சேமித்து வைக்கப்படுகின்றன.

இங்கு வேர்ட்பிரஸ் தனக்குரிய தரவுத்தளத்தை தானே உருவாக்காமல் எம்மை உருவாக்கி தருமாறு கேட்பதனால் நாமே அதனை உருவாக்க வேண்டி இருக்கின்றது. இங்குதான் முக்கியமான பிரச்சனை நேர்கிறது. அனேகமான வழங்கி வழங்குனர்கள் தரவுத்தள மேலாண்மைக்கு phpMyAdmin போன்ற சிறந்த மென்பொருள்களை வழங்கினாலும் தரவுத்தள உருவாக்கத்திற்கு அவ்வசதிகளை வழங்குவதில்லை.


இதனால் எம்மால் config.php இல் கீழே காட்டப்படுகின்ற MySQL charset, MySQL connection collation ஆகிய இரண்டு கட்டளைகள் தொடர்பாக கவனம் செலுத்த முடிவதில்லை. இவை இரண்டும் தன்னிச்சையாகவே latin1_swedish_ci ஒருங்கு குறியில் அமைக்கப்பெற்று விடுகின்றன. சிறந்தொரு தரவுத்தள உருவாக்க மென்பொருள் இருக்குமிடத்து எம்மால் இவற்றை நிச்சயமாக கீழே காட்டப்பட்டது போல கவனத்தில் எடுக்க முடியும்.

நிறுவல் முடிந்த பின்னர் தரவுத்தளம் latin1_swedish_ci ஒருங்கு குறியிலும் வேர்ட்பிரஸின் config.php பொதுவாக கீழ்வருமாறும் அமைந்திருக்கும்.

இதனை மிக இலகுவாக கீழ்வருமாறு ஒரு வரைபடத்தில் காட்டலாம்.

இந்த வரைபடத்தை பார்க்கும்போதே என்ன பிரச்சனை நேர்கிறது என்பது உங்களுக்கு இலகுவாக விளங்கிவிடும். (இதற்கு கீழ்வரும் பிரச்சனையை மிக இலகுவாக விளக்க முயற்சிக்கின்றேன்) இப்பொழுது நீங்கள் உள்ளிடுகின்ற தமிழ் எழுத்துக்கள் தரவுத்தளத்திற்கு செல்கின்றன. தரவுத்தளத்துடன் தொடர்புகொள்ளும் ஒருங்குகுறி என்னவென்பது குறிப்பிடப்படாததால் தரவுத்தளத்தில் அவ்வாறே சேமிக்கப்படுகின்றன. இப்பொழுது நீங்கள் வேரட்பிரஸை சிறிது மேம்படுத்துகிறீர்கள் (2.2—2.2.1). இப்பொழுது ஆரம்பிக்கிறது பிரச்சனை. இந்தப்பிரச்சனை உங்கள் எழுத்துக்கள் பூச்சிகளாக தரவுத்தளத்தில் மாறாது ஆனால் உங்கள் வெளியீடு பூச்சிகளாக தெரிகிறது. இதற்கு தீர்வுதான் ரவிசங்கர் குறிப்பிட்ட முறை.

தரவுத்தளத்தின் ஒருங்குகுறி தொடர்பான தகவல்களை config.php இல் நீக்கிவிடல்.

சரி அப்படியானால் எனக்கு என்ன பிரச்சனை வந்தது.

வேர்ட்பிரஸ் 2.5 இன் தரவுத்தளக்கட்டமைப்பு வேர்ட்பிரஸ் 2.2 இனை விட மிகவும் வேறுபட்டது. இதன்போது தரவுத்தளம் மாற்றமடைகிறது. பிறகென்ன அவ்வளவுதான் உங்கள் தகவல்கள் அனைத்தும் தரவுத்தளத்துக்குள் பூச்சிகளாக மாறிவிடும். நீங்கள் config.php ஐ என்னதான் மாற்றியும் பயனில்லை.

செய்யப்படுகின்ற Backup கள் கூட ஒருங்குகுறி மாற்றத்தால் பயனற்று போய்விடும். நீங்கள் backup.sql ஐ திறந்து பார்த்தால் எழுத்தக்கள் பூச்சிகளாக இருப்பதை பார்க்கலாம்.

இதனை இலகுவாக சொல்வதானால் யுனிகோட் ஒருங்குகுறியில் ஒரு text கோப்பை உருவாக்கி சேமிக்கும் போது ANSI ஒருங்குகுறியில் சேமித்து விட்டு, பின்னர் மீண்டும் தமிழை தேடுவது போன்றது. இந்த அனுபவம் உங்களுக்கு இல்லையாயின், ஒருமுறை செய்து பாருங்கள்.

வேறென்ன?? கேள்வி இருந்தா கேளுங்க. தெரிஞ்சா பதில் சொல்லுறன். தெரியாட்டி ரவிசங்கர் வந்து சொல்லுவார்…

குறிச்சொற்கள்: , , , ,

9 பின்னூட்டங்கள்

  1. மாஹிர் சொல்லுகின்றார்: - reply

    மிகச்சரியான முறை இங்குள்ளது.

    http://codex.wordpress.org/Converting_Database_Character_Sets.

    இதற்கான சிறிய விளக்கம்
    http://ravidreams.net/forum/topic.php?id=10

    டேட்டாபேஸ் தொடர்பாக யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் என்னுடைய மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும்.

  2. பகீ சொல்லுகின்றார்: - reply

    மாஹிர் பின்னூட்டத்திற்கு நன்றி,

    மாஹிர் குறிப்பிட்டிருக்கும் wordpress.org இல் இருக்கும் முறைதான் இதனை தீர்க்கும். ஆனால் பிரச்சனை ஆகிய பின்னர் எந்தப்பயனும் இல்லை. நீங்கள் முன்னரே கவனித்து ஒருங்குகுறியை யுனிகோடிற்கு மாற்றியாக வேண்டும்.

  3. ரவிசங்கர் சொல்லுகின்றார்: - reply

    பகீ, நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. நீங்களும் மாகிரும் எல்லாம் சொல்லிட்டீங்க 🙂

    இப்பவும் என் தரவுத் தளம் 2.5ல் latin1_swedish_c1 என்று இருக்கிறது. இதை ஒருங்குறிக்கு மாற்றிக் கொள்வது நல்லதா? தளத்தை மீள நிறுவி தரவுத் தளக்காப்பில் இருந்து மீளப் பெறும் போது தான் பிரச்சினை..ஆனால், அப்படியொரு சூழல் வருங்காலத்தில் நேராது என்று சொல்ல இயலாது என்பதால் மாறலாமா என்று யோசிக்கிறேன்.

  4. மயூரேசன் சொல்லுகின்றார்: - reply

    நல்லதோ கெட்டதோ இன்று மாற்றப்போகின்றேன்… !!! நாளைக்கு என் வலைப்பதிவு இருக்கலாம் இல்லாமல் விடலாம்! 🙁

  5. பகீ சொல்லுகின்றார்: - reply

    ரவிசங்கர், மயூரேசன்,

    வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி.

    என்னைக்கேட்டீர்களானால் ஒருங்குகுறியை மாற்றுவது மிகவும் நல்லது என்றே சொல்லுவேன். அதனால் எந்தப்பாதிப்பும் ஏற்படாது என்று நினைக்கிறேன். (phpMyAdmin)

  6. மயூரேசன் சொல்லுகின்றார்: - reply

    manual ஆக மாற்றியும் எனக்கு வேர்ட்பிரஸ் ஒருங்குறிக்கு மாற மாட்டேன் என்கிறது. நீட்சி ஒன்றைப் பயன்படுத்தியும் மாற்றப் பார்த்தேன்.. ம்ஹூம்!

  7. பகீ சொல்லுகின்றார்: - reply

    மயூரேசன், இப்ப மாத்தீட்டிங்க தானே??

  8. சுபாஷ் சொல்லுகின்றார்: - reply

    உங்கள் உதவிக்கு மிக்க நன்றி நண்பரே. உங்களின் மற்றய பதிவினில் உள்ளபடி செய்துவிட நன்றாக வேலை செய்கிறது.
    தனிப்பட கவனம் செலுத்தியமைக்கு மிக்க நன்றி பகி.

  9. பகீ சொல்லுகின்றார்: - reply

    சுபாஸ், உங்களுக்கு உதவ முடிந்ததில் மகிழ்ச்சியே..