பாகம் 6 – நீங்களும் வேர்ட்பிரஸ் குருவாகலாம்

வேர்ட்பிரஸ் அடைப்பலகை ஒன்றினை உருவாக்குதல்

வேர்ட்பிரஸின் முக்கிய வசதிகளில் ஒன்று அடைப்பலகைகள். நீங்கள் அடைப்பலகையை வடிவமைக்கும் விதத்திலேயே உங்கள் வலைப்பதிவை ஒரு முழு அளவிலான இணையத்தளமாக மாற்றிக்கொள்ள முடியும். அத்தோடு இலவசமாகவே ஏராளமான அடைப்பலகைகள் உங்களால் இணையத்தில் இருந்து தரவிறக்கிக்கொள்ள முடியும்.

நான் பாகம் ஐந்தில் சொன்னது போல வேரட்பிரஸ் இன் அடைப்பலகை அடிப்படையாக index.php என்கின்ற கோப்பையும் style.css என்கின்ற கோப்பையும் கொண்டிருக்கும். மேலும் இது பற்றி அறிய பாகம் ஐந்தினை பாருங்கள்.

ஆனால் இவ்விரண்டு கோப்புகளை மட்டும் கொண்டு ஒரு சிறந்த அடைப்பலகையை உருவாக்கி விட முடியாது. ஒரு சாதாரண அடைப்பலகை,

  • index.php
  • style.css
  • single.php
  • page.php
  • archive.php
  • category.php
  • comment.php
  • comment_popup.php
  • search.php
  • footer.php
  • header.php
  • sidebar.php

கோப்புகளை கொண்டிருக்கும். இந்த கோப்புகள் ஒரு அடைப்பலகையை எவ்வாறு கட்டமைக்கின்றன என்பதை கீழே காட்டப்பட்டிருக்கின்ற வரிப்படம் மூலம் இலகுவாக காட்டலாம்.

இங்கே single.php கோப்பு ஒரு தனிப்பதிவை காட்டுவதற்குரிய கோப்பாகும்.
page.php என்பது ஒரு பக்கத்தை காட்டுவதற்குரிய கோப்பாகும்.
archive.php என்பது archive களை காட்டுவதற்குரிய கோப்பாகும்.

வேர்ட்பிரஸ் முகப்பு.
வேர்ட்பிரஸின் முகப்பு மற்றும் ஒவ்வொரு பக்கமும் கீழே காட்டப்பட்டவாறு அடைப்பலகை மூலம் கட்டமைக்கப்படுகின்றன.

வேர்ட்பிரஸின் அடைப்பலகை என்பது சாதாரணமாக ஒரு XHTML பக்கத்தை உருவாக்கத்தெரிந்தவருக்கு மிக இலகுவான ஒரு விடயமாகும். இங்கு கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விடயம் என்னவென்றால் dynamic ஆக மாறுபடுகின்ற அல்லது தரவுத்தளத்தில் இருந்து பெற்ப்படப்போகின்ற விடயங்களை காட்டுவதற்கா நாங்கள் சில php வரிகளை ஆங்காங்கு சேர்க்கப்போகின்றோம். அவ்வளவுதான். இதனை விளங்கிக்கொள்ள நாங்கள் வேர்ட்பிரஸ் நிறுவலோடு வருகின்ற default அடைப்பலகையினை பயன்படுத்திக்கொள்ள போகின்றோம்.

இதற்கு முன்னர் நீங்கள் இந்த WPCandy இணையத்தின், கீழே தரப்பட்டுள்ள உதவிப்பக்கத்தை தரவிறக்கி வைத்துக்கொள்ளுங்கள். அதில் கூறப்பட்டுள்ளவற்றை விளங்கிக்கொள்ள முயற்சியுங்கள். அடுத்தபாகத்தில் அது தொடர்பாக பார்ப்போம்.

[download#5#image]

குறிச்சொற்கள்: ,

9 பின்னூட்டங்கள்

  1. சடையனார் சொல்லுகின்றார்: - reply

    தம்பி அதென்ன “குரு” என்ன புது படமோ?
    அல்லது சிவராஜ பகீர தேசிகர் குருவோ? (http://jhc2003.blogspot.com/2008/04/blog-post_1227.html)

  2. பகீ சொல்லுகின்றார்: - reply

    சடையனார்,

    அது என்னெண்டா வாசிக்கிற நீங்கள்தான் குரு.. விளங்குதோ.

  3. மோகன் சொல்லுகின்றார்: - reply

    நண்பருக்கு…
    தங்களது இணைய வடிவைமைப்பை போன்று எங்களது நெல்லை தமிழ் டாட் காம் இணையத்திலும் வேர்டுபிரசை இணைக்க முயற்சித்தேன். தோல்வியில் தான் முடிந்தது. எங்கள் இணையத்தின் கண்ட்ரோல் பேனலில் இருந்து வேர்டுபிரஸ் இணைப்பு செய்து பார்த்தோம். எழுத்துக்கள் ஆங்கிலத்தில் தான் வருகிறது. மேலும் வேர்டு பிரசின் டெம்ளட்டுக்கள் சிலவற்றையும் தரவிரக்கி எப்டிபி உதவியுடன் கண்ட்ரோல் பேனலில் ஏற்றி பார்த்தாகி விட்டது. எல்லாமே தோல்வி தான். செய்வதறியாது திகைக்கிறோம். மேலும் அப்படியே வேர்டுபிரசை நிறுவி ஆங்கிலத்தில் பயன்படுத்தினாலும் புகைப்படங்களை பதிவேற்ற முடியவில்லை. தங்களை போன்று நல்ல முறையில் சொந்த தளத்தை தயாரிப்பது மிகவும் சிரமமான காரியமா… இதற்கும் நீண்ட நேரமாகும் என்று எங்களது தளத்தை வடிவமைத்த வெப்டிசைனர் சொல்கிறார். உண்மையா…
    தாங்கள் எங்கள் தளத்தை மேம்படுத்த உதவ முடியுமா

    என்றும் அன்புடன்
    அ.மோகன்
    நெல்லை தமிழ் டாட் காம்

  4. பகீ சொல்லுகின்றார்: - reply

    மோகன் வாங்க,

    கொன்றோல் பனலினால் வேர்ட்பிரஸை நிறுவினால் ஆங்கில பதிப்புதான் வரும். ஆனால் அதில் ஒரு பிரச்சனையும் இல்லை. என்னுடையதும் ஆங்கில பதிப்புதான். நீங்கள் அடைப்பலகையை தமிழில் செய்துகொண்டால் போதும்.

    அடைப்பலகை நிறுவுவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை ஏற்பட்டது என்று எனக்கு தெரியவில்லை. விளக்கமாக சொன்னால் என்ன செய்ய முடியும் என்று சொல்லுகின்றேன்.

    வேர்ட்பிரஸினை ஊரோடி போல் வடிவமைத்துகொள்ள அவ்வளவு நேரம் ஆகாது. எனக்கு ஆக மொத்தம் ஆறு மணத்தியாலங்கள்தான் எடுத்துக்கொண்டன.

    உங்கள் பிரச்சனைகளை சரியாக சொன்னீர்களானால் உதவ முயற்சிக்கின்றேன்.

  5. மோகன் சொல்லுகின்றார்: - reply

    நண்பர் பகீ அவர்களுக்கு வணக்கம்.

    தங்களது பதில் கண்டேன். எனது ஐயப்பாடுகள் சற்றே நீண்டுள்ளது.

    நான் கண்ரோல் பேனலில் சப்.டொமைன் ஒன்றை உருவாக்கி அதில் வேர்டுபிரஸ் ஆங்கில பதிப்பை பதிவிறக்கினேன். அது செயல்பட்டாலும் கூட அதில் தமிழ் எழுத்துக்களை அச்சிட முடியவில்லை. மேலும் புகைப்படங்களையும் இணைக்க முடியவில்லை. இதன் காரணமாக டெம்ளட்டுக்கள் சிலவற்றை டன்லோடு செய்து பின்னர் அவற்றை வேர்டுபிரஸ் இருந்த சப்.டொமைனில் எப்.டி.பி. வழியாக பதிவேற்றியும் பார்த்தாயிற்று. ஆனால் டெம்ளட்டோ… வேர்டு பிரசோ இயங்கவில்லை. இந்த சூழலில் வேர்டுபிரசை பயன்படுத்தி எனது இணையத்தின் சப்.டொமைனை இயக்க முடியுமா என்பது கேள்விக்குறியாக மாறிவிட்டது. தாங்கள் அடைப்பலகையை தமிழில் நிறுவினால் போதும் என்று சொல்கிறீர்கள். அடைப்பலகையை தமிழில் நிறுவ என்ன செய்ய வேண்டும். எனக்கு ஹெச்.டி.எம்.எல். லாங்வேஜ் கூட அதிகம் தெரியாத நிலையில் நான் எனது வெப்டிசைனரை தான் நாட வேண்டுமா… (ஏற்கனவே சொந்த தளம் என்ற பெயரில் டிசைனிங் நிறுவனத்திற்கு நிறைய பணம் கொடுத்தாயிற்று)
    இந்த நிலையில் தாங்கள் எனக்கு இதை வேர்டுபிரசை சொந்த தளத்தில் நிறுவுவதற்கான வழிமுறைகளை சொல்லித்தந்தால் பயனுள்ளதாக இருக்கும். தயைகூர்ந்து இந்த உதவியை செய்வீர்களா…
    குறிப்பு : இந்த உதவியை பலரிடம் இ.மெயில் வழியாக கேட்டு கடைசியில் தங்கள் உதவுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் பின்னோட்டம் எழுதியுள்ளேன். நன்றி.

  6. பகீ சொல்லுகின்றார்: - reply

    மோகன்,

    தமிழ் எழுத்துக்களை பதிய முடியாமைக்குரிய காரணம் உங்கள் தரவுத்தளம் யுனிகோட் ஒருங்கு குறிக்கு மாற்றப்படாமையால் இருக்கலாம்.

    அடைப்பலகையை தமிழில் மாற்றுதல் என்பது நாங்கள் ஒரு சாதாரண இணையத்தை (html static page) தமிழில் உருவாக்குவது போன்றதுதான். ஆங்கில அடைப்பலகையில் தமிழ் சொற்களை சேர்க்கும் வேலைதான் உங்களிடம் இருக்கும். இது தொடர்பான ஒரு விளக்க பதிவை இரு நாட்களுக்குள் இட முயற்சிக்கின்றேன்.

    உங்களுக்கு என்ன விதமான உதவி தேவையென விளக்கமாக கூறினீர்களென்றால் என்னால் முடிந்தளவு உதவ முயற்சிக்கின்றேன்.

  7. மோகன் சொல்லுகின்றார்: - reply

    தமிழ் எழுத்துக்களை பதிய முடியாமைக்குரிய காரணம் உங்கள் தரவுத்தளம் யுனிகோட் ஒருங்கு குறிக்கு மாற்றப்படாமையால் இருக்கலாம்:))

    நீங்கள் சொல்வது போல தரவு தளம் ஆங்கிலத்தில் இருந்தால் மெயின் டொமைனிலின் தமிழில் அச்சிட முடிகிறது. சப்.டொமைனில் வேர்டுபிரஸ் பாவித்தால் அதில் தமிழில் இடுகைகளை பதிவிட முடியவில்லை.

    வேர்டுபிரசை சப்.டொமைனில் பதிவிறக்கிய பின்பு அடைப்பலகைகளில் செய்யவேண்டிய மாற்றங்கள் என்ன?

    வேர்டுபிரஸ் அடைப்பலகைகளை வேறு டிசைனிங் வெப்தளத்தில் இருந்து டவுண்லோடு செய்து மீண்டும் அடைப்பலகையை மாற்ற தரவுதள சப்.டொமைனில் நேரடியாக எப்.டி.பி. மூலம் பதிவேற்ற வேண்டுமா அல்லது அடைப்பலகையின்
    index.php
    style.css
    single.php
    page.php
    archive.php
    category.php
    comment.php
    comment_popup.php
    search.php
    footer.php
    header.php
    sidebar.php
    போன்ற php பைல்களை மட்டும் மாற்றம் செய்ய வேண்டுமா.. என்பது புரியவில்லை.

    என் போன்று திக்கு தெரியாமல் இணையத்தில் புகுந்தவர்களுக்காக வேர்டுபிரஸ் இணைப்பு தொடர்பான நீண்ட பதிவிட்டால் நலமாக இருக்கும்.

    குறிப்பு : cpanel என்ற தரவு தளத்தில் எனது டொமைன் இயங்கி வருகிறது.

  8. பகீ சொல்லுகின்றார்: - reply

    மோகன்,

    முன்னரே சொன்னது போன்று cpanel ஊடாக வேர்ட்பிரஸை நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் தொடர்பாக ஒரு பதிவினை விரைவில் விளக்கமாக இடுகின்றேன்.

    ஏனைய வேர்ட்பிரஸ் விடயங்களைத்தான் தொடராக எழுதி வருகின்றேனே..

  9. மோகன் சொல்லுகின்றார்: - reply

    நன்றி பகீ
    என்றும் அன்புடன்
    மோகன்