CSS – ஆரம்ப வழிகாட்டி தமிழில்.
சில நாட்களுக்கு முன்னர் ஒரு CSS HELP SHEET ஒன்றினை எழுதி ஊரோடியில் தரவிறக்க விட்டிருந்தேன். ஆது CSS தெரிந்தவர்களுக்கு ஒரு உசாத்துணையாக மட்டுமே இருக்கும் என்றும் அப்போது குறிப்பிட்டிருந்தேன். ஆனால் அதனை தரவிறக்கிய பலரும் CSS இற்கு புதியவர்களாக இருந்தமையினால் CSS இனை ஆரம்பித்தில் இருந்து கற்பதற்கான வழிமுறையை கேட்டிருந்தார்கள். இன்னும் சிலர் இலகுவான குறிப்புகள் ஏதும் இருந்தால் அதனை தருமாறும் கேட்டிருந்தார்கள்.
அதனைத்தொடர்ந்து CSS கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்காக தமிழில் CSS ஒரு ஆரம்ப வழிகாட்டி என்கின்ற குறிப்புப்புத்தகத்தினை எழுதியிருக்கின்றேன்.
இந்த குறிப்புபுத்தகம் CSS பற்றி எதுவும் அறியாதவர்கள் கூட CSS இனை தாங்களாகவே கற்று உபயோகப்படுத்தக்கூடிய வகையில் எழுதப்பட்டிருக்கின்றது, தரவேற்றுவதில் உள்ள இணைய சிக்கல் காரணமாக இதனை நான் மூன்று பாகங்களாக பிரித்துள்ளேன். முதற்பாகத்தை கீழே சொடுக்கி தரவிறக்கி கொள்ளுங்கள். உங்களுக்கு பயனுடையதாக இருந்தால் அல்லது உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள் இருந்தால் பின்னூட்டம் மூலம் தெரியப்படுத்துங்கள். (தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்ப வேண்டாம்) மற்றைய பாகங்களையும் தரவேற்றுகிறேன்.
[download#1#image]பாகம் – 2
[download#2#image]இதனை நீங்கள் உங்கள் சொந்த தேவைக்கன்றி வேறு எந்த விதத்திலாயினும் பயன்படுத்துவதாக இருப்பின் மின்னஞ்சல் மூலமோ அல்லது பின்னூட்டம் மூலமோ முன் அனுமதி பெறல் வேண்டும்.
பலருக்கும் மிகவும் பயனுள்ளது.
உங்கள் முயற்ச்சிகளுக்கு நன்றிகளுடன் வாழ்த்துகள்..!!!
பகீ,
பாத்து நாளாச்சு, வேலைக்குப் போக வெளிக்கிட்டாப் பிறகு என்ர வலைப்பதிவையும் பாக்குறதில்ல பின்னூட்டங்களும் போடுறதில்ல.
நான் css படிச்சது Head First புத்தகத்தில இருந்து. அதை நான் ஆர்வமா படிச்சனான் ஏனெண்டா படங்களோட போட்டிருந்தாங்கள்.
உங்கட வழிகாட்டியும் படங்களோட விளங்குறதுக்கு இலகுவா இருக்குது.
தமிழனா இணைய உலகில தமிழில ஏதாவது கணிணி சம்பந்தமா எழுதவேணுமெண்டு நெடுகலும் நினைக்கிறனான்.
உங்கட நல்ல முயற்சியைப் போல நானும் எழுதவேணும்.
தொடர்ந்து எழுதுங்கோ பகீ.
மதுவதனன் மௌ (எ) கௌபாய்மது
மிக்க நன்றி பகீ…
எச்டிஎம்எல் டாங்வேஜே தெரியாத என் போன்றவர்களுக்கு இந்த சிஎஸ்எஸ் கொஞ்சம் கஷ்டம் தான் இருந்தாலும் உங்கள் வலைத்தளத்தில் இருந்து நான் நிறையவே கற்றுக்கொண்டிருக்கிறேன் என்பது உண்மை. நன்றி.
அப்புறம் ஒரு சிறிய சந்தேகம்…
மிகவும் கஷ்டப்பட்டு சர்வரில் http://blog.nellaitamil.com/b/
வேர்டு பிரஸ் பதிவேற்றி விட்டேன். ஆனால் தமிழில் அச்சிட்டால்????????????????? இப்படி கேள்விக்குறிகள் தான் வருகிறது…
அப்புறம் புகைப்படங்களை பதிவேற்றும் போது HTTP Erour என்ற பிழைச்செய்தி வருகிறது. இந்த இரண்டையும் சரி செய்ய என்ன செய்யலாம் என்று கொஞ்சம் சுருக்கமாக சொன்னால் புரிந்து கொள்வேன் என்று நினைக்கிறேன். சிரமம் பார்க்காமல் ஒரு பதிவெழுதி போட்டால் உங்களுக்கு புண்ணியமா போகும். நன்றி பகீ….
நிமல் வாங்க,
உங்கள் பாராட்டுக்கு நன்றி
மதுவதனன் வாங்க,
தயவு செய்து எழுதுங்க, பலருக்கும் உதவியா இருக்கும்.
பிறகு பின்னூட்டத்திற்கு நன்றி.
மோகன் வாங்க,
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. நீங்கள் கேட்டது தொடர்பான பதிவு ஒன்று எழுத்திக்கொண்டிருக்கின்றேன். இரண்டொரு நாட்களில் வலையில் காணலாம்.
உங்கள் வேர்ட்பிரஸ் நிறுவலை சென்று பார்த்தேன் காணவில்லை என்று சொல்கிறது.
நண்பர் பகீ…
மேற்குறிப்பிட்ட தெம்ப் மாற்றி அமைக்கும் பணிகளின் போது காணாமல் போய்விட்டது. கீழ்குறிப்பிட்ட தளத்தில் மாற்றிப்பார்த்தேன். அப்படியும் சரியாகவில்லை.
http://tamilcinema.nellaitamil.com/cine/
அப்புறம் வேர்டுபிரஸ் “பிளக்கின்” அப்லோடு செய்ய எப்டிபி வழியாக வேர்டுபிரஸ் சென்று வெப் கன்டெண்ட்டில் உள்ள பிளாக்கின் பகுதியில் தரவேற்றினேன். ஆனால் பிளக்கின் வேலை செய்யவில்லை. இதை தொடர்ந்து பல நாட்களாக வேர்ட்பிரசில் தமிழில் பதிவு செய்வதற்கான வழிமுறைகளை தேடிக்கொண்டிருக்கிறேன். தங்களின் முன்னைய பதிவுகளில் இந்த ஆக்கம் இடம் பெற்றுள்ளதா என்று தேடி களைத்து விட்டேன்.
தாங்கள் என் போன்ற கத்துக்குட்டிகளுக்கு பதிவெழுதும் போது குறிப்பாக தெம்ப் பதிவேற்றுவது முதல் பிளக்கின்… புகைப்படத்தை படைப்புக்களுடன் இணைத்து பதிவேற்றுவது மற்றும் தமிழில் பதிவுகளை எழுதுவது போன்ற தகவல்களை இணைத்தால் பயனுள்ளதாக இருக்கும். இதை தமிழகத்தில் உள்ள பல வலை ஜாம்பவான்களிடம் எல்லாம் வைத்தாகி விட்டது. நீங்கள் உதவுவீர்கள் என்ற நம்பிக்கையோடு…
மோகன்
http://www.nellaitamil.com
நல்ல முயற்சி பகீ வாழ்த்துக்கள்
மோகன்,
விரைவில் இது தொடர்பாக பதிவிடுவேன். வேர்ட்பிரஸ் தொடரையும் எழுதிக்கொண்டிருப்பதால் தாமதமாகின்றது.
பகீ
மாயா வாங்க,
வாழ்த்துக்கு நன்றி
மிக்க நன்றி பகீ, பலருக்கும் இது பயனுடையதாக இருக்கப் போகின்றது.
கொஞ்சம் கொஞ்சமாய் ஆரம்பித்து இப்போது ஒரு படத்தை மட்டும் பதிவேற்றும் வரையில் வந்துள்ளேன். இந்த படத்தையும் சர்வரில் எப்.டி.பி வழியாவே பதிவேற்ற முடிகிறது. ஆனாலும் ஓரளவு வேர்ட்பிரசை பற்றி கொஞ்சமாவது தெரிந்து கொண்ட திருப்தி உள்ளது. இந்நிலையில் தங்களது பதிவு வந்தால் இதை முழுமையாக புரிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன். நன்றி. கீழ் குறிப்பிட்டுள்ள இந்த தளத்திற்கு சென்று தங்களின் கருத்தை கூறுவீர்களா… நன்றி.
http://tamilcinema.nellaitamil.com/cine/
உங்கள் முயற்ச்சிகளுக்கு நன்றிகளுடன் வாழ்த்துகள்..!!!
கானா பிரபா அண்ணை, உமைகரன் வாங்க,
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
மோகன் உங்கள் தளம் பார்த்தேன். மிகவும் அழகாய் இருக்கு.
ஆனா நீங்கள் அதைப்பற்றி என்ன சொல்லச்சொல்லி கேக்கிறீங்க எண்டுதான் விளங்கேல்ல..
பகீ…
தங்களை போன்றோர் தளம் குறித்து நல்ல அபிப்பிராயத்தை வெளிப்படுத்தினர். தங்களுக்கு நன்றி. தங்களின் சிஎஸ்எஸ் ஸ்டைல் சீட் தயாரிக்கும் முறை குறித்த பதிவுகள் என்போன்றோருக்கு மிகவும் பயனுள்ளதாய் அமையும். இந்த ஆக்கத்தை தொடர்ந்து எழுதும் உங்களுக்கு பாராட்டுக்கள்.
[…] பாகம் இரண்டை தரவேற்றியிருக்கிறேன். இங்கு சென்று தரவிறக்கி […]
வாழ்த்துக்கள்.
சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் css பற்றி எழுதிய இரண்டு தொடுப்புகள்
இணையதள அலங்காரம்
இணையதள அலங்காரம் – 2
http://techtamil.blogspot.com/2006_08_01_archive.html
மோகன் வாங்க,
உண்மையில் அந்த அடைப்பலகை மிகவும் அழகானது. அத்துடன் நீங்களும் அதனை சிறந்த முறையில் பயன்படுத்தி உள்ளீர்கள்.
நானும் எனது ஆங்கில பதிவொன்றிற்கு அதனை அடைப்பலகையாக பயன்படுத்தி வருகின்றேன்.
மாகிர் வாங்க,
உங்கள் வாழ்த்துக்கும் தகவலுக்கும் நன்றி.
[…] இந்த நீட்சி CSS கோப்பு மூலமாக உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுகிறது. CSS பற்றி தெரிந்திருக்கவேண்டுமென எந்த அவசியமுமில்லை. ஆனால் தெரியுமென்றால் உங்கள் விருப்பம் போல Skin ஐ மாற்றியமைக்கலாம். CSS பற்றிய இலவச புத்தகம் சக பதிவாளர் பக
I need help for getting approval of an account from google adsense and I have above website, How can I publish my website to the visitors and get earn money. thanking you.
Thanks.
சுருங்க சொன்னால்…மிக அருமை…!
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்..
நட்புடன் – மஸாகி
29072009
நன்றி ………
நன்றி …..
உங்களுக்கு வோர்ட்ப்றேச்ஸ் டிசைன் தெரியுஅ nenraga ??