Web 2.0 என்றால் என்ன ?

அறிமுகம்.
Web 2.0 என்பது இணையத்தளங்களின் புதியதொரு பதிப்பாகும். Web 2.0 அடிப்படையில் அமைவதன் மூலம் இணையத்தளங்கள் கவர்ச்சிகரமானவையாயும், பயன்படுத்த இலகுவானவையாயும், பிரகாசமானவையாயும் மாறப்போகின்றன. இது வெறுமனே இணையத்தளங்களின் வடிவமைப்பில் மட்டும் மாற்றங்களை மேற்கொள்ளுவதாயல்லாது இணையத்தளங்களின் வியாபாரக் கொள்கைகள், திட்டமிடல் கொள்கைகள் மற்றும் பயன்பாட்டு கொள்கைகளிலும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

Web 1.0 சின்னங்களுக்கும் Web 2.0 சின்னங்களுக்கும் இடையேயான வேறுபாடுகளை கீழே பாருங்கள்.

இனி நாங்கள் எங்களின் இணையப்பக்கங்களை எவ்வாறு Web 2.0 அடிப்படைக்கு அமைவாக மாற்றுவது என பார்ப்போம்.

இலகுத்தன்மை
Web 2.0 வடிவமைப்பு பயன்படுத்த இலகுவானதாய் பெரிய எழுத்துக்களையும் அதிக படங்களையும் கொண்டதாய் அமைந்திருத்தல் வேண்டும். வேண்டும். எழுதப்பட்ட விடயங்கள் மிகக் குறைவாயே இருத்தல் வேண்டும். கீழே சில உதாரணங்களை பாருங்கள்.

மையப்படுத்தப்பட்ட விடயங்கள்.
கீழே காட்டப்பட்டுள்ள உதாரணங்களை போன்று விடயங்கள் இணையப்பக்கத்தின் மையத்தில் அமைதல் வேண்டும். சூழ உள்ள வெறுமையான பிரதேசங்கள் Gradient நிறங்களால் நிரப்பப்பட்டிருத்தல் வேண்டும்.

Web 2.0 இல் Horizontal navigation மிகவும் பொதுவாக பயன்படுத்த படுகின்றத்தப்படும் வடிவமைப்பாகும். இது பெரிய எழுத்துருக்களில் அனைவருக்கும் தெரியக்கூடியதாக அமைக்கப்பட்டிருக்கும். கீழே சில உதாரணங்களை பாருங்கள்.

பின்னணி.
Web 2.0 இணையத்தளங்களின் பின்னணி பொதுவாக Gradiaent colors இலோ அல்லது diagnol line pattern இலோ காணப்படும். கீழே சில உதாரணங்களை பாருங்கள்.

ஒளித்தெறிப்பு
Web 2.0 இன் இன்னுமொரு அடிப்படை நீங்கள் இணையப்பக்கத்தில் பயன்படுத்தும் சில படங்களுக்கு (குறிப்பாக சின்னங்களுக்கு) கீழே காட்டப்பட்டுள்ள உதாரணங்களை போன்று ஒளித்தெறிப்பினை ஏற்படுத்துதல்.

வட்டவடிவ மூலைகள்.
இணையத்தளத்தில் பயன்படுத்தப்படும் சதுரங்கள், buttons, text boxes போன்றவற்றின் மூலைகளை வட்டவடிவமாக்கலும் இந்த வடிவமைப்பில் புதியதொரு விடயமாகும்.
கீழே சில உதாரணங்களை பாருங்கள்.

Light box
இதுவும் புதிய வடிவமைப்பு முறையில் காணப்படும் ஒரு விடயமாகும். பெரிய படங்கள் மற்றும் பிழைச்செய்திகள் போன்றவற்றை காட்டுவதற்கு இது பயன்படுத்தபடுகின்றது. கீழே உதாரணத்தை பாருங்கள்.

Ajax
எப்போதும் Web 2.0 இனை பற்றி கதைக்கும்போது AJAX இனைப்பற்றியும் சேர்த்தே கதைக்கின்றோம். இது உங்கள் இணையப்பக்கங்களை கவர்ச்சிகரமானவையாயும், பயன்படுத்த இலகவானவையாயும், வேகமானவையாயும் மற்றுகின்றது.

Syndication
உங்கள் இணையத்தளத்திற்கு RSS Syndication பயன்படுத்தபட்டிருத்தல் வேண்டும். அத்தோடு கீழ் காட்டப்பட்டது போன்று பயன்படுத்த இலகுவாக feed icons உம் காணப்படவேண்ட

ும்.

Bookmarking
உங்கள் இணையப்பக்கத்தை பயனாளர்கள் Bookmark செய்யக்கூடியவாறு digg, delicious, reddit சின்னங்கள் காணப்படவேண்டும்.

பெரிய எழுத்துருக்கள
உங்கள் Web 2.0 வடிவமைப்பில் பெரிய தெளிவான எழுத்துருக்கள் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

பிரகாசமான நிறங்கள்
உங்கள் வடிவமைப்பிற்கு பிரகாசமான நிறங்கள் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

உங்கள் சேவை பற்றிய அறிமுகம்.
உங்கள் இணையத்தளத்தின் முதற்பக்கத்தில் உங்கள் செவை பற்றிய பத்தி காணப்படவேண்டும். இது பெரிய எழுத்திலும் படங்கள் புள்ளடிகள் கொண்டதாயும் அமைந்திருத்தல் வேண்டும்.

Web 2.0 நட்சத்திரம்
அனேகமான Web 2.0 இணையத்தளங்களில் புதிய விடயங்களை அறிமுகப்படுத்துதல், எண்களிடல் போன்ற தேவைகளுக்கு ஒரு நட்சத்திரம் பயன்படுத்தப்பட்டிருப்பதனை அவதானித்திருப்பீர்கள். இவற்றை நீங்களும் பயன்படுத்த வேண்டும். கீழே சில உதாரணங்களை பாருங்கள்.

Beta version
உங்கள் இணையப்பக்கம் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கப்படும் போது அல்லது மேம்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்ற போது ஒரு Beta சின்னம் அல்லது சொல்லு உங்கள் இணையப்பக்கத்தில் காணப்பட வெண்டும்.

பயனாளர்களின் பங்களிப்பு

உங்கள் இணையத்தளத்திற்கு பயனாளர்களின் பங்களிப்பு கட்டாயம் இருத்தல் வேண்டும். இது ஒரு பின்னூட்டப்பெட்டியாக, விக்கி பக்கமாக அல்லது வேறு எந்த விதமாகவாவது இருக்கலாம்.
உதாரணம்
wikipedia : wiki based
Digg : contents sharing
WordPress : comments sections and ratting.

இது சம்பந்தமான உங்கள் கருத்துக்களையும் பின்னூட்டமிடுங்கள்.

குறிச்சொற்கள்:

34 பின்னூட்டங்கள்

  1. ஜி சொல்லுகின்றார்: - reply

    அடேங்கப்பா.. இவ்வளவு விசயங்களா?

    அருமையானப் பகுதி. பகிர்ந்தமைக்கு நன்றி…

    ஜி.

  2. ஜி சொல்லுகின்றார்: - reply

    அடேங்கப்பா.. இவ்வளவு விசயங்களா?

    அருமையானப் பகுதி. பகிர்ந்தமைக்கு நன்றி…

    ஜி.

  3. Anonymous சொல்லுகின்றார்: - reply

    Excellent.

  4. Anonymous சொல்லுகின்றார்: - reply

    Excellent.

  5. பகீ சொல்லுகின்றார்: - reply

    ஜி வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

    அனானி பின்னூட்டத்திற்கு நன்றி

  6. பகீ சொல்லுகின்றார்: - reply

    ஜி வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

    அனானி பின்னூட்டத்திற்கு நன்றி

  7. Anonymous சொல்லுகின்றார்: - reply

    நண்பரே உஙகள் வலைத்தளம் web 2.0 வால் ஆனதா இல்லை என்றால் நீங்கள் வடிவமைத்த வேறொரு web2.0 வலைத்தளத்தை காண்பிக்கவும்

    நன்றி

  8. Anonymous சொல்லுகின்றார்: - reply

    நண்பரே உஙகள் வலைத்தளம் web 2.0 வால் ஆனதா இல்லை என்றால் நீங்கள் வடிவமைத்த வேறொரு web2.0 வலைத்தளத்தை காண்பிக்கவும்

    நன்றி

  9. பகீ சொல்லுகின்றார்: - reply

    இந்த வலைப்பதிவு ஓரளவுக்கு Web 2.0 வசதிகளை கொண்டுள்ளது. Light box, book marking, feedings, tags, comments மற்றும் சில. விரைவில் Web 2.0 இற்கு பூரணமாக மாற்றி விடுவேன் என நினைக்கின்றேன்.

    அது சரி இதைக்கேட்க ஏன் அனானியா வரணும்??

    பின்னூட்டத்திற்கு நன்றி

  10. பகீ சொல்லுகின்றார்: - reply

    இந்த வலைப்பதிவு ஓரளவுக்கு Web 2.0 வசதிகளை கொண்டுள்ளது. Light box, book marking, feedings, tags, comments மற்றும் சில. விரைவில் Web 2.0 இற்கு பூரணமாக மாற்றி விடுவேன் என நினைக்கின்றேன்.

    அது சரி இதைக்கேட்க ஏன் அனானியா வரணும்??

    பின்னூட்டத்திற்கு நன்றி

  11. - உடுக்கை முனியாண்டி சொல்லுகின்றார்: - reply

    பகீ

    நல்ல ஒரு பதிவு. முதல்ல உங்களோட முயற்சிக்கு ஒரு பாராட்டு.

    ஆனா Web2.0 ன்னா என்னன்றதை கொஞ்சம் தெளிவா சொல்லிருக்கலாம்.
    நீங்க சொன்ன முக்கால் வாசிக்கு மேல எல்லாமே வடிவமைப்பு பத்தினது. இதுக்கும் web2.0 க்கும் ரொம்ப பெரிய சம்பந்தம் இல்லை. சில web2.0 பக்கங்கள் இந்த மாதிரி இருக்குன்றதனால இதுதான் அதுன்னு எப்டி சொல்ல முடியும். அதனால நீங்க சொன்ன எல்லாமே web2.0 உபயோகப்படுத்தப்படுற வலைப்பூக்கள் எப்படி இருக்குன்றது மட்டும் தான், web2.0ன்னா என்னங்கிறதுக்கான விளக்கம் கிடையாது.

    இப்படியான ஒரு வரையறையை நீங்க எங்கருந்து எடுத்தீங்கன்னு தெரியலை.
    சரியான வரையறைன்னு ஒன்னு இல்லாட்டி கூட இந்த விக்கி பக்கம் உங்களுக்கு உதவக்கூடும்.

    http://en.wikipedia.org/wiki/Web_2.0

    மத்தபடி நல்லா எழுதீட்டு வர்றீங்க பாராட்டுக்கள்.

    இது உங்களுக்கான தனிப்பட்ட மடல், பிரசுரிக்க தேவையில்லை.

  12. யோகன் பாரிஸ்(Johan-Paris) சொல்லுகின்றார்: - reply

    ஜீ!
    நல்ல தமிழுலக நடப்புச் சொல்லும் கதை. ஆனால் கவிதாவும் தான் எல்லா ஆண்களையும் சொல்லவில்லை.
    என்று கூறியுள்ளதை அன்புள்ளத்துடன் மதிப்போம்.
    யோகன் பாரிஸ்

  13. யோகன் பாரிஸ்(Johan-Paris) சொல்லுகின்றார்: - reply

    பகீ!
    நீங்க சொல்லச் சொல்ல ஆசையாகத்தான் இருக்கு!!ஆனால் பல்லில்லாதவன் புளுக்கொடியலுக்கு ஆசைப்படக்கூடாது.நம் நிலை அப்படியே!!எனிமும் பலருக்குப் பயனான செய்தி!
    மிக்க நன்றி
    யோகன்

  14. - உடுக்கை முனியாண்டி சொல்லுகின்றார்: - reply

    பகீ

    நல்ல ஒரு பதிவு. முதல்ல உங்களோட முயற்சிக்கு ஒரு பாராட்டு.

    ஆனா Web2.0 ன்னா என்னன்றதை கொஞ்சம் தெளிவா சொல்லிருக்கலாம்.
    நீங்க சொன்ன முக்கால் வாசிக்கு மேல எல்லாமே வடிவமைப்பு பத்தினது. இதுக்கும் web2.0 க்கும் ரொம்ப பெரிய சம்பந்தம் இல்லை. சில web2.0 பக்கங்கள் இந்த மாதிரி இருக்குன்றதனால இதுதான் அதுன்னு எப்டி சொல்ல முடியும். அதனால நீங்க சொன்ன எல்லாமே web2.0 உபயோகப்படுத்தப்படுற வலைப்பூக்கள் எப்படி இருக்குன்றது மட்டும் தான், web2.0ன்னா என்னங்கிறதுக்கான விளக்கம் கிடையாது.

    இப்படியான ஒரு வரையறையை நீங்க எங்கருந்து எடுத்தீங்கன்னு தெரியலை.
    சரியான வரையறைன்னு ஒன்னு இல்லாட்டி கூட இந்த விக்கி பக்கம் உங்களுக்கு உதவக்கூடும்.

    http://en.wikipedia.org/wiki/Web_2.0

    மத்தபடி நல்லா எழுதீட்டு வர்றீங்க பாராட்டுக்கள்.

    இது உங்களுக்கான தனிப்பட்ட மடல், பிரசுரிக்க தேவையில்லை.

  15. யோகன் பாரிஸ்(Johan-Paris) சொல்லுகின்றார்: - reply

    ஜீ!
    நல்ல தமிழுலக நடப்புச் சொல்லும் கதை. ஆனால் கவிதாவும் தான் எல்லா ஆண்களையும் சொல்லவில்லை.
    என்று கூறியுள்ளதை அன்புள்ளத்துடன் மதிப்போம்.
    யோகன் பாரிஸ்

  16. வசூல் ராஜா சொல்லுகின்றார்: - reply

    Web 2.0 is not AJAX and visual design. We typically see a site that has bright colors and fancy shadow effects and say, “Web 2.0.” That is not the case.

    In a simple definition, Web 2.0 is harnessing collective intelligence through the internet. Think Myspace and Youtube. Both rely on user generated content. They have some color schemes and such which fit the design bill, but that is not what their business model is centered around.

    taken from

    http://www.jdsblog.com/2006/10/30/the-essentials-of-creating-web-20-sites/

  17. வசூல் ராஜா சொல்லுகின்றார்: - reply

  18. பகீ சொல்லுகின்றார்: - reply

    முனியாண்டி, வசூல்ராஜா உங்கள் வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி. உங்கள் பின்னூட்டங்கள் சம்பந்தமாக நிச்சயமாக ஒரு பின்னூட்டமிடுவேன்.

    யோகன் அண்ணா என்ன நடந்தது?????

  19. பகீ சொல்லுகின்றார்: - reply

    முனியாண்டி, வசூல்ராஜா உங்கள் வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி. உங்கள் பின்னூட்டங்கள் சம்பந்தமாக நிச்சயமாக ஒரு பின்னூட்டமிடுவேன்.

    யோகன் அண்ணா என்ன நடந்தது?????

  20. johan-paris சொல்லுகின்றார்: - reply

    பகீ!
    நீங்கள் கூறியபடி “தீநரி” ஏற்றி இப்போ வாசிக்க முடிகிறது. மாறி மாறி இரண்டிலும் வாசித்து எழுதி ஒட்டியதால் ஏற்பட்ட தவறு ,அதை நீக்கிவிடவும்.
    நீங்கள் போடும் கணணி பற்றிய பதிவெல்லாம் எனக்குச் சரிப்படுமா??என் கதி பல்லில்லாதவன் புளுக்கொடியலுக்கு ஆசைப்பட்டது போல் தான், விபரம் தெரிந்தவர்களுக்கு நல்ல தகவல்களே!!தொடரவும்;நான் படித்துப் பின்னூட்டுவேன். மாதமோரு பதிவோ அதுகூட இல்லை. எப்படியோ இருக்கட்டும். எனக்குப் பின்னூட்டமிட வசதியிருந்தால் போதும்.
    யோகன் பாரிஸ்

  21. johan-paris சொல்லுகின்றார்: - reply

  22. பகீ சொல்லுகின்றார்: - reply

    யோகன் அண்ணா பின்னூட்டத்திற்கு நன்றி.

    உங்கள் பின்னூட்டம் ஒன்றே போதும் எங்களை ஊக்கப்படுத்த

  23. பகீ சொல்லுகின்றார்: - reply

    யோகன் அண்ணா பின்னூட்டத்திற்கு நன்றி.

    உங்கள் பின்னூட்டம் ஒன்றே போதும் எங்களை ஊக்கப்படுத்த

  24. நற்கீரன் சொல்லுகின்றார்: - reply

    இந்த தகவல்களை தமிழ் விக்கிபீடியாவிலும் சேர்த்தால் நன்று. http://www.ta.wikipedia.org நன்றி.

  25. நற்கீரன் சொல்லுகின்றார்: - reply

    இந்த தகவல்களை தமிழ் விக்கிபீடியாவிலும் சேர்த்தால் நன்று. http://www.ta.wikipedia.org நன்றி.

  26. பகீ சொல்லுகின்றார்: - reply

    நற்கீரன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ஆனால் பின்னூட்டங்களை பார்த்தபின்னர் இதில் சிலவற்றை விளக்கி எழுதுவது என தீர்மானித்து எழுதிக்கொண்டிருக்கின்றேன். அதன்பின் நிச்சயமாக………

  27. பகீ சொல்லுகின்றார்: - reply

    நற்கீரன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ஆனால் பின்னூட்டங்களை பார்த்தபின்னர் இதில் சிலவற்றை விளக்கி எழுதுவது என தீர்மானித்து எழுதிக்கொண்டிருக்கின்றேன். அதன்பின் நிச்சயமாக………

  28. யோகன் பாரிஸ்(Johan-Paris) சொல்லுகின்றார்: - reply

    பகீ!
    நீங்க சொல்லச் சொல்ல ஆசையாகத்தான் இருக்கு!!ஆனால் பல்லில்லாதவன் புளுக்கொடியலுக்கு ஆசைப்படக்கூடாது.நம் நிலை அப்படியே!!எனிமும் பலருக்குப் பயனான செய்தி!
    மிக்க நன்றி
    யோகன்

  29. அன்பே சிவம் சொல்லுகின்றார்: - reply

    நல்ல ஒரு பதிவு. உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

  30. அன்பே சிவம் சொல்லுகின்றார்: - reply

    நல்ல ஒரு பதிவு. உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

  31. Anonymous சொல்லுகின்றார்: - reply

    இதில் யாஹூ முன்னோடியாய் இருந்தது.. 🙂

  32. Anonymous சொல்லுகின்றார்: - reply

    இதில் யாஹூ முன்னோடியாய் இருந்தது.. 🙂

  33. தமிழ்பித்தன் சொல்லுகின்றார்: - reply

    உண்மையில் என்பது இணைய இணைய வடிவமைப்பில் அடுத்த மைல் கல்லே இதுவரைகாலமும் அது இணையத்தளங்களுக்கே உரித்தான ஒன்றாக கருதப்பட்டு வந்தாலும் ஒருசில தினங்களுக்கு முன் ஒருசில ஆங்கில புளொக் நண்பர்கள் முன்று விட்டு ஏனோ பழமைக்கு திரும்பினார்கள் ஆனால் இத பற்றி படுப்பாய்வு செய்கிறோம் விரைவில் வெளிக்கொண்டு வருவேன்
    கொசுறு:-நான் தான் இது பற்றி எழுத என்று இருந்தன் முந்தி விட்டியல் வாழ்த்துக்கள் ஒரு சில தினத்தில் நானும் எழுதுவன்

  34. தமிழ்பித்தன் சொல்லுகின்றார்: - reply