சில வியப்பூட்டும் விடயங்கள்.

இந்த வியப்பூட்டுகின்ற உண்மையான விடயங்களை நீங்கள் ஒருவேளை அறிந்திருக்கக்கூடும். இது அறியாதவர்களுக்காக.

  1. ஒரு நான்கு வயது சராசரிக் குழந்தை ஒரு நாளைக்கு நானூறு கேள்விகளுக்கு மேல் கேட்கின்றது.
  2. உலகிலுள்ள நாற்பத்திஎட்டு ஏழை நாடுகள் கொண்டுள்ள சொத்தைவிட உலகின் மூன்று பெரிய பணக்கார குடும்பங்களின் சொத்து மதிப்பு அதிகமாகும்.
  3. உலகின் மிகவயது குறைந்த பெற்றார்கள் வயதுகள் முறையே எட்டு, ஒன்பது. இவர்கள் 1910 இல் சீனாவில் வாழ்ந்தார்கள்.
  4. “I am” என்பதுதான் ஆங்கில மொழியிலுள்ள பூரணமான சிறிய வசனமாகும்.
  5. “மொனோலிசா”விற்கு புருவங்கள் இல்லை.
  6. நேரத்தின் மிகச்சிறிய அலகு யொக்ரோசெக்கன்ட் (yoctosecond)
  7. ஆண்களை விட பெண்கள் இருமடங்கு அதிக தடவை கண்சிமிட்டுகின்றார்கள்.
  8. “TYPEWRITER” எனும் ஆங்கிலச் சொல்லுத்தான் விசைப்பலகையின் ஒருவரியினை மட்டும்கொண்டு உள்ளிடக்கூடிய மிகப்பெரிய சொல்லு.
  9. பன்றிகளால் ஒருபோதும் வானத்தினை பார்க்க இயலாது. அவற்றின் உடல்வாகு அதற்கு இடங்கொடுக்காது.
  10. 111,111,111 x 111,111,111 = 12,345,678,987,654,321
  11. உலகிலுள்ள மிகவும் பொதுவான பெயர் “மொகமட்” (Mohammed)
  12. உலகிலேயே துள்ளிக்குதிக்க முடியாத மிருகம் யானை மட்டுமே.
  13. “Stewardesses” என்ற ஆங்கில சொல்தான் இடக்கையால் மட்டும் விசைப்பலகையில் உள்ளிடக்கூடிய மிகப்பெரிய சொல்லாகும்.
  14. சிகரெட் லைற்றர்கள் நெருப்புப்பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட முன்னரே கண்டுபிடிக்கப்பட்டு விட்டன.
குறிச்சொற்கள்:

4 பின்னூட்டங்கள்

  1. குமரன் (Kumaran) சொல்லுகின்றார்: - reply

    நல்ல தகவல்கள் பகீ.

    1. இதனை நான் முழுமையாக ஏற்று கொள்கிறேன். தினம் தினம் அனுபவிக்கிறேனே இதனை. கேள்விக்குத் தானே பதிலைச் சொல்லிவிட்டு பின்னர் ஏன் என்று ஒரு கேள்வி கேட்பாளே. என்ன சொல்வது என்று தெரியாமல் முழிப்பேனே. 🙂

    2. இது நம்பும் படியாக இருக்கிறது.

    3. இது நம்பும் படியாக இல்லை. ஆனால் உண்மை என்று நீங்கள் சொன்னதால் நம்புகிறேன்.

    4. இது ஓகே. ஆமாம் ஓகே முழுமையான வார்த்தை இல்லையா? 🙂

    5. அந்தக் காலத்தில் பெண்கள் புருவத்தை மழித்துவிடுவது தான் அழகு என்று நினைத்தார்களாம்.

    6. நல்ல தகவல். நன்றி. ஆனால் நான் இதனை விரைவில் மறந்துவிடுவேன். என்ன செய்வது? மறந்துவிடுகிறதே. 🙂

    7. இது ஏன்?

    8. அட ஆமாம்.

    9. அப்படியா? அடுத்த முறை பன்றியைப் பார்க்கும் போது கவனிக்கணும்.

    10. இது இந்த எண்ணிற்கு மட்டும் இல்லை. 11 * 11, 111 * 111, 1111 * 1111 என்று இந்தத் தொடரில் இருக்கும் எல்லா எண்களுக்கும் இதனைப் பார்க்கலாம்.

    11. இதனை நம்பலாம்.

    12. அட நீங்க டிஸ்னியோட ‘ஹாப்பலம்ப்’ இன்னும் பாக்கலையா? அந்த குட்டியானை என்ன குதி போடும் தெரியுமா?

    13. அட ஆமாம்.

    14. அப்படியா? ஏன்?

    புத்தாண்டு நல்வாழ்த்துகள் பகீ.

    யோகன் ஐயா. உங்கள் பதிவினை அறிமுகப்படுத்தினார். கூகுள் ரீடரில் உங்கள் பதிவினை இட்டிருக்கிறேன். அதனால் உங்கள் பதிவுகள் எல்லாவற்றையும் படித்துவிடுகிறேன். எப்போதாவது தான் பின்னூட்டம் இடுகிறேன்.

  2. குமரன் (Kumaran) சொல்லுகின்றார்: - reply

  3. பகீ சொல்லுகின்றார்: - reply

    குமரன் வருகைக்கும் உங்கள் சிறந்த பின்னூட்டத்திற்கும் நன்றி. கூகிள் ரீடர் பற்றிக் கூட ஒரு பதிவிடவேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்துள்ளேன்.

    அந்தக் காலத்தில் பெண்கள் புருவத்தை மழித்துவிடுவது தான் அழகு என்று நினைத்தார்களாம். இது இப்போது தான் எனக்கு தெரியும்.

    புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி.

  4. பகீ சொல்லுகின்றார்: - reply