Cuil புதிய தேடுபொறி – கூகிளுக்கு போட்டியா??

இணையத்தில் தேட பல தேடுபொறிகள் இருந்தாலும் (Yahoo, Live) பலரது தெரிவாகவும் இருப்பது கூகிள் தேடுபொறிதான். இப்பொழுது அதற்கு போட்டியாக cuil எனும் தேடுபொறி வெளிவந்திருக்கின்றது.

cuil logo

ஏறத்தாள கூகிளை விட 120 பில்லியன் இணையப்பக்கங்களில் அதிகமாக அதாவது 1.12 டிரில்லியன் பக்கங்களில் தேடலை மேற்கொள்ளுவதாக இந்த தேடுபொறி அறிவித்துள்ளது. (கூகிள் 1 டிரில்லியன் பக்கங்களில் தேடுதலை செய்வதாக சில நாட்களின் முன் அறிவித்திருந்தது.)

இந்த தேடுபொறியினை மற்றைய, “தினமும் தோன்றும்” தேடுபொறிகள் போல எண்ணிவிட முடியாத அளவிற்கு இரண்டு பிரதான காரணங்கள் இருக்கின்றன.

  • ஒன்று இந்த தேடுபொறியினை உருவாக்கி இருப்பவர்கள் முன்னைநாள் கூகிள் பணியாளர்கள்
  • இரண்டு இவர்கள் இதில் ஏற்கனவே 33 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிட்டிருக்கிறார்கள்.

ஆனால் இது இன்னமும் பீற்றா வடிவில் தான் இருக்கிறது. தேடும் சொல்லிற்கேற்ப related category இனை காட்டுவது இதன் சிறப்பம்சங்களில் ஒன்று.

Cuil related category

இத்தேடுபொறியும் கூகிளை போலவே மிக வேகமாக தேடுவதாக எனக்கு படுகிறது. ஆனா தமிழில தேடினா ஒரு பதிலும் இல்லை.

cuil search result

குறிச்சொற்கள்: , ,

8 பின்னூட்டங்கள்

  1. புருனோ சொல்லுகின்றார்: - reply

    என் கருத்துக்கள்

    http://payanangal.blogspot.com/2008/07/cuil-and-google-comparison.html

  2. பகீ சொல்லுகின்றார்: - reply

    புருனோ உங்கள் ஒப்பீடு தொடர்பாக எனக்கு அவ்வளவு திருப்தி இல்லை. பிறக்கவே இல்லை என்று சொல்கின்ற நீங்கள் எவ்வாறு அவர்கள் சரிஇல்லை என்று சொல்ல முடியும்??

    நான் என் பதிவில் சொல்லி இருப்பது போன்று அவர்கள் முதலிட்டிருக்கும் முதல் சாதாரணமானதல்ல.

    அவர்கள் கூகிளை விட 120 பில்லியன் பக்கங்களையே அதிகமாக தேடுவதாக கூறி இருக்கிறார்கள். மூன்று மடங்கல்ல.

    இப்பவே எது நல்லது எண்டு சொல்லாமல் பாப்பம் கொஞ்ச நாள் பொறுத்து.

  3. Nytryk சொல்லுகின்றார்: - reply

    eththanai “Cuil” hal vanthalum Google thorkkathu!

  4. பகீ சொல்லுகின்றார்: - reply

    Nytryk உண்மைதான், கூகிளை தோற்கடிக்கிறது கஸ்டம்தான்.

  5. புருனோ சொல்லுகின்றார்: - reply

    //பிறக்கவே இல்லை என்று சொல்கின்ற நீங்கள் எவ்வாறு அவர்கள் சரிஇல்லை என்று சொல்ல முடியும்??//

    பிறக்காத அவர்கள் தாங்கள் 20 வயதாகிவிட்டதாக கூறுவது தான் சரியில்லை என்று கூறினேன். மற்றப்படி அவர்களின் முயற்சிகளையும் குறிப்பிட்டுள்ளேன் 🙂

  6. புருனோ சொல்லுகின்றார்: - reply

    //அவர்கள் கூகிளை விட 120 பில்லியன் பக்கங்களையே அதிகமாக தேடுவதாக கூறி இருக்கிறார்கள். மூன்று மடங்கல்ல.//

    அவர்களின் பக்கதில் இருந்து – Cuil searches more pages on the Web than anyone else—three times as many as Google and ten times as many as Microsoft.

  7. Abdulla சொல்லுகின்றார்: - reply

    Intha oru search avargal nilayai kaatti vidum
    http://www.cuil.com/search?q=cobol

  8. SEO சொல்லுகின்றார்: - reply

    புதிதாக தொடங்கியுள்ள ஒவ்வொரு இணைய தளத்தையும் தேடு தளத்தில் பதிய வேண்டும், பதிந்த பிறகு அந்த தேடு தளங்கள் (கூகிள், யாஹூ , லைவ் போன்றவை) பார்வையிட்டு ஏற்றுக்கொள்ளும், இந்த வேலைகள் செய்து முடிக்க அறை மாதம் முதல் ஒன்றரை மாதம் பிடிக்கும், ஆனால் cuil தேடு தளத்தில் நீண்ட நாள் எடுத்து கொள்கிறது, நீண்ட நாட்களாகியும் ஏற்றுக்கொள்ளவில்லை (4 மாதம் கலாம் ஆகியும்) (இதற்கும் சரியான பதிலும் கிடைக்கவில்லை- Beeta Version என்பதாலோ)

    கூகிள்கு போட்டி கூகிள் மட்டுமே.

    இன்னொரு தகவல் cuil தளத்தை குயில் என்று சொல்ல கூடாது, கூழ்-cool (குளிர்ச்சி) என்று சொல்ல வேண்டும்.