buddypress 1.5, bbpress 2.0 வெளியானது
Buddypress 1.5
buddypress என்பது வேஸ்புக் போன்ற ஒரு சமூக இணையத்தளத்தை இலகுவாக உருவாக்கிக்கொள்ள உதவும் ஒரு இணைய மென்பொருள் ஆகும். வேர்ட்பிரஸின் ஒரு செருகியாக இருக்கும் இது நீண்டகாலமாக பதிப்பு 1.2 இலிருந்துவந்து இப்போது புதிய பதிப்பான 1.5 வௌியிடப்பட்டுள்ளது.
குறிப்பிடத்தக்க புதிய வசதிகள்
1. வேர்ட்பிரசுடன் சிறந்த ஒத்திசைவு மற்றும் இலகுவாக நிறுவிக்கொள்ளல். (trunk பதிப்பு 1.3 இனை பயன்படுத்தியவர்களுக்கு இது புதிதல்ல)
2. புதிய வார்ப்புரு – மிக அழகானதொரு புதிய வார்ப்புரு. இப்போது இலகுவாக கிடைக்கும் படிபிரஸ் வார்ப்புருக்கள் எல்லாவற்றையும் விட சிறந்தது என்று சொல்லலாம்.
3. மிக இலகுாவன profile field UI.
4. மீள வடிவமைக்கப்பட்ட Activity stream.
5. Photo Gallery மற்றும் புகைப்படங்களை சுவரில் தரவேற்ற முடிதல்.
இவற்றை விட நூற்றுக்கணக்கான பிழைகளும் இப்பதிப்பில் திருத்தப்பெற்றுள்ளன.
bbPress 2.0
bbPress என்பது உங்கள் வேர்ட்பிரஸ் தளத்தில் ஒரு மன்றம் (forum) ஒன்றினை இலகுவாக உருவாக்கிக்கொள்ள உதவும் ஒரு செருகி. பதிப்பு 2.0 இற்கு முன்னர் இது ஒரு செருகியாக இல்லாமல் தனித்தியங்கும் ஒரு மென்பொருளாகவே இருந்தது.
இப்பொழுது இது ஒரு செருகியாக மாற்றம் பெற்றிருப்பதால், மிக இலகுவாக வேர்ட்பிரஸுடன் இணைத்துக்கொள்ள முடியும்.
படிபிரஸ் மற்றும் பிபிபிரஸ் தொடர்பாக உங்களுக்கு ஏதும் கேள்விகள் இருப்பின் இங்கு வாருங்கள்.
நானும் இப்பத் தான் வேட் பிரசில் கொஞ்சம் ஆர்வம் செலுத்துகிறேன்..
அன்புச் சகோதரன்…
ம.தி.சுதா
7 ம் அறிவு பாடலில் ஹரிஷ் ஜெயராஜ் அரைத்தமாவும், சுட்ட வடையும்
நல்ல தகவல்கள் நன்பரே!!
buddypress blogger இல் வேலை செய்யுமா? இதற்கு இணையானது வேறு உண்டா
இல்லை. Buddypress ஒரு வேர்ட்பிரஸ் செருகி. அதுவும் உங்கள் வழங்கியில் மட்டுமே நிறுவ முடியும். நீங்கள் Ning இனை பயன்படுத்தி பார்க்கலாம்.