சரி அப்ப ஊரோடிக்கு என்ன நடந்தது??
நீங்க தனித்தளத்தில பதியிறனிங்கள் எண்டா, அல்லது புதுசா தனித்தளத்தில பதியப்போறீங்கள் எண்டா இந்த பதிவு உங்களுக்கு உபயோகமா இருக்கும். இது மிகவும் தொடக்க நிலை பயனாளர்களுக்கானது.
இது வேர்ட்பிரஸ் மட்டும் என்று மட்டுமல்ல எந்த ஒரு தரவுத்தளத்தை பயன்படுத்தும் இணையத்தளத்திற்கும் பொதுவானது.
நான் வேர்ட்பிரஸை 2007 ஆனியில் நிறுவி ஊரோடியை தனித்தளத்திற்கு கொண்டு வந்தபோதிலிருந்து தரவுத்தளம் தொடர்பான எந்த வித கவனமும் எடுக்காததோடு இரண்டு கிழமைக்கு ஒருமுறை Back-up எடுத்துக்கொண்டிருந்தேன். ஆனால் வேர்ட்பிரஸ் 2.5 வந்து அதனை மேம்படுத்தியபோதுதான் வந்தது வில்லங்கம்.
வேர்ட்பிரஸை நிறுவிய காலத்தில் இருந்து அது தமிழிற்கு ஒவ்வாத ஒரு ஒருங்குகுறியில் இருந்து வந்துள்ளது. நான் தரவுத்தளத்தை மேம்படுத்திய போது அனைத்து தரவுகளும் பூச்சிகள் பூச்சிகளாக மாறிவிட்டன.

எனவே நீங்கள் இதுவரைக்கும் உங்கள் தரவுத்தளத்தை பற்றி கவனிக்காமல் விட்டிருந்தால் அதனை கவனித்து கீழே காட்டப்பட்டுள்ளது போன்று யுனிகோட் ஒருங்குகுறிக்கு மாற்றி விடுங்கள். மாற்றாவிட்டால் நீங்கள் செய்கின்ற எந்த ஒரு Bacu-up ம் உங்களுக்கு பயனளிக்காது.

சரி உங்களுக்கு மாற்றத்தெரியாவிட்டால், உங்கள் தரவுத்தள மேலாண்மை மென்பொருளை திறந்து கொள்ளுங்கள். பொதுவாக phpMyAdmin மிக இலகுவானது.
கீழே காட்டப்பட்டது போன்று மாற்றுவதற்கு தேவையான Field களை தெரிவுசெய்து Edit buttn இனை அழுத்துங்கள்.

பின்னர் உங்களுக்கு தேவையான வாறு யுனிக்கோட் ஒருங்கு குறிக்கு மாற்றிக்கொள்ளுங்கள். அவ்வளவுதான்.
