வேர்ட்பிரஸ்

வேர்ட்பிரஸில் Custom fields

இப்ப வேரட்பிரஸில ஒரு புளொக் இருக்குது இருந்தாலும் அதில இருக்கிற வசதிகள் அவ்வளவா காணாது. இன்னும் கொஞ்சம் இப்படி இருந்தா நல்லா இருக்கும் எண்டு யோசிக்கிறாக்களுக்காகத்தான் இந்த Custom fields இருக்குது. இதை பாவிச்சு வேர்ட்பிரஸை ஒரு CMS அளவுக்கு மேம்படுத்த முடியும். இலகுவாச் சொல்லவேணும் எண்டால், உங்கட ஒவ்வொரு பதிவிலயும் அல்லது ஒரு குறிப்பிட்ட பிரிவில இருக்கிற ஒவ்வொரு பதிவிலயும் நீங்கள் ஒரு குறிப்பிட்ட விடயத்தை (ஒரு படமாக இருக்கலாம்) சேர்க்க விரும்பினால் அதுக்கு இலகுவான வழி இந்த Custom field தான்.

சரி அது எப்பிடி பயன்படும் எண்டு சின்ன உதாரணத்தால பாப்பம். புதிய பதிவொன்றை எழுதிற பக்கத்துக்கு போய் கீழ போனால் இப்பிடி இருக்கும்.

அதில அந்த + ஐ அழுத்தினால் நீங்களும் Custom field ஐ சேக்கலாம். அங்க key மற்றும் value எண்டு இரண்டு வசயம் இருக்கு. இதில key எண்டது உங்கட field இன்ர பெயர். value அதின்ர பெறுமதி.

உதாரணத்துக்கு ஒரு field சேர்க்கப்பட்டிருக்கிறதை பாருங்கோ. இதில key – oorodi, value – This is a new custom field.

இப்ப இதை என்னெண்டு முன்பக்கத்தில தெரிய வைக்கிறது.

உங்கட single.php கோப்பை திறவுங்கோ (எங்க இருக்கும் எண்டு உங்களுக்கு தெரியும்தானே?). அதில

[php]<?php if (have_posts()) : while (have_posts()) : the_post() ; ?>[/php]

இப்பிடி இருக்கிற வரியை தேடிக்கண்டுபிடிச்சு

[php]<?php if (have_posts()) : while (have_posts()) : the_post(); $ooro = get_post_meta($post->ID, ‘oorodi’, $single = true);?>[/php]

இப்படி மாத்துங்கோ. இதில இருக்கிற மாற்றத்தை பாத்தே என்ன நடந்திருக்குது எண்டு உங்களால விளங்கிக்கொள்ள முடியும். அடுத்ததா

[php]<?php if($oorodi !== ”) { ?>
<p><?php echo $ooro; ?></p>
<?php }else { echo ”; } ?>[/php]

எண்ட வரிகளை

[php]<?php the_content(‘Continue reading &raquo;’); ?>[/php]

எண்ட வரிக்கு மேல சேர்த்து விடுங்கோ.

அவ்வளவு தான்.

இப்ப உங்கட பதிவு எப்பிடி இருக்கும் எண்டு பாருங்கோ (தனிப்பக்கத்தில், ஏனெனில் single.php இனை தான் மேம்படுத்தி உள்ளோம்).

இதில வட்டம் போட்டு காட்டி இருக்கிறது Custom field இன் வெளிப்பாடு. உங்களுக்கு விரும்பினா ஒவ்வொரு பதிவுக்கும் ஒவ்வொரு படத்தை சேக்க இதே நிரல்களை பயன்படுத்த முடியும்.

13 மாசி, 2008

இலகுவாக தமிழ் நாட்காட்டியை புளொக்கர், வேர்ட்பிரஸில் சேர்த்தல்.

நேற்று இங்கு நான் தந்த நாட்காட்டியை வேர்ட்பிரஸ் மற்றும் புளொக்கரில் எவ்வாறு இணைப்பது என்று விளக்கமாக எழுதவில்லை. அதற்காகத்தான் இந்தப்பதிவு.

நீங்கள் புளொக்கரை பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் Layout பக்கத்திற்கு செல்லுங்கள். அங்கு Add a page element இனை சொடுக்கி வரும் வின்டோவில் HTML/Javascript இனை சொடுக்குங்கள். இப்போது content இல் கீழிருக்கும் HTML துண்டை சேர்த்துவிடுங்கள்

அவ்வளவுதான்.

<object classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=9,0,0,0" width="220" height="150" id="today" align="middle">
<param name="allowScriptAccess" value="sameDomain" />
<param name="allowFullScreen" value="false" />
<param name="movie" value="http://www.oorodi.com/fla/today.swf" />
<param name="quality" value="high" />
<param name="bgcolor" value="#ffffff" />

</object>

நீங்கள் வேர்ட்பிரஸ் பாவனையாளராக இருந்தால் கீழிருக்கும் plugin இனை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.

[download#8#image]

பின்னர் widget பக்கத்திற்கு சென்று Tamil Calendar இனை இழுத்து வந்து உங்கள் sidebar இல் விட்டுவிடுங்கள் அவ்வளவுதான்.
உங்கள் அடைப்பலகை widget இனை ஏற்காவிடின் கீழ்வரும் வரியை plugin இனை நிறுவிய பின் உங்கள் sidebar.php இல் சேர்த்து விடுங்கள் அவ்வளவுதான்.

<?php getTamilCalendar(); ?>

வேற சந்தேகம் இருந்தா பின்னூட்டத்தில கேளுங்க.

30 தை, 2008

புளொக்கரா வேர்ட்பிரஸா???

ஏறத்தாள பத்து மாதமா புளொக்கரில இருந்திட்டு இப்ப புது வீட்டுக்கு வேர்ட்பிரஸின்ர உதவியோட வந்திருக்கிறன். அதனால இப்ப ஒரு முக்கிய வேலை இருக்கு புதுசா பதியிற ஆக்களுக்கு அல்லது புதுசா புது வீட்டுக்கு போப்போற பதிவர்களுக்கு என்ர பார்வையில எது நல்லா இருக்குது எண்டு சொல்ல வேணும்.
ரவிசங்கர் ஒரு பதிவில சொல்லியிருந்தார் “இப்பவும் வேர்ட்பிரஸ் தான் சிறப்பாயிருக்கு” (வேற வசனநடையை பாவிச்சிருந்தார் எண்டு நினைக்கிறன்). சில புளொக்கர் பாவனையாளர்களுக்கிடையில அது சிலவேளைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க கூடும். ஆனா அதில ரவிசங்கர் செய்த முக்கியமான தவறு இலவச புளொக்கரை (something.blogspot.com) இலவசமா கிடைக்கிற வேர்ட்பிரஸ் (something.wordpress.com) உடன் ஒப்பிட்டிருக்க வேண்டுமே தவிர, தனது வழங்கியில் நிறுவப்பட்டிருக்கின்ற வேர்ட்பிரஸ் உடன் ஒப்பிட்டிருக்கக்கூடாது (அது இலவசமே என்றாலும்).

அப்ப என்ன சொல்லவாறன். புளொக்கர் நல்லம் எண்டோ?? இல்லை வேர்ட்பிரஸ்தான் நல்லம் எண்டோ?? இரண்டிலயும் இருக்கற நல்ல விசயங்களை சொல்லுறன். நீங்கள்தான் அதை முடிவெடுக்க வேணும். இங்கு குறிப்பாக சொல்லப்பட வேண்டியது என்னவெனில் புளொக்கர் பெரும்பாலும் கீழைத்தேய நாட்டினராலும் வேர்ட்பிரஸ் பெரும்பாலும் மேலைத்தேய நாட்டினராலும் பயன்படுத்தப்படுகின்றது. (இங்கு வேர்ட்பிரஸ் என குறிப்பிடப்படுவது புளொக்கர் போல நாங்கள் பூரண இலவசமாக பெற்றுக்கொள்ளும் வலைப்பதிவு)

புளொக்கர், வேர்ட்பிரஸ் இரண்டுமே நீண்டகாலத்துக்கு முதல் தொடங்கப்பட்டு இண்டைக்கு வரைக்கும் போட்டி போட்டுக்கொண்டிருக்கின்ற புளொக்கிங் சேவை வழங்குனர்கள். இருந்தாலும் புளொக்கரை கூகிள் வாங்கின கையோட அதனுடைய பயனாளர்களின்ர எண்ணிக்கை அதிகரிச்சதென்னவோ உண்மைதான். பொதுவாச் சொல்லுறதெண்டா புளொக்கர் வேர்ட்பிரஸை விட அதிக வசதிகளை கொண்டது. நீங்கள் ஒரு அடைப்பலகையை தேடினா வேர்ட்பிரஸைவிட புளொக்கருக்கு அதிகமானவற்றை கண்டுபிடிக்க முடியும். அத்தோட புளொக்கர் உங்களோட அடைப்பலகையில உங்களுக்கு பூரணமான அனுமதியை தருகிறது. அத்தோட நீங்கள் உங்களோட சொந்த அடைப்பலகையை வடிவமைத்துக்கொள்ளவும் புளொக்கர் அனுமதிக்கின்றது. வேர்ட்பிரஸில உங்களால அவ்வாறு செய்துகொள்ள முடியாது. இது பாதுகாப்பு தொடர்பான சில கரிசனைகளையும் கொண்டது.

மற்றப்பக்கத்தில பாத்தா, வேர்ட்பிரஸ் என்னெல்லாம் செய்யவிடுதோ அதெல்லாம் மிகவும் இலகுவாக செய்யக்கூடியவையும் உங்களுக்கு எந்தவிதமான கணனி மொழி அறிவும் தெவைப்படாது. புளொக்கரிலயும் அது இப்ப சாத்தியப்பட்டாலும், அது வேர்ட்பிரஸ் அளவிற்கு சுகமானது அல்ல. உங்களுக்கு சிறதளவேனும் HTML மற்றும் CSS தெரிந்திருந்தால் மட்டுமே உங்களால் சிறந்த வெளிப்பாடொன்றை பெற்றுக்கொள்ள முடியும். வேர்ட்பிரஸ் அழகான மிக இலகுவான இடைமுகப்பை கொண்டது அதேவேளை நீங்கள் உங்கள் வலைப்பதிவின் HTML மீது சில வேலைகளை செய்ய வேண்டுமென்றால் அதற்கு புளொக்கர் தான் தீர்வாக முடியும்.

புளொக்கர் இணையத்தில் மிகுந்த ஆதிக்கம் செலுத்துகின்ற கூகிளின் ஒரு பகுதியாக இருப்பதனால் வேர்ட்பிரஸினால் தனியாக அதனுடன் போட்டிபோட முடியாது.

பின்னூட்டங்கள் தொடர்பில் புளொக்கரை விட வேர்ட்பிரஸ் அதிக வசதிகளை கொண்டுள்ளது. அதனால் spam control என்பதை இங்கு இலகுவாக செயற்படுத்தக்கூடியதாக உள்ளது. ஒரு முறை அனுமதிக்கப்பட்ட பயனாளர் தொடர்ந்து பின்னூட்டமிட முடியும் என்பது இங்குள்ள சிறந்த ஒரு முறைமையாகும்.

இங்கு இன்னுமொரு விடயம் என்னெவெனில், வேர்ட்பிரஸில் ஒரு வலைப்பதிவு ஒருவருக்கு மட்டுமே உரியதாக இருக்க முடியும். ஆனால் புளொக்கரில் நாங்கள் எத்தனை பேர் சேர்ந்துகூட ஒரு வலைப்பதிவை வைத்திருக்க முடியும் (வலைச்சரம், சற்றுமுன் போல).

வேர்ட்பிரஸை விட புளொக்கர் முன்னமே ஆரம்பிக்கப்பட்டு விட்டதால், வேர்ட்பிரஸினை விட புளொக்கருக்குரிய resources இணையத்தில் ஏராளமாக கிடைக்கின்றன. அத்தோடு அவை புளொக்கரை மேன்மைப்படுத்தி காட்டி நிற்கின்றன.

என்னளவில் வேர்ட்பிரஸைவிட புளொக்கரே சிறந்ததாக இருக்கின்றது. அதன் வெளிப்படைத்தன்மை மற்றும் எனது “நோண்டிப்பார்த்தலுக்கு” அதுவே இலகுவானதாக இருக்கின்றது.

3 ஆடி, 2007