இலகுவாக இணையத்தளங்களை உருவாக்க Leeflets

நிலையான இணையத்தளங்களை வடிவமைப்பவர்கள் பொதுவாக HTML மற்றும் CSS மொழியினைக் கொண்டு இணையத்தளங்களை வடிவமைத்து வழங்கியினுள் தரவேற்றிக் கொள்ளுவார்கள். இதில் பொதுவாக ஏற்படுகின்ற சிக்கல், அதில் இருக்கும் உள்ளடக்கத்தை மாற்றுவதென்றால், மீளவும் அந்த HTML கோப்புக்களை முழுவதுமாக தொகுத்து தரவேற்றிக் கொள்ளல் வேண்டும்.

இதனால் பொதுவாக நிலையான இணையத்தளங்களை வடிவமைக்கின்ற போது நான் பல திறமூல இணைய மென்பொருள்களை பயன்படுத்துவதுண்டு. இப்படியானதொன்றுதான் புதிதாக வெளிவந்திருக்கும் Leeflets.

leeflets-logo

Leeflets தரவுத்தளம் ஒன்றினை பயன்படுத்துவதில்லையாகையால், மிகவேகமாக இயங்கக்கூடியதென்பதோடு தளத்தின் பாதுகாப்பு பற்றியும் நீங்கள் பெரிதாய் கவலைப்படத்தேவையில்லை. இலகுவாக வார்ப்புருக்களை உருவாக்கிக் கொள்ள முடிவதும் இதன் சிறப்பாகும்.

leeflets-edit

24 மார்கழி, 2013

Dropplets இலகு வலைப்பதிவு மென்பொருள்

உங்கள் வலைப்பதிவுகளை இலகுவாக உருவாக்கிக்கொள்ளவும் நிருவகிக்கவும் வந்திருக்கின்றது இந்த Dropplets எனப்படுகின்ற இணைய மென்பொருள். உங்கள் வழங்கியில் வினாடியில் நிறுவிக்கொண்டு வலைப்பதிய ஆரம்பித்து விடலாம்.

தரவுத்தளத்தினை பயன்படுத்தாது Markdown கோப்புக்களை பயன்படுத்துவதானால், உங்கள் வலைப்பதிவு வேகமாக இயங்குவதுடன் வழங்கியும் பெரிதளவாக வளங்களை பயன்படுத்தாது.

இதன் வசதிகள்

1. இலகுவாக நிறுவிக்கொள்ளலாம்.
2. வார்ப்புருக்களை வடிவமைப்பது மிக மிக இலகுவானது.
3. இடுகைகளை markdown syntax இனை பயன்படுத்தி எழுதுவதனால், இலகுவாக எழுத முடிவதுடன், இலகுவாய் வெளியிடவும் முடியும்.

கீழே நிருவாக முகப்பின் திரைவெட்டு. உங்கள் Markdown கோப்பை அந்த நீர்த்துளியினுள் இழுத்து விட்டீர்களானால் உங்கள் பதிவு வெளியிடப்பட்டுவிடும்.

மேலும் தகவல்களுக்கும் தரவிறக்கவும் : http://dropplets.com

dropplets

20 சித்திரை, 2013

LibreOffice 4.0 வெளியானது

மைக்ரோசொவ்ற் ஒவ்வீஸ் மென்பொருள் தொகுதிக்கு இணையான இலவசமான மென்பொருள் தொகுப்புக்களில் ஒன்று LibreOffice. இம்மென்பொருள் தொகுப்பின் நான்காவது பதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

img_slider_1

இப்பதிப்புடன் கூடவே அன்ரொயிட் இற்கான ரிமோட்கொன்ரோல் மென்பொருள் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

libreoffice-impress-android_thumb

மேலும் அறிந்து கொள்ளவும் தரவிறக்கவும்: http://www.libreoffice.org

13 மாசி, 2013